இன்று நாம் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் தலைவர்களுக்கு நிழல் தரும் உத்தியோகபூர்வ இல்லங்களைப் பற்றி பேசப் போகிறோம். இந்த பட்டியலில் இருந்து வெள்ளை மாளிகை, பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் ஜனாதிபதி அரண்மனை ஆகியவற்றை நாங்கள் அகற்றியுள்ளோம். காரணம் அவை பற்றி நாம் முன்பு பேசியுள்ளதோடு, பலர் அறிந்த விடயமும் ஆகும்.
பெலீவ் அரண்மனை (Bellevue Palace)
1994 முதல் ஜெர்மனி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக விளங்கும் இந்த அழகான அரண்மனை 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. ரஷ்ய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட இந்த அரண்மனை, முதலாம் உலகப் போர் முடிந்தபின் ஒரு அருங்காட்சியகமாகவும் வெளிநாட்டு அரச தலைவர்களுக்கான இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த அரண்மனை இரண்டாம் உலகப் போரின்போது குண்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பின்னர் மேற்கு ஜெர்மனியின் ஜனாதிபதியின் மேலதிக உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், ஜெர்மனி ஒன்றிணைந்த பின்னர் இந்த அரண்மனை ஜனாதிபதி மாளிகையாக மாறியது.
குவிண்டா டி ஒலிவோஸ் (Quinta de Olivos)
ஆர்ஜென்டினாவில் பல உத்தியோகபூர்வ குடியிருப்புகள் இருந்தாலும் குயின்டா டி ஒலிவோஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை முக்கியமானது. இந்த அரண்மனை ஆர்ஜென்டினா தலைநகரான புவெனஸ் அயர்ஸின் ஆரம்ப காலத்தில் இருந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. முதலில் தனியார் உரிமையாளர்களுக்கு சொந்தமான இந்த மாளிகையை அரசாங்கம் வெளியுறவு அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தியது. பின்னர், அர்ஜென்டினாவின் சர்வாதிகாரி ஜோஸ் பெலிக்ஸ் அதை தனது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தத் தொடங்கினார். அவருடைய வாரிசுகள் அரண்மனையை அபிவிருத்தி செய்ய உழைத்தனர். இன்று, இந்த வளாகத்தில் ஹெலிகொப்டர் ரேஸ் டிராக், ஒரு சிறிய கோல்ஃப் மைதானம் மற்றும் ஒரு தேவாலயம் என்பன உள்ளன.
லொஸ் பினோஸ்(Los Pinos)
முதலில் ஒரு களஞ்சியமாக இருந்த இந்த நிலத்தில் கட்டப்பட்ட இதன் முதல் மாளிகை ஒரு மருத்துவரால் கட்டப்பட்டது. பின்னர் அவர் அரண்மனையை மெக்சிகோவின் பேரரசராக மாறிய மாக்சிமிலியனுக்கு விற்றார். பேரரசருக்கு பின்னர், அரண்மனை அதே மருத்துவரிடம் திரும்ப வந்து சேர்ந்தது. மெக்சிகன் புரட்சியின் போது இந்த மாளிகை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு 1934 முதல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போதைய ஜனாதிபதி மானுவல் லோபஸ் இந்த வீட்டில் வசிக்கவில்லை என்பதால் அதை அவர் பொதுமக்களுக்கான காட்சியகமாக மாற்றியுள்ளார்.
நம்பர் 24, சசெக்ஸ் டிரைவ்
கனடா பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த சிறிய மாளிகையை மணமகனுக்காக 1866 ஆம் ஆண்டில் திருமண நாளில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் கூரியரால் பரிசாக வழங்கப்பட்டது. இரு உரிமையாளர்களுக்கிடையில் உரிமையை மாற்றிய பின்னர் 1951 ஆம் ஆண்டில் இந்த வீடு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த நாட்களில் இந்த வீடு பெரிய புனரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பிரதமரும் அவரது குடும்பத்தினரும் வேறு வீட்டில் வசித்து வருகின்றனர்.
கிரிபில்லி வீடு (Kirribilli House)
இது ஆஸ்திரேலியாவின் பிரதமரின் இரண்டாவது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டாலும் அந்த நாட்டின் பெரும்பாலான பிரதமர்கள் கான்பெராவில் உள்ள அவர்களின் முக்கிய உத்தியோகபூர்வ இல்லமான தி லாட்ஜை விட சிட்னியில் உள்ள கிரிபில்லி ஹவுஸை அதிகம் விரும்புகின்றனர். இந்த வீடு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது முதலில் கவர்னர் ஜெனரலின் ஊழியர்களால் அரசாங்கத்திற்கு சொந்தமான பின்னர் பயன்படுத்தப்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை பொதுமக்களுக்கு திறக்கும் இந்த வீடு ஒரு அழகான சூழலில் அமைந்துள்ளது.
மஹ்லம்பா லோப்ஃபு (Mahlamba Ndlopfu)
முன்னதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதியினால் லிபர்ட்டஸ் என்று பயன்படுத்தப்பட்ட இந்த உத்தியோகபூர்வ இல்லம், நெல்சன் மண்டேலா ஜனாதிபதியான பிறகு பெயர் மட்டுமன்றி வீட்டின் கட்டிடக்கலையும் மாறியது. 1930 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகையை கட்ட ஒரு போட்டி காணப்பட்டது. அதன்பின்னர் இந்த மாளிகையை அதில் வெற்றியாளரான ஜெரார்ட் மோடெக் வடிவமைத்தார்.
இஸ்தானா மெர்டேகா / நெகாரா (Istana Merdeka/ Negara)
இந்த இரண்டு உத்தியோகபூர்வ குடியிருப்புகளையும் அவரது விருப்பப்படி பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக இந்தோனேசியா ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், கட்டிடக்கலை அடிப்படையில் இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த இரண்டு வீடுகளுக்கும் இடையிலான தூரம் சுமார் ஐநூறு அடிகள் மாத்திரமே.