டயட்டில் இருப்பவர்கள் செய்யக்கூடிய இலகுவான உணவுகள்

 

டயட்டிங்கில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இலகுவாகவும் சுவையாகவும் செய்து சாப்பிடக்கூடிய ஸ்நேக் ரெசிபீக்களை இன்று நாம் கொண்டு வந்துள்ளோம். டயட்டிங்கில் இருப்பது என்பது சாப்பிடக்கூடாது என்று அர்த்தமல்ல. உடலுக்கு தேவையான கலோரி எண்ணிக்கையில் சற்று குறைந்த அளவில் கலோரி கொண்ட உணவை சாப்பிடுவதாகும்.

 

Crepes with Fruit 

தேவையான பொருட்கள்

  1. முட்டை – 2
  2. ஆடைநீக்கிய பால் – 1/2 கப்
  3. நீர் – 1/2 கப்
  4. மரக்கறி எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  5. உப்பு – 1/4 தேக்கரண்டி
  6. முழு கோதுமை மா – 1 கப்
  7. கொழுப்பு இல்லாத தயிர்
  8. புளூபெர்ரி – சிறிதளவு
  9. ராஸ்பெர்ரி – சிறிதளவு

 

  • ஒரு பாத்திரத்தில் முட்டை, பால், நீர், மரக்கறி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் கோதுமை மா சேர்த்து நன்கு விஸ்க் செய்யவும்.
  • அந்த கலவையை ஒரு நான்ஸ்டிக் தவாவில் போட்டு மெல்லியதாக இருபுறமும் சுட்டு கிரேப் செய்து கொள்ளவும்.
  • தயிரை ஒரு முட்கரண்டி கொண்டு நன்கு அடிக்கவும். பின்னர் தயாரிக்கப்பட்ட அந்த க்ரேப்பில் தயிரை தேய்க்கவும். அதில் புளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகளை வைத்து அதை உருட்டி டூத்பிக்கால் குத்தி பரிமாறவும்.

 

Healthy Banana Cake

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மா – 1 கப்
  2. முட்டை – 1
  3. கிரீக் யோகர்ட் – 3
  4. வெணிலா – 1/4 தேக்கரண்டி
  5. மரக்கறி எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  6. தேன் – 2 மேசைக்கரண்டி
  7. வாழைப்பழங்கள் – 2
  8. பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி
  9. இலவங்கப்பட்டை தூள் – 1/4 தேக்கரண்டி
  10. உப்பு

 

மேற்பரப்பிற்கு

  1. கொழுப்பு இல்லாத கிரீம் சீஸ்
  2. கிரீக் யோகர்ட்
  3. வெணிலா – 1/4 தேக்கரண்டி
  4. தேன் – 1 மேசைக்கரண்டி

 

  • சீஸ், கிரீக் யோகர்ட், வெணிலா மற்றும் தேன் ஆகியவற்றைக் கொண்டு டாப்பிங் செய்து கொள்ளவும்.
  • கிரீக் யோகர்ட், முட்டை, வெணிலா, மரக்கறி எண்ணெய், தேன், நறுக்கிய வாழைப்பழங்கள் சேர்த்து கலக்கவும்.
  • ஒரு தனி கிண்ணத்தை எடுத்து கோதுமை மா, இலவங்கப்பட்டை தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த கிண்ணத்தில் முன்பே தயாரிக்கப்பட்ட கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஒரு தட்டில் பேக்கிங் பேப்பர் போட்டு கலவையை ஊற்றி லெவலிற்கு செய்து கொள்ளவும். 350 ஃபாரன்ஹீட்டில் சுமார் 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக்கின் மேல் செய்த அந்த டாப்பிங்கை ஊற்றி பரப்பவும்.

 

Low calorie brownies

தேவையான பொருட்கள்

  1. முட்டை – 2
  2. மரக்கறி எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  3. வெணிலா
  4. தேன் – 2 தேக்கரண்டி
  5. இனிக்காத கோகோ பவுடர் – 1 தேக்கரண்டி
  6. உப்பு
  7. ஆப்பிள் சோஸ் – 1/2 கப்
  8. கோதுமை மா – 1/2 கப்
  9. பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி
  10. பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி

 

  • ஒரு பாத்திரத்தில் முட்டை, மரக்கறி எண்ணெய், வெணிலா மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். கோகோ பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஆப்பிள் சோஸை அதில் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
  • இப்போது ஒரு தனி கிண்ணத்தை எடுத்து கோதுமை மா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும். முன்பே செய்த வெண்ணெய்யை அதில் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
  • ஒரு தட்டில் பேக்கிங் பேப்பர் போட்டு செய்த அந்த கலவையை லெவல் படுத்தி 180 C வெப்பநிலையில் சுமார் 25-30 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

Peanut butter cookies

தேவையான பொருட்கள்

  1. முட்டை – 1
  2. வெணிலா
  3. உப்பு
  4. வேர்க்கடலை வெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  5. தேன் – 2 தேக்கரண்டி
  6. முழு கோதுமை மா – 1 கப்
  7. பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி

 

கிரீம் தயாரிக்க தேவையான பொருட்கள்

  1. குறை கொழுப்பு உள்ள கிரீம் சீஸ்
  2. கிரீக் யோகர்ட்
  3. தேன் – 1 தேக்கரண்டி
  4. இனிப்பில்லாத கோகோ பவுடர் – 1/2 தேக்கரண்டி

 

  • சீஸ், கிரீக் யோகர்ட், தேன் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து ஒரு கிரீம் கலவையை தயாரிக்கவும்.
  • முட்டை, வெண்ணிலா, உப்பு, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். ஒரு தனி கிண்ணத்தை எடுத்து, கோதுமை மா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து, நன்கு கலந்து, முன் செய்த கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அந்த மாக்கலவையில் இருந்து சிறிய உருண்டைகளை செய்து அவற்றை பேக்கிங் தட்டில் வைக்கவும். இந்த குக்கீகளை 180 C வெப்பநிலையில் 10-15 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

Keto spinach bites

தேவையான பொருட்கள்

  1. நறுக்கிய பசளிக் கீரை – 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் – 1
  3. அரைத்த மொஸரெல்லா சீஸ் – 1/2 கப்
  4. முட்டை – 1
  5. தேங்காய் மா – 2 மேசைக்கரண்டி
  6. உப்பு மற்றும் மிளகு
  7. இடித்த மிளகாய் – சிறிதளவு
  8. வறுப்பதற்கு போதுமான எண்ணெய்

 

  • பசளிக் கீரையில் வெங்காயம், தேங்காய் மா, சீஸ், உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். சிறிது இடித்த மிளகாய் சேர்த்து முட்டையுடன் நன்றாக கலக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சூடாக்கி, சிறிது கலவையை போட்டு இருபுறமும் வறுக்கவும்.