கொழும்பில் கேக் உள்ளீடுகளை வாங்கக்கூடிய இடங்கள்

 

 கேக் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ள விடயங்களை இன்று கொண்டுவந்துள்ளோம். வியாபார நடவடிக்கைகளுக்காக கேக் தயாரிப்பவர்களுக்கு இது மிகவும் அவசியமானது. ஏனையோரும் முயற்சிக்கலாம். கொழும்பு கோட்டை என்பது முடிவில்லாத கடைகள் உள்ள மற்றும் சென்றால் தொலைந்து போகும் அளவிற்கு சன நெருக்கடியான இடமாகும். அப்படிப்பட்ட இடத்தில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க நாம் இலகுபடுத்தித் தருகின்றோம்.

 

 பெட்டா எசன்ஸ

கேக் வடிவமைப்பாளர்களிடையே இது ஒரு பிரபலமான கடை. மெயின் ஸ்ட்ரீட்டில் ஐந்துலாம்பு சந்தியில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்து வரும் பெட்டா எசென்ஸில் கேக் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். கேக்குகளைத் தவிர, பிற சுவையூட்டிகள், எசன்ஸ், ஜாம், இனிப்புகள் மற்றும் சொக்கலேட்டுகளை விற்கும் கடையாகும். திருமண கேக் தயாரிப்பாளர்கள், ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் பெட்டா எசன்சிலிருந்தே நிறைய பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். அந்த கடைக்கு வந்தால் பொருட்களை வாங்கி வெளியேற பல மணிநேரம் சென்றாலும் ஆச்சர்யமல்ல. காரணம் அந்த கடைக்குள் எந்நேரமும் மக்கள் நிறைந்திருப்பர்.

 

Pettah Essence Suppliers

135 Dam St, Colombo 01000

0112 326 235

 

லதிபியா ஸ்டோர்ஸ்

செயின்ட் ஜோன்ஸ் தெருவுக்கு அடுத்ததாக இருக்கும் கடைசி கடை இதுவாகும்.. அதிக இடவசதி இல்லை என்றாலும், நாங்கள் சென்ற நேரத்திலிருந்து பொருட்கள் எடுத்து முடியும் வரை எங்களுக்கு உதவ ஒரு செட் இருக்கும்.

நல்ல தரமான கேக் பொருட்கள் அதிகமாக வாங்க வேண்டுமானால் லதிபியாவிற்கு செல்ல வேண்டும். கேக்கிற்கு தேவையான கலரிங்ஸ், பல்வேறு நாடுகளிலிருந்து வந்த கலரிங்ஸ் மற்றும் இனிப்புகள் போன்ற சுவையான உணவுகளை இங்கு வாங்கலாம்.

 

Latheefia Stores

011 Colombo, 46 St Johns Rd, Colombo 11100, Sri Lanka

+94 112 434 679

 

செயின்ட் அந்தோனி ஸ்டோர்ஸ்

இது லதிபியாவுக்கு அடுத்ததாக உள்ள கடை. இதுவும் மிகவும் பிரபலமானது. கேக் பொருட்கள், கேக் செய்ய தேவையான கருவிகள், கலரிங்ஸ், டம்மீஸ், கேக் போர்டுகள் மற்றும் கேக் பெட்டிகளை வாங்க இது ஒரு தனி மாடியையே கொண்டுள்ளது.

நீங்கள் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக தேர்வு செய்து கொண்டு வரக்கூடிய இடம். கேக் வடிவமைப்பாளர்கள் அதிகமாக பொருட்கள் வாங்கும் இடம் இதுவாகும். பொருட்களுக்கு விரைவாக கட்டணம் செலுத்தினாலும் சற்று நேரம் தாமதமாகலாம். மற்ற இடங்களை விட சற்று அதிகமாக செலவு செய்தாலும் சில நல்ல பொருட்களை வாங்கலாம்.

 

St. Anthonys Stores

No. 44 St Johns Rd, Colombo 01300, Sri Lanka

+94 112 325 608

 

 கிருஷ்ணா

மெயின் ஸ்ட்ரீட்டில் ராம் பிரதர்ஸ் எதிரே சிறிய சந்துகளில் உள்ள ஒரு கடை இதுவாகும். அதிகளவான கேக் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிரபலமானது. இங்கு கேக் கருவிகள், பேக்கிங் தட்டுகள், வெட்டிகள், கேக் டாப்பர்கள், டம்மீஸ் என அனைத்தையும் பெறலாம். விலையும் மிகக் குறைவு.

இங்கு வாட்ஸ்அப்பில் இருந்து முன்கூட்டியே ஓர்டர் செய்து வாங்கலாம். மற்ற எல்லா இடங்களையும் விட இங்கு மலிவானது என்பதால், கேக் தயாரிப்பாளர்கள் இங்குள்ள பொருட்களை மொத்தமாக கொள்வனவு செய்கின்றனர்.

 

155 Main St

155 Main St, Colombo 01100

 

த்ரீ ஸ்டார்

மெயின் வீதியில் உள்ள ஐந்துலாம்பு சந்தியில் உள்ள ஒரு சிறிய கடை இதுவாகும். இது கேக் தட்டு உள்ளிட்ட ஏனைய பொருட்களையும் கொண்டுள்ளது. இந்த இடத்தில் வேறு எங்கும் இல்லாத நிறைய விடயங்கள் உள்ளன. கேக் கருவிகள் உட்பட நிறைய பொருட்களை நியாயமான விலையில் வாங்கலாம். இதுவும் கேக் செய்பவர்களிடையே பிரபலமானது.

 

New Three Star Traders

Colombo 01300

0112 322 344

 

பீப்பிள்ஸ் பார்க்

பீப்பிள்ஸ் பார்க் என்பது நீங்கள் மொத்தமாக அல்லது சில்லறை பொருட்களை குறைந்த விலையில் வாங்கக்கூடிய இடம். பொம்மைகள், எழுதுபொருட்களைத் தவிர கேக் உள்ளீடுகளை விற்கும் இரண்டு அல்லது மூன்று கடைகளும் இங்கு உள்ளன. நீங்கள் இங்கு செல்லும்போது கேக் பெட்டிகள், கப்கேக் பெட்டிகள், கேக் டாப்பர்களை மிகக் குறைவாக வாங்கலாம்.

 

Peoples Park Complex

People’s Park, Saunders Pl, Colombo

 

ஹண்ட்ஸ்

பீப்பிள்ஸ் பார்க்கில் ஒரு மூலையில் ஹன்ட்ஸ் உள்ளது. தேடுவதற்கு கஷ்டமான டம்மி வகைகளை இங்கு இலகுவாக செய்து தருவார்கள். மேலும் இங்கு நீங்கள் பல வண்ணங்களையும் பெறலாம்.

 

Hants Showroom – People’s Park

LG 27, People’s Park Complex. 11, Colombo, Sri Lanka

+94 112 437 135