ஒரேயொரு நாவல் எழுதி இலக்கிய உலகை வளர்த்த ஆசிரியர்கள்

 

ஒரேயொரு நாவலை மாத்திரம் எழுதிய பிரபல எழுத்தாளர்களும் அவற்றை பற்றிய சிறு குறிப்பையும் இன்று உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம். இந்த நாவல்கள் உலக இலக்கியத்தை வளர்க்க பெரும் உதவியாக இருந்தன. இலக்கிய உலகத்தின் எழுத்துக்களை நேசிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகமாக இந்த புத்தகங்களை லைபீ தமிழ் வாசகர்களான உங்களிடம் அறிமுகப்படுத்த விரும்புகிறோம்.

 

 எமிலி ப்ரொண்டே

“வதரிங் ஹைட்ஸ்/ Wuthering Heights” இந்த புத்தகம் பற்றி தெரியாத இலக்கியவாதிகள் யாரும் இருப்பது சந்தேகம்தான். காதல் மற்றும் வெறுப்பு பற்றி இவ்வளவு அழகான புத்தகத்தை யாரால் எழுத முடியும். ப்ரொண்டே குடும்பம் முழு இலக்கிய உலகையும் கவர்ந்த ஒரு குடும்பமாக மாறியது. ஏனென்றால், ப்ரான்ட் குடும்பம் மூன்று திறமையான எழுத்தாளர்களை உருவாக்கி சிறு வயதிலேயே உலகை விட்டு பிரிந்ததே அதற்கு காரணம். எமிலி ப்ரொண்டே ஒரு புத்தகத்தையும் எழுதினார். அவ்வளவுதான் ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகுதான் இந்த புத்தகம் மிகவும் பிரபலமானது.

 

 மார்கரெட் மிட்செல்

“கொண் வித் தி விண்ட்/ Gone with the Wind” புத்தகம் நினைவில் இருக்காவிட்டாலும் படம் நினைவில் இருக்கும். உள்நாட்டுப் போரின்போது வாழ்ந்த ஸ்கார்லெட் ஓ’ஹாராவின் கதை மார்கரெட் மிட்செல்லால் இந்த நாவலில் அற்புதமாகத் தழுவப்பட்டு உள்ளது. அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டது. புத்தகம் மிகவும் பிரபலமடைந்து, புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு கூடுதல் போனஸ் கொடுத்தது. துரதிஷ்டவசமாக பின்னர் அவர் ஒரு கார் விபத்தில் இறந்தார்.

 

அண்ணா செவெல்

பிளாக் பியூட்டி எனும் இந்த புத்தகமும் முன்பெல்லாம் மிகவும் பிரபலமானது. இந்த புத்தகமும் ஒரு தனிப்பட்ட கருத்தை உள்ளடக்கிய ஒரு ஆவணம். இந்த புத்தகம் ஒரு விலங்கின் சுயசரிதை என எழுதப்பட்டுள்ளது. இந்த கதையின் மூலம் விலங்குகளை உணர்ச்சியுடன் பார்க்க மக்களுக்கு கற்பிக்க கதையாசிரியர் விரும்பியிருக்கலாம். இந்த புத்தகத்தைப் படிக்கும்போது ​​சில இடங்களில் அவர்கள் அனுபவிக்கும் அதிர்ச்சிகளைக்கூட துல்லியமாக விளங்க முடியும். இலங்கையில் இந்த புத்தகத்தை சோமா டி பெரேராவும் சிங்கள மொழியில் அதே பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

 

போரிஸ் பாஸ்டெர்னக்

ரஷ்ய எழுத்தாளரான போரிஸ் தனது டாக்டர் ஷிவாகோ புத்தகத்திற்காக நோபல் பரிசு வென்றார். அவர் எழுதிய ஒரே புத்தகம் “டாக்டர் ஷிவாகோ”. ஆனால் புத்தகம் மிகவும் பிரபலமானது. புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட படமும் மிகவும் பிரபலமானது.

 

சில்வியா ப்ளாத்

சில்வியா பிளாட் ஒரு கவிஞராக அறியப்படுகிறார். Daddy, Ariel போன்ற அவரது கவிதைகள் இன்றும் பிரபலமாக உள்ளன. அவரது ஒரே இலக்கியப் படைப்பு அவரது ஒரே நாவலான தி பெல் ஜார் எழுதுவதாகும். விக்டோரியா லூகாஸ் என்ற புனைப்பெயரில் அவர் புத்தகத்தை எழுதினார். துரதிஷ்டவசமாக இந்த நூலாசிரியர் தனது முப்பது வயதில் இறந்தார்.

 

ஸ்கார் வைல்ட்

ஒஸ்கார் வைல்ட் மிகவும் பிரபலமான ஐரிஷ் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். 1890இல் லண்டனில் சிறந்த நாடக ஆசிரியராகவும் இருந்தார். அவர் எழுதிய சிறுகதைகளிலிருந்து, “ஹேப்பி பிரின்ஸ்” மிகவும் பிரபலமானது. துரதிஷ்டவசமாக அவர் அகால மரணமானார். அவரது ஒரே நாவல் தி பிக்சர் ஒஃப் டோரியன் கிரே ஆகும். இந்த புத்தகம் அப்போது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

எட்கர் ஆலன் போ

இவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர். ஆலன் போ எழுதிய பல கதைகளைப் போலவே அவரது மரணமும் ஒரு மர்மமாகும். அவரது மரணம் திட்டமிடப்பட்டதா அல்லது இயற்கையான மரணமா என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. எட்கர் ஆலன் போ ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரது ஒரே நாவல் நாந்துக்கெட்டின் ஆர்தர் கார்டன் பிம்மின் கதை. இது மிகவும் பிரபலமானது.