உலகின் மிக அழகான ராணிகள் மற்றும் இளவரசிகள்

 

அழகை விரும்பாதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை. இன்று நாம் ஒரு அழகான தலைப்பைப் பற்றி பேசப் போகிறோம். இன்றைய நவீன யுகத்தில் உள்ள மிக அழகான ராணிகள் மற்றும் இளவரசிகளைப் பற்றிய பதிவு இதுவாகும்.

 

ரானியா ராணி (Queen Rania)

தற்போதைய ஜோர்டான் மன்னர் அப்துல்லாவின் மனைவியான இவர் பாலஸ்தீனிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண். குவைத்தில் பிறந்த இவர் எகிப்தில் உயர் கல்வியை பூர்த்திசெய்தார். பின்னர் வங்கிகள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களில் பணிபுரிந்தார். இளவரசர் அப்துல்லா அம்மானில் ஒரு இரவு விருந்தில் இவரை சந்தித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜூன் 10, 1993 அன்று திருமணம் செய்து கொண்டனர். 1999இல் அப்துல்லா ஜோர்டானியனாக முடிசூட்டப்பட்டார், இப்போது இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சமூக ஊடக நெட்வொர்க்குகளில் மிகவும் சுறுசுறுப்பான நபராக இருக்கும் அவர், ஜோர்டான் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அத்துடன் முழு உலகத்தின் ஆரோக்கியத்திற்கும் நுண் நிதியுதவிக்கும் தீர்வுகளை கண்டறிய தீவிரமாக பங்களிப்பு செய்கிறார்.

 

ளவரசி மேடலின்

இவர் 1982ஆம் ஆண்டில் பிறந்தார். குஸ்டாவ் XVI மன்னர் மற்றும் தற்போதைய ஸ்வீடன் மன்னர் சில்வியா ராணி ஆகியோரின் குடும்பத்தின் இளைய உறுப்பினர். ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், குதிரை சவாரி செய்வதை இரசிக்கிறார். 2013ஆம் ஆண்டில் அவர் அமெரிக்க கிறிஸ்டோபர் ஓ’நீலை மணந்தார். இவர்கள் தற்போது புளோரிடாவில் தங்கள் மூன்று குழந்தைகளுடன் வசிக்கிறார்கள்.

 

 இளவரசி சோபியா

ஒரு மொடலாகவும் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவராகவும் பிரபலமான சோபியாவின் வாழ்க்கைக் கதை ஒரு திரைப்படக்கதைக்கு ஒத்திருக்கிறது. ஏனென்றால், 2010இல் அவர் ஸ்வீடன் மன்னரின் ஒரே மகனான இளவரசர் கார்ல் பிலிப்பை மணந்தார். அவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2021ஆம் ஆண்டில் இவர்கள் மற்றொரு குழந்தையை எதிர்பார்க்கின்றனர். இவர் சமூகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துகிறார். அதற்கான அடித்தளத்தை தனது கணவருடன் இணைந்து அமைத்துள்ளார்.

 

ராணி மாக்சிமா

அர்ஜென்டினாவில் பிறந்த இவர் அர்ஜென்டினாவின் மிக சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒருவராக இருந்தார். அமெரிக்காவில் தனது உயர் கல்வியை முடித்த பின்னர் ஸ்பெயினில் கடமையில் இருந்தபோது அலெக்சாண்டர் என்ற மனிதரை சந்தித்தார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் நெதர்லாந்தின் மகுட இளவரசர் என்று அந்த நபர் அவளிடம் சொன்னபோது, ​​அவர் வெறுமனே நகைச்சுவைக்கு சொல்லும் பொய் என்று நினைத்தார். ஆனால் அது நகைச்சுவையாக இல்லை. இருவரும் 2001இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தற்போது இரண்டு குழந்தைகளின் பெற்றோராக உள்ளனர். மேலும் 2013ஆம் ஆண்டில் இருவரும் நெதர்லாந்தின் அரசர் மற்றும் ராணியாக மாறினர்.

 

ராணி லெடிசியா

இவர் தொழிலால் ஒரு பத்திரிகையாளராக இருந்தார் மற்றும் ஸ்பெயினில் ஓரளவு பிரபலமான நபராக இருந்தார். 1998ஆம் ஆண்டில் 10வருட டேட்டிங்கிற்குப் பிறகு அவர் குரேரோ பெரெஸை மணந்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து திருமணம் முறிந்தது. 2003ஆம் ஆண்டில் ஸ்பெயினின் மகுட இளவரசர் பிலிப், லாட்டீசியாவை திருமணம் செய்வதாக அறிவித்தார். இது ஸ்பெயினையும் கத்தோலிக்க திருச்சபையையும் கலங்கப்படுத்தியது. கத்தோலிக்க திருச்சபை விவாகரத்துக்கு ஒப்புதல் அளிக்காததே இதற்குக் காரணம். சர்ச் திருமணத்திற்கு பதிலாக சிவில் திருமணத்தை தேர்வு செய்த அவர்கள் இப்போது இரண்டு பெண் பிள்ளைகளின் பெற்றோராக உள்ளனர்.

 

ஜெட்சன் பெமா

இவர் 2011ஆம் ஆண்டில் பூட்டான் மன்னரை மணந்தார். இதன்படி பூட்டானிய பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால உலகத்தை எதிர்கொள்ளும் கணவரின் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் ஒரு பெண்ணாகக் கருதப்படுகிறார். பூட்டானில் பலதார மணம் சட்டபூர்வமானது என்றாலும், பூட்டான் மன்னர் வேறு யாரையும் எப்போதும் ராணியாக்க முயற்சிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். தற்போது இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

பீட்ரைஸ் போரோமியோ

இத்தாலியில் ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த இவரது குடும்ப உறுப்பினர்கள் வத்திக்கான் மற்றும் பிற முக்கிய இத்தாலிய குடும்பங்களுடன் நெருக்கமான உறவைப் பேணுகிறார்கள். மொனாக்கோவின் ஆட்சியாளரான மன்னர் ரெய்னியர் III இன் மூத்த மகள் இளவரசி கரோலினாவின் மகனான பியர் காசிரகியை மணந்த பிறகு, பல ஐரோப்பிய நாடுகளில் செய்தித்தாள் சப்ளிமெண்ட்ஸில் இவர் தோன்றுவது பொதுவானதாகிவிட்டது. தற்போது இவர்கள் இருவரும் இரண்டு குழந்தைகளின் பெற்றோர்.