இலங்கையின் அரசியல் என்பது பெரும்பாலும் குடும்பம் மற்றும் தலைமுறைகளின் அடிப்படையில் தொடர்கதையாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த நிலைமை முற்றிலும் வேறுபட்டது. பெரும்பாலான பூர்வீக தலைமுறைகளுக்கு முன்பு அந்த நாட்டில் குடியேறி வந்தவர்களுக்கு கூட நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு வாய்ப்பளிப்பதில் எந்த பிரச்சினையும் அந்நாடுகளில் இல்லை. அந்த நாடுகளில் அந்த சுதந்திரத்தின் பலன்களை பயன்படுத்தி மற்றும் அந்த நாடுகளின் அரசியலில் தமக்கென்று ஒரு பெயரை பதித்துக்கொள்ள முடிந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்களைப் பற்றி இன்று நாம் பேசப்போகிறோம்.
நெரஞ்சன் தேவதித்யா
இலங்கையில் பெரும்பாலானோருக்கு இவரைப் பற்றி தெரியாது. என்றாலும் இலங்கையில் பிறந்து பிரிட்டனில் வளர்ந்த நெரஞ்சன் தேவதித்யா பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையை பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் அவர் கன்சர்வேடிவ் கட்சியால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இலங்கை போர்க் காலத்தில் இலங்கைக்காக அவர் பாரிய பங்களிப்பை கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ரணில் ஜயவர்தன
தற்போது இங்கிலாந்தில் சர்வதேச வர்த்தக அமைச்சராக இருக்கும் ரணில் ஜயவர்தன இங்கிலாந்தில் பௌத்த மதத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தார். இலங்கையில் அவரது தந்தையின் தரப்பில் ஓரளவிற்கு அரசியல் பின்னணி உள்ளது. அரசியலில் அவரது ஆரம்ப நாட்களில் சில எதிரிகள் அவரது அரசியல் தோற்றம் குறித்து பல கேள்விகளை எழுப்பினர். இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இன்று நீண்ட தூரம் வந்துள்ளார்.
கரீமா மரிக்கார்
கரீமா மரிக்கார் இங்கிலாந்தின் ஒரு பெருநகரப் பகுதியின் முதல் முஸ்லிம் மேயரானார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அரசாங்கத்தில் பிரபலமான அமைச்சராக இருந்த திரு. மரிக்காரின் பேத்தியான இவர் இலங்கையில் கல்வி கற்றவர். பதவியேற்பு விழாவிற்கு சிங்கள ஓசியர் அணிந்து, டிரம், ஜாக் என்ற சத்தத்தின் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார்.
வனுஷி வால்டர்ஸ்
தொழிற்கட்சி சார்பாக நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வனுஷி வால்டர்ஸ், சரவணமுத்து – பொன்னம்பலம் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது உரையை ஆயுபோவன், வணக்கம் என்று தொடங்கினார். அங்கு அவர் தனது தாயகத்தைப் பற்றியும் பெருமையுடன் பேசியுள்ளார்.
ரோஹிணி கொசோக்லு
அமெரிக்காவில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் கறுப்பு துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் பணியாளர்களுக்குத் தலைமை தாங்கும் ரோஹிணி, இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த தம்பதியினரது மகள் ஆவார். அவர் அரசியலில் அதிக ஆர்வம் காட்டினார். அதன்மூலம் விரைவாகவே ஜனநாயகக் கட்சியில் ஒரு முக்கிய நபரானார். குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சிக்கும் கமலா ஹாரிஸுக்கும் நிதி திரட்டுதல் மற்றும் ஆதரவாளர்களை நிர்வகித்தல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு அவர் தான் தலைமை தாங்கினார்.
டேவிட் டி. கிரெட்டிசர்
இலங்கையில் பிறந்த பறங்கியர் வம்சாவளியைச் சேர்ந்த டேவிட் டி கிரெட்டிசர் தனது ஆரம்பக் கல்வியை இலங்கையில் பெற்று தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு உயர்கல்வியை முடித்த பின்னர் நாட்டில் நன்கு அறியப்பட்ட சுகாதார நிபுணராகும் வாய்ப்பைப் பெற்றார். விக்டோரியா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் அரசியல் அரங்கிலும் அதற்கு அப்பாலும் ஒரு முக்கிய நபராக ஆனார்.
ஜூட் பெரேரா
ஜூட் அவுஸ்திரேலியாவில் விக்டோரியன் சட்டமன்ற உறுப்பினராக 2002 முதல் 2018 வரை பணியாற்றினார். இலங்கையில் பிறந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இலங்கை, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றிய இவர், அவுஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்ற பிறகு தனது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனத் தலைவர்களில் ஒருவரானார்.