செக்ஸ் லைஃப் பற்றி பேச வேண்டுமா? – கவலை வேண்டாம்

 

செக்ஸ் என்றவுடன் அது கூடாத விடயம் என நினைப்பதோடு பொது வெளியில் பேசவும் தயங்குகின்றனர். செக்ஸ் பற்றிய தவறான புரிதல்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என கூறினால் நம்புவீர்களா? ஆம், பாலியல் கல்வியின் அவசியம் பற்றிய இன்று பலரும் அறிவுறுத்துகின்றமைக்கு காரணம் அதுவே. ஆனால் நாம் இன்று கூட வருவது என்னவென்றால் பேசவேண்டிய இடத்தில் பேசித்தான் ஆகவேண்டும். புதிதாக திருமண உறவிலோ அல்லது காதல் உறவிலோ இருக்கும் உங்களுக்கும் உங்களது துணைக்கும், ஒருவருக்கொருவர் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவது ஒரு பிரச்சினையாக இருக்கலாம். ஜென்டில்மேன் நெவர் கிஸ் அண்ட் டெல் என்பதும் இதற்கு மிகவும் பொருத்தமானது.

ஆனால் திருமணத்திற்கு முன்பே காதல் தொடங்கும் போது ​​ஒரு கட்டத்தில் நீங்கள் செக்ஸ் பற்றி பேச வேண்டும். அதாவது எப்படியும் அன்போடு கலந்த உடலுறவு பற்றி பேசிக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மிகவும் நேர்மறையாக இருக்கும் ஜோடிக்கு இது பெரிய விடயமல்ல. ஆனால் அவ்வளவு நேர்மறையாக ஒளிவுமறைவில்லாத இரண்டு பேருக்கு, செக்ஸ் பற்றி பேசுவதும் உறவைத் தொடங்கிய பின் செக்ஸ் பற்றி பேசுவதும் ஒரு சவாலான விடயம் தான். அந்த சவாலை வெல்ல சில உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்க உள்ளோம்.

 

உறவின் நிலைப்பாடு என்ன?

புதிதாக ஆரம்பமாகிய காதல் உறவின்போது செக்ஸ் பற்றி பேசுவதற்கு முன்பு சிந்திக்க வேண்டிய ஒன்று இருக்கினறது. உங்களது உறவு உண்மையில் எந்த நிலையில் உள்ளது? இதற்கு அர்த்தம் மிகவும் எளிதானது. உடலுறவுக்குச் செல்வதற்கு முன் நீங்கள் இருவரும் உங்கள் உறவில் எங்கிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உங்களிடம் காதல் உறவு இருக்கிறதா அல்லது பாலியல் உறவு இருக்கிறதா? அது ஒரு பாலியல் உறவு என்றால், நீங்கள் செய்ய ஆரம்பித்ததை ஆரம்பித்து விட்டு போகலாம். அது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் நீங்கள் இருவரும் அதை நன்கு அறிந்து, நீங்கள் இருவரும் அதற்கு ஒப்புக்கொண்ட பின்னரே தொடங்க வேண்டும்.

 

டைமிங் தான் எல்லாமே!

 

சரி, இப்போது உங்கள் உறவின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக அறிந்த பின், நீங்கள் உடலுறவில் ஈடுபடலாம். ஆனால் அதற்கு முன், செக்ஸ் பற்றி பார்ட்னருடன் பேசவும் வேண்டும். திடீரென்று ஒரு பேச்சை ஆரம்பிப்பது போல அல்ல, அலுவலக நேரத்தில் ஐந்து நிமிடங்கள் அவசரமாக பேசுவது போலும் அல்ல. எனவே செக்ஸ் பற்றி பேச சரியான நேரம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் ரிலெக்ஸ்சாக இருக்கும் நேரம் தான் அதற்கு சிறந்தது. நீங்கள் இருவரும் நல்ல மனநிலையில் இருக்கும் நேரமும் அதற்கு உதவும்.

 

காதல் என்பது உடலுறவு கொள்வதற்கான லைசன்ஸா?

இந்த உண்மையை இங்கே புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். காதல் என்பது உடலுறவு கொள்ள உரிமம் பெறுவது என்று அர்த்தமல்ல. நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் செக்ஸ் பற்றி உங்கள் பார்ட்னர் உங்களுடன் கட்டாயம் பேசவேண்டும் என்றும், உங்களுக்கு செக்ஸ் சம்பந்தமான தேவையை பூர்த்தி செய்து கொடுப்பது உங்கள் பார்ட்னரின் பொறுப்பு என்றும் எண்ணுவதை நிறுத்துங்கள். ஒரு உறவை நடத்த, நிலையானதாக இருக்க உடலுறவு கொள்ள வேண்டும். தவிர, ஒரு உறவு ஒரு பக்கத்திற்கு மாத்திரம் பாரமாக இருந்து முன்னெடுத்து செல்ல முடியாது. குறிப்பாக ஒரு தரப்பினர் நீண்டகால பாலியல் அல்லாத உறவைப் பேணுவதற்கு முயற்சிக்கிறார்கள், மற்ற தரப்பினர் உடலுறவை விரும்புகிறார்கள் என்றால் அந்த உறவு முறிந்து போகலாம் அல்லது பக்க உறவுகளைத் தேடலாம். ஆனால் உணர்ச்சி வசப்பட்ட அச்சுறுத்தலுக்கு இது ஒரு காரணமாக இருக்க வேண்டாம். அதைப் பற்றி பேசுவதன் மூலம் உடலுறவை உங்கள் சொந்தமாக்க முயற்சிக்காதீர்கள்.

 

முதலில் நபரைத் தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் ஒருவரை ஒருவர் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு செக்ஸ் பற்றிய தலைப்புக்குச் செல்லும்போது இது உண்மையில் நிகழ்கிறது. நம் வாழ்வில் கடந்த காலங்களில் செக்ஸ் பற்றிய உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் நினைவுகள் இப்போது அவ்வளவு நன்றாக இருக்காது. எங்கள் பார்ட்னருக்கு செக்ஸ் பற்றி மிகவும் கசப்பான எண்ணம் இருந்தால், பின்னர் உங்களுக்கு எவ்வளவு அன்பு இருந்தாலும் செக்ஸ் பேச்சு நேரடியாக வரும்போது உறவு அந்த இடத்திலேயே முடிந்து போகும். அதனால் செக்ஸ் பற்றிய பேச்சுக்கு வர விரும்பினால் அதற்கு முன்பு மற்ற நபரைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

 

நேர்மறையாக இருக்க வேண்டும்

இது மிகவும் முக்கியமானது. செக்ஸ் பேச்சுவார்த்தை தவிர்த்து காதல் பேச்சுவார்த்தை என்றாலும் கூட ஒரு உறவில் பரஸ்பர மரியாதை தேவை என்பதை நாம் முன்பே புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இருவரும் இரண்டு வெவ்வேறு நபர்கள்!

இப்போது, செக்ஸ் பற்றி பேசும்போது ஒருவருக்கு ஒன்றுமே தெரியாது, மற்றவருக்கு செக்ஸ் பற்றி அக்குவேர் ஆணிவேராக தெரியும் என்றால் ஒருவரை ஒருவர் விமர்சிக்கக் கூடாது. மேலும் அந்த விடயங்களைக் கையாள்வதில் அவர்களுக்கு சிரமம் இருந்தால், உறவில் இருக்கும்போது மற்றவரை விமர்சிப்பதை விட, அவற்றை விட்டு சற்று விலகி இருப்பது நல்லது.

மேலும், செக்ஸ் விடயத்தில் அந்த செக்ஸ் fபென்டசி கற்பனைகளை விமர்சன ரீதியாக அல்லாமல் நேர்மறையாக பார்க்க வேண்டும். இதுவும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று.

 

செக்ஸ் பென்டசி பற்றி தெளிவாக உள்ளீர்களா?

செக்ஸ் fபென்டசி என்றவுடன் ​​அவற்றைப் பற்றியும் பேச வேண்டும். உண்மையில், செக்ஸ் பற்றிய பேச்சின்போது பெரும்பாலான இடங்களில் ஒருவருக்கொருவர் தத்தமது செக்ஸ் பென்டசி கற்பனைகளைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளவே அதிக நேரம் செலவிடுகின்றனர். அதில் படுக்கைக்குச் செல்லும்போது அணிய விரும்புவது, எவ்வாறு உடலுறவு கொள்ள விரும்புவது போன்ற பென்டசிகளை அதிகம் யோசிக்காமல் பேசலாம். ஆனால் இவற்றில் கொஞ்சம் உணர்திறன் கொண்ட பிற fபென்டசிகளும் உள்ளன. அந்த விடயங்களைப் பற்றி பேசும்போது நீங்கள் இன்னும் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் த்ரீசமிற்கு ஆசைப்படலாம். ஆனால் மற்றவர் அத்தகைய fபென்டஸிற்கு அவ்வளவாக இஷ்டம் இருக்காமல் இருக்கலாம். இதனால் தான் ஒருவருக்கொருவர் தத்தமது பென்டசிக்களை விமர்சிக்க வேண்டாம் என்று மேலே சொன்னோம். ஆனால் அதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அப்படியான fபென்டசி கற்பனை என்று வரும்போது ​​அவற்றை பற்றி ஒருவருக்கொருவர் நன்கு தெளிவுபடுத்துவது நல்லது.

எமது நினைவில் உள்ள ஒவ்வொரு செக்ஸ் பென்டசிக்களையும் நாம் எமது செக்ஸ் பார்ட்னரை வைத்து அடைய முடியாது. சில பென்டஸிக்கள் நடைமுறைக்குரியதாக இருக்காது. அதனால் எது நடைமுறைக்கு ஏற்றதோ அதனை வைத்து செக்ஸ் பற்றிய கலந்துரையாடலை ஆரம்பியுங்கள்.