கப்பல் தலைவருக்குள்ள பொறுப்புகள் பற்றி அறிந்துள்ளீர்களா?

 

கடல்வழி போக்குவரத்து என்பது உலகத்தை மாற்றியமைத்த ஒரு சிறந்த நிகழ்வாகும். கப்பல் போக்குவரத்து உலகத்தை ஒரு சந்தையாக மாற்றியுள்ளது. அதே நேரத்தில், கடற்படை தொழிநுட்பத்தின் முன்னேற்றத்துடன் உலகின் பொருட்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் அரசியல் நிலைமைகள் வியத்தகு முறையில் மாறின. உதாரணமாக, இலங்கை என்றழைக்கப்பட்ட மன்னரால் ஆளப்பட்ட ஒரு சிறிய தீவுக்கு ஐரோப்பிய கப்பல்கள் வந்தடைந்த பின்னர் இந்த தீவின் வாழ்க்கை முறை மாறியது. அந்த கப்பல் பயணத்தின்போது கப்பல் தலைவரின் அதாவது கேப்டனின் பொறுப்பு என்பது அன்று போலவே இன்றும் கடினமாக உள்ளது. அவரது பொறுப்புகள் மற்றும் கடமைகளைப் பற்றி இன்று அறிந்துகொள்வோம்.

 

கப்பலின் தலைமை

கப்பலின் தலைவரே முழு கப்பலையும் வழிநடத்துகிறார். ஒருபுறம் அவர் கப்பலின் பணியாளர்களை மற்றும் அவர்களின் தேவைகளை கவனித்து வருகிறார். மறுபுறம், கப்பல் நிறுவனத்தின் சார்பிலிருந்து கப்பலுக்கு பொறுப்பானவர். கப்பல் துறையில் பரந்தளவிலான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை புரிந்துகொண்டு கப்பலின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்கும் பொறுப்பும் கப்பல் தலைவருக்குண்டு. காலப்போக்கில், ஒரு தலைவருக்கு கப்பலை வழிநடத்துவதில் உள்ள சிக்கல்களை தொழிநுட்பம் எளிதாக்கியுள்ளது. பெரிய சரக்குக் கப்பல்கள் மற்றும் இன்று கடலில் இயங்கும் பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றின் செயற்பாடுகளை மிகவும் திறமையாக நிர்வகிக்கும் பணி அவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்

கப்பல் நிறுவனத்துடன் கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. எப்படியும் அந்த கப்பல் நிறுவனத்தின் விதிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். கூடுதலாக, ஒரு கப்பல் பலவிதமான சரக்குகளை ஏற்றிச் சென்றால் கப்பலின் தலைவரே சரக்குகளை கொண்டு செல்வதற்கும் இறக்குவதற்கும் பொறுப்பேற்கிறார். அத்துடன் சுங்க வரிகளுக்கும் பொறுப்பாவார். பயணம் செய்யும் போது சட்ட சிக்கல்களை கையாள வேண்டியிருந்தால் அதற்கும் கப்பலின் தலைவரே பொறுப்பேற்க வேண்டும். சரக்கு பொருட்கள் மற்றும் பயணிகளின் பொருட்கள் உட்பட கப்பலில் உள்ள அனைத்து சரக்குகளுக்கும் கப்பல் தலைவரே பொறுப்பு.

 

கப்பலின் செயற்பாடு மற்றும் பராமரிப்பு

கப்பலின் செயற்பாடுகளுக்கு உதவ பொறியியலாளர்கள், கேடட் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் உள்ளனர். அப்படியிருந்தும், ஒன்றை சரியாக பராமரித்து வைத்திருப்பது கேப்டனின் பொறுப்பாக அமைகின்றது. எரிபொருள் மற்றும் எண்ணெய் வழங்கல், கப்பலின் இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுது ஆகியவற்றை மேற்பார்வையிட தனி அதிகாரிகள் இருந்தாலும் இவற்றின் முழுப் பொறுப்பும் கப்பலின் தலைவருக்கே உண்டு. பராமரிப்பு சரியான நேரத்தில் செய்யப்படாவிட்டால் கப்பல் சீராக இயங்க முடியாது.

 

அவசரநிலை செயற்பாடுகள்

கடந்த காலத்தில் கப்பல் பயணம் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் இப்போது தொழிநுட்பம் ஒரு கப்பலின் திசையையும் வேகத்தையும் தீர்மானிக்க உதவுகிறது. இருப்பினும், அவ்வப்போது கப்பல்களின் ஆபத்துகள் மாறுகின்றன. வானிலை எதிர்வுகூறல் தொழிநுட்பம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் உலகின் சிறந்த சொகுசு விடுதிகள் போன்ற பயணிகள் கப்பல்கள்கூட கடுமையான புயல்களை சமாளிக்க வேண்டும். மேலும், புயல் போன்ற பாதகமான வானிலை நிலைமைகள் இருந்தபோதிலும் சரக்கு அல்லது பயணிகள் நடவடிக்கைகளின் தேவை ஏதும் இருந்தால் கப்பலுக்கு பாதகமான சூழ்நிலையில் தலைவருக்கு தெரிந்த வரையில் இயக்கப்பட வேண்டியிருக்கும்.

 

கப்பல் கட்டுப்பாட்டுக் குழு

கப்பல் என்பது நாடுகளை இணைக்கும் போக்குவரத்து வழிமுறையாகும். அந்தக் கப்பல்களின் பணியாளர்களைக் கையாள்வது ஒரு தனிப் பிரச்சினையாகும். தற்போதுள்ள குழுவினரை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் எந்த நேரத்தில் எந்த துறைமுகங்களில் ஏற வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கும் தலைவரிடமே அதிகாரம் உள்ளது. மேலும், ஊழியர்களுடன் மோதல் அல்லது சிக்கல் இருந்தால் சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் தலைவரே பொறுப்பு. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் கப்பல் திருட்டுகளின் விவகாரங்களை நிர்வகித்தல் அல்லது நிர்வகிப்பது கப்பல் தலைவரது பொறுப்பாகும். இவை அனைத்திலும் தலைவருக்கு உதவ மற்ற துணை அதிகாரிகள் உள்ளனர். ஆனால் ஒரு பெரிய சிக்கல் இருந்தால் அதை தலைவரின் தலையீட்டாலேயே தீர்க்க வேண்டிய பொறுப்புண்டு.

 

சாமான்களுக்கான பொறுப்பு

 

பயணிகளை விட அதிகமான பொருட்களையே கப்பல்கள் கொண்டுசெல்கின்றன. கப்பல்கள் உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு தொன் கணக்கான சரக்கு மற்றும் நூறாயிரக்கணக்கான கொள்கலன்களைக் கொண்டு செல்கின்றன. அந்த பணியில், சம்பந்தப்பட்ட சரக்குகளை வைத்திருத்தல் மற்றும் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட துறைமுகங்களின் சுங்க மற்றும் துறைமுக ஊழியர்களுக்கு வழங்குவதற்கான இறுதி பொறுப்பு தலைவருக்கு உள்ளது. மேலும், கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் தலைவரே விசாரணைகள் மற்றும் நீதிமன்ற காப்பீட்டை எதிர்கொள்ள வேண்டும்.