தற்காப்புக் கலையான கராத்தே பற்றி அறிந்துகொள்வோம்

 

உலகில் மிகவும் புகழ்பெற்ற தற்காப்புக் கலைகளில் கராத்தேயும் ஒன்றாகும். இது இலங்கையிலும் பிரபலமான கலையாகும். கராத்தே ஒரு ஜப்பானிய தற்காப்புக் கலை என்ற போதிலும் இன்னும் உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. மிகவும் பிரபலமான இந்த தற்காப்புக் கலையைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்படாத சில தகவல்கள் பற்றி இன்று பார்ப்போம்.

 

கராத்தே

கராத்தே என்பது ஜப்பானிய பெயர். பெயர் “வெறுங்கையுடன்” என்று பொருள். கராத்தே என்ற பெயருக்கு வெற்று சண்டை என்று பொருள். கராத்தேவில் உள்ள தற்காப்புக் கலைகள் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல் நிகழ்த்தப்படுகின்றன என்பதிலிருந்து இந்த பெயர் உருவானது.

கராத்தே என்றால் வெறுங்கையுடன் சண்டை போடுவது என்று பொருள்படுவதை போல இந்த தற்காப்பு கலை பலவிதமான தற்காப்புக் கலைகளை கற்பிக்கின்றது. அதாவது உதைத்தல் மற்றும் தற்பாதுகாத்தல், தடுப்பது என பல வகைகள் உண்டு. இந்த தற்காப்புக் கலையின் முக்கிய நோக்கம் உடலின் ஆற்றலை முடிந்தவரை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதும் விரைவாக பதிலடி கொடுப்பதும் ஆகும். கராத்தே தற்காப்புக் கலையின் மாஸ்டர் கராத்தேகா என்று அழைக்கப்படுகிறார்.

 

வரலாறு

இந்த தற்காப்புக் கலை ஜப்பானின் ஒகினாவாவில் உள்ள ரியுக்யு வம்சத்தின் போது உருவானது. கராத்தே என்பது நாம் முன்னர் பேசியதைப் போல மிகப்பெரிய வரலாற்றைக் கொண்ட ஒரு  தற்காப்புக் கலை அல்ல. இந்த தற்காப்புக் கலை 1920 அளவில் தான் தொடங்கியது என்று நம்பப்படுகிறது. ஆரம்ப நாட்களில், இந்த பெயர் காஞ்சி எழுத்துக்களில் “சீன கை” என்று தான் அழைக்கப்பட்டது . ஆனால் 1935 ஆம் ஆண்டளவில் தான் இந்த தற்காப்புக் கலையைக் குறிக்க கராத்தே என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

பயிற்சி

கராத்தேவை ஒரு தற்காப்பு கலையாகவும், தற்காப்புக் விளையாட்டாகவும் பயிற்சி செய்யலாம். இந்த வழியில் பயிற்சியளிக்கப்பட்ட இந்த கலையானது தற்காப்பு கலை, சுய வளர்ச்சி, முயற்சி, தைரியம், தலைமை மற்றும் உடற்பயிற்சி போன்ற பல அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்த தற்காப்பு கலை முக்கியமாக மூன்று பகுதிகளாக கற்பிக்கப்படுகிறது.

 

  • Kihon – கராத்தேவின் அடிப்படைகள் இந்த பிரிவில் கற்பிக்கப்படுகின்றன. இந்த அடிப்படை போதனைகள் கராத்தேவில் உள்ள மற்ற அனைத்து தற்காப்பு கலைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன. இந்த பகுதி கைகால்களால் தாக்குதல் போன்றவற்றைக் கற்பிக்கிறது.
  • Kata – இந்த பிரிவு முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட போர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப போராட கற்றுக்கொடுக்கிறது, அதாவது போர் மாதிரிகள்.
  • Kumite – உண்மையான கற்ற போர்களைப் பயன்படுத்தி சண்டை இந்த பிரிவில் செய்யப்படுகிறது.

 

உலகளவில் கராத்தே

கராத்தே ஜப்பானில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலை என்றாலும் அது படிப்படியாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1950 களில் ஜப்பானில் இருந்து கராத்தே ஆசிரியர்கள் கலையை கற்பிக்க வெளிநாடு சென்றனர். இதன் மூலம் கராத்தே விளையாட்டு உலகப் புகழ் பெற்றது. அத்தோடு ஒக்டோபர் 10, 1970 இல் உலக கராத்தே மன்றம் ஜப்பானின் டோக்கியோவில் நிறுவப்பட்டது.

 

கலைப் படைப்புகளில் புகழ்

கராத்தே விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலமடைந்ததால் இது தொடர்பான படைப்புகளை உருவாக்கியது. கராத்தே கிட் சீரிஸும் ஒரு நல்ல படைப்பாகும். இது கராத்தே தற்காப்புக் கலையின் ஒழுக்க மற்றும் தொழிநுட்ப பின்னணியை மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தது.

 

கராத்தே பெல்ட்கள்

கராத்தே பெல்ட்கள் என்பது ஆரம்பத்தில் இருந்தே கராத்தே தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெரும் ஒரு நபரின் தேர்ச்சி மட்ட அடிப்படையில் வீரர்களை தரவரிசைப்படுத்த வழங்கப்படும் பெல்ட்கள் ஆகும். இதில் தேர்ச்சி பெறுவதில் மாணவர்களின் முயற்சி மற்றும் ஒழுக்கத்தைப் பொறுத்து வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு வண்ண பெல்ட்கள் வழங்கப்படுகின்றன. “பிளாக் பெல்ட்” போன்ற சொற்களை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். கராத்தே வீரர் பெறக்கூடிய மிக உயர்ந்த தரவரிசை தான் அந்த கறுப்பு பெல்ட் ஆகும். ஒருவர் இந்த கருப்பு பெல்ட்டைப் பெறுவதற்கு முன்பு, அதாவது கராத்தேவில் பிளாக் பெல்ட் ஆவதற்கு முன் அவர்களுக்கு வெவ்வேறு வண்ண பெல்ட்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கராத்தே வகுப்பிலும் பயன்படுத்தப்படும் முறைகளில் சிறிய வேறுபாடுகள் இருந்தாலும், சராசரி தரவரிசை பின்வருமாறு காணப்படும்.

  • White Belt
  • Yellow Belt
  • Orange Belt
  • Green Belt
  • Blue Belt
  • Purple Belt
  • Brown Belt
  • Red Belt
  • Black Belt

 

ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே

இந்த கராத்தே விளையாட்டு 2018 இல் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் சேர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவிருந்த 2020 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்படும் ஐந்து புதிய விளையாட்டுகளில் கராத்தேவும் பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து தாக்கிவரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையின் பேரில் ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த போட்டி ஓகஸ்ட் 5 முதல் 7 வரை நடைபெறவுள்ளது.