விரைவாக கோபமடையும் அல்லது மோசமான மீனினங்கள்

 

மீன் வளர்ப்பது பலரது பொழுதுபோக்காகும். மீன்களை தொடர்ந்தும் வளர்ப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. பொதுவாக மீன் கண்காட்சிகளுக்கு சென்று அங்கு வளர்க்கும் மீன்களை பார்த்து ஆசைப்பட்டு அதில் ஒரு அழகான புதிய ஜோடி மீன்களைக் கொண்டு வந்து எங்கள் தொட்டியில் வைப்போம். ஆனால் சில நாட்களில், ஒரு மீன் மற்ற மீனை சாப்பிட்டு விடும் அல்லது தொட்டியில் ஏற்கனவே இருந்த மீன்கள் அந்த புதியவற்றை தாக்கும். எனவே இதுபோன்ற மீன் உலகில், பிற மீன்களுக்கு பிரச்சினை கொடுக்கும். அவற்றின் குட்டிகளைக்கூட சாப்பிடக்கூடிய சில எரிச்சலூட்டும் மீன்கள் உள்ளன.

 

 Veil Angelfish (Pterophyllum scalare)

 

வேல் ஏஞ்சல் ஃபிஷ் என்பது நாம் அனைவரும் அறிந்த ஏஞ்சல் இனத்தைச் சேர்ந்தது. சராசரி ஏஞ்சல் ஃபிஷ் ஒரு தட்டையான சாதுவான மீன் போல தோன்றுகிறது. ஆனால் அவ்வளவு சாதுவான மீன் அல்ல. இந்த மீன் சுமார் ஆறு அங்குல நீளம் கொண்டது. வெள்ளை, கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை கொண்டுள்ளது. இந்த மீன் இனங்கள் குழுவாக ஒன்றாக வாழ்கின்றன. ஆனால் திடீரென்று ஒருநாள் ஒரு மீன் மற்ற மீனை தாக்கத்தொடங்கும் நாள் வரும். அந்த நேரத்தில் அவ்வாறான மீன்களை தேர்ந்தெடுத்து பிரிக்க வேண்டும். கருவுற்ற மீன்களையும் பாதுகாக்க வேண்டும்.

 

Convict Cichlid

 

சிச்லிட் மீன் பார்க்க அப்பாவியாக இருந்தாலும் மற்ற மீன்களைத் தாக்குகின்றது. அவை பொதுவாக வெள்ளை, கறுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படுகின்றன. இந்த குழு ஒன்றாக அமைதியானதாக இருந்தாலும் ​​அதை புதிய நீரில் கொண்டு வந்து போடும்போது பெரிய சிறிய மீன் என்று பார்க்காமல் எல்லா மீன்களையும் தாக்கும். இந்த மீன் ஜோடி ஒன்றை வைத்தாலும்கூட அவற்றின் கண்ணிற்கு புதிதாக தெரியும் மீன்களை வந்து தாக்கும் ஒரு இனமாகும். இதனால் இந்த மீன்களை தனித்தனியாக வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அவை தொட்டியில் உள்ள மற்ற மீன்களின் செட்டைகளையும் கண்களையும் சேதப்படுத்தும்.

 

Oscar (Astronotus ocellatus)

 

ஒஸ்கா ஒரு அழகான உருவம் கொண்ட மீனினம். தொட்டிகளில் இந்த மீனின் பல வகைகள் உள்ளன. ஜீப்ரா, டைகர், லெமன் எண்ட் ரெட் நிறங்களில் ஒஸ்கா மீனினங்கள் உள்ளன. இவை ஒன்றாக இருக்கும்போது பெரிய பாதகம் ஏதும் இல்லை. ஆனால் அதிக மீன்கள் இருக்கும் புதிய நீரில் இவற்றை போடும்போது, ​​இவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்த மீன்கள் கொஞ்சம் பெரியதாக வளரும். சரியான ஊட்டச்சத்து கிடைத்தால் ஒரு அடிக்கு மேலும் வளரக்கூடியது.

 

Bucktooth Tetra (Exodon paradoxus)

 

இவை டெட்ராக்கள் என்று அழைக்கப்பட்டாலும் மற்ற டெட்ராக்களிலிருந்து வேறுபட்டவை. பிற விலங்குகள் மற்றும் மீன்களைத் தாக்க இவற்றின் கூர்மையான முன்பக்கத்தைப் பயன்படுத்துகின்றது. இந்த மீன்களை அவற்றின் சொந்த இன மீன்களுடன் ஒன்றாக வைக்கலாம். இந்த மீன் சுமார் மூன்று அங்குல நீளம் வரை மாத்திரமே வளரக்கூடியது. பிரகாசமான உலோக வெள்ளி நிறம் மற்றும் மஞ்சள் நிற செட்டைகள் இவற்றை கண்டறிவதை எளிதாக்குகின்றன.

 

Piranha

 

பிரன்ஹா ஒரு பிரபலமான மூர்க்கமான மீன். உலகம் முழுவதும் 20 வகைளுக்கு மேற்பட்ட பிரன்ஹாக்கள் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. பிரன்ஹாக்கள் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. தென் அமெரிக்காவில் அமேசன் ஆற்றில் பிரன்ஹாக்கள் மனிதர்களைத் தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. நீங்கள் இந்த வகை பிரன்ஹாக்களை வளர்க்கின்றீர்கள் என்றால், அவற்றிற்கு முறையாக உணவளிக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது, ​​இவை பசியுடன் இருக்கும்போது மற்ற மீன்களை தாக்குகின்றன. இவை சிறிய மீன்களை சாப்பிடும். தானியங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும் பிரன்ஹாக்களும் உள்ளன.

 

Arowana (Silver & Asian)

 

ஒரு பெரிய தொட்டியின் பாதி நீளமுள்ள அரவானா திரும்பும் போது, ரயில் திரும்புவது போல அழகாக இருக்கும். இந்த மீன்கள் மிகவும் மதிப்புமிக்கவை என்பதால் அவை பெரிய இடங்களிலும் இலங்கையில் பெரிய தொட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. ஆரவனங்களில் இரண்டு வகைகள் உண்டு. சில்வர் அரவனா மற்றும் ஆசிய அரவனா. சில்வர் அரவனா சுமார் நான்கரை கிலோ எடையும், சுமார் மூன்று அடி நீளமும் வளரும். இந்த மீன்களை ஒரு தொட்டியில் கேட்ஃபிஷ், ஏஞ்சல் ஒஸ்கார், கிரீன் டெரியர்கள் மற்றும் பேட்டர் சிச்லிட்கள் கொண்டு வளர்க்கலாம். இந்த மீன்கள், பிரன்ஹாக்களைப் போல மற்ற மீன்களுடன் தொட்டியில் வைக்க வேண்டுமானால் அடிக்கடி இதன் வயிற்றிக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் அரவானா அதிக பசியுடன் இருக்கும்போது, ​​தொட்டியில் இருக்கும் இரண்டு மூன்று மீன்கள் காணாமல் போனாலும் சந்தேகம் இல்லை.

 

Rainbow Shark

 

ஷார்க் என்று அழைக்கப்படும் இந்த மீன் சுமார் ஆறு அங்குல அளவு கொண்டது. தாய்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த மீன் வெப்பமண்டல நீரில் வளர்கிறது. இவற்றிற்கு வயதாகும்போது, அவற்றின் ​​எல்லைகளை பிரிக்க ஒருவருக்கொருவர் அடேக்கிங் ஸ்கில்ஸ்களை காட்டுகின்றன. ஆனால் இவை மிகப் பெரியதாக வளராது என்பதால் இவற்றை சிறிய மீன்களுடன் வளர்ப்பது கடினமல்ல. குவாராமி, ரெயின்போ ஃபிஷ், டுனியனின் பார்ப்ஸ் போன்ற வகைகளைக் கொண்டு, ரெயின்போ ஷார்க்கை தொட்டியில் வைத்து வளர்க்க முடியும்.