உள்ளூர் உணவாக இது இல்லாவிட்டாலும், மினி பைஸ் இப்போது பல உணவுக் கடைகளில் விற்கப்படுகின்றன. ஸ்வீட் எண்ட் சேவரி டெஸ்ட்களில் இது கிடைக்கும். இதை அழகுக்காக மஃபின் தட்டுகளில் மினி பைகளை உருவாக்கலாம். பண்டிகை உணவுகளில் இந்த மினி பைகளை செய்யலாம். எனவே இன்று ஒவ்வொரு சுவையில் செய்யக்கூடிய மினி பைகளை பார்ப்போம்.
ஆப்பிள் பை
தேவையான பொருட்கள்
க்ரஸ்ட்டிற்கு
- கோதுமை மா – 2 கோப்பைகள்
- சுவைக்கேற்ப உப்பு
- பட்டர் – 1 கப்
ஃபில்லிங்கிற்கு
- தோலுரித்த ஆப்பிள்கள் – 4
- பட்டர் – 1/2 கப்
- மா – 3 மேசைக்கரண்டி
- சிவப்பு சர்க்கரை – 1/2 கப்
- இலவங்கப்பட்டை தூள் – 3/4 தேக்கரண்டி
- ஜாதிக்காய் தூள் – சிறிதளவு
- பிரசிங்கிற்கு ஒரு முட்டை
- ஒரு பாத்திரத்தில் மா, உப்பு மற்றும் பட்டர் சேர்த்து விரல்களால் பிசையவும். நன்கு பிசைந்தும், சிறிது நீர் சேர்த்து மாவை நல்ல கெட்டியான பதார்த்தமாக செய்து கொள்ளவும். அதை கைகளில் ஒட்டாத வகையில் உருவாக்கி, நன்றாக மூடி 2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
- ஆப்பிள்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பட்டர் போட்டு, அது உருகும்போது மா மற்றும் சிவப்பு சர்க்கரை சேர்க்கவும். சுமார் 1 மேசைக்கரண்டி நீர் சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை உருகும்போது, நறுக்கிய ஆப்பிள்களை சேர்த்து இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஜாதிக்காயை சற்று தெளிக்கவும். அதை நன்கு கலந்த பின் அடுப்பிலிருந்து நீக்கவும்.
- ஃப்ரிட்ஜிலிருந்து மாவை வெளியே எடுத்து அதை சிறிது பிசையவும். இப்போது அதிலிருந்து ஒரு வட்டவடிவமாக வெட்டி மினி பை தட்டில் வைக்கவும். இதற்கு போதுமான அளவிற்கு பில்லிங்கை சேர்த்து, அதன் மேல் மாவை ஒரு மூடி போல் போர்த்தி பிடித்த டிசைனை கீறு போல் வெட்டி, மேலே மறைக்கவும். முட்டையின் மஞ்சள் கருவை லேசாக அதன் மீது தேய்த்து விட்டு 180 c வெப்பநிலையில் சூடான அடுப்பில் சுமார் 20 நிமிடங்கள் சுட வேண்டும்.
முட்டை பை
தேவையான பொருட்கள்
க்ரஸ்ட்டிற்கு
- பட்டர் – 1 கப்
- மா – 2 கோப்பைகள்
- சுவைக்கேற்ப உப்பு
- சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
ஃபில்லிங்கிற்கு
- முட்டையின் மஞ்சள் கரு – 6
- பால் – 1 கப்
- மில்க்மேட் – 1/2 கப்
- மாவில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும். அதை நன்றாகக் கிளறி 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து கிளறவும். சிறிது நீர் சேர்த்து, ஒட்டாத வகையில் மாவை பதமாக்கி, நன்றாக போர்த்தி, 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- அதை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து 12 பகுதிகளாக பிரிக்கவும். ஒவ்வொன்றாக மெல்லியதாக தட்டிக்கொள்ளவும். ஒரு பை அல்லது கப்கேக் தட்டில் எண்ணெய் தெளிக்கவும். மெல்லியதாக்கி தட்டிய மாவை ஒவ்வொன்றாக வைக்கவும். தட்டில் போட்டு கையால் இறுக்கவும். சுற்றியுள்ள பகுதிகளை கத்தியால் வெட்டுங்கள்.
- முட்டையின் மஞ்சள் கருவில் பால் மற்றும் மில்க்மேட் சேர்க்கவும். நன்றாக விஸ்க் செய்து எடுத்து பை கோப்பைகளில் நிரப்பவும். 180 c வெப்பநிலையில் சூடான அடுப்பில் 20 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.
சிக்கன் பை
தேவையான பொருட்கள்
க்ரஸ்ட்டிற்கு
- மா – 2 கோப்பைகள்
- பட்டர் – 200 கிராம்
- உப்பு
- சர்க்கரை – 2 தேக்கரண்டி
- பால் – 1 கப்
- அரைத்த சீஸ் – சிறிதளவு
ஃபில்லிங்கிற்கு
200 கிராம் எலும்பில்லாத கோழியிறைச்சி
- பட்டர் – 2 மேசைக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் – 1
- நறுக்கிய பூண்டு – 2 தேக்கரண்டி
- நறுக்கிய குடை மிளகாய் – 1/2 கப்
- உப்பு மற்றும் மிளகு
முட்டை மற்றும் கிரீம் கலவைக்கு
- முட்டை – 2
- பிரஷ் கிரீம் – 1 கோப்பை
- ஓரிகானோ – சிறிதளவு
- உப்பு மற்றும் மிளகு
- பூண்டு தூள்
- ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு உருக்கவும். சிறிது வெங்காயம் சேர்த்து வதங்க விடவும். இதில் சிறிது பூண்டு சேர்க்கவும். கோழியை நறுக்கி இதில் சேர்க்கவும். கோழி அவியும்போது, குடைமிளகாய் சேர்க்கவும். சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்.
- முட்டை மற்றும் பிரஷ் கிரீம் பேஸ்டுக்கான பொருட்களை ஒன்றாக விஸ்க் செய்யவும்.
- மா கலவையை தயாரிக்க, மா மற்றும் பட்டர் ஆகியவற்றை விரல்களால் நன்றாக பிசைந்து நன்கு கலக்கவும். சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கிளறி, சிறிது பால் சேர்த்து ஒரு ஒட்டாத மாக்கலவையை தயாரிக்கவும்.
- இதை நன்றாக போர்த்தி 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- சிறிது மா சேர்த்து, மெல்லியதாக நறுக்கி பய் கப் அளவுகளில் உருட்டவும். வெட்டப்பட்ட மாவை கோப்பைகளின் உள்ளே வைத்து, எக்ஸ்ட்ரா துண்டுகளை சுற்றி வெட்டுங்கள்.
- ஃபில்லிங்கை அதில் நிரப்புவதற்கு முன் ஒரு முட்கரண்டி கொண்டு சிறிது குத்திவிட்டு, 180 c வெப்பநிலையில் 5 நிமிடங்கள் சுட வேண்டும்.
- இப்போது அதை வெளியே எடுத்து சிக்கன் ஃபில்லிங்கை அதில் போட்டு முட்டை மற்றும் கிரீம் கலவையை ஊற்றவும். மேலே சிறிது அரைத்த சீஸ் சேர்த்து 20 நிமிடங்கள் சுட வேண்டும்.
பம்ப்கின் பய்
தேவையான பொருட்கள்
- சிக்கன் பைக்கு செய்த க்ரஸ்ட்
ஃபில்லிங்கிற்கு
- முட்டை – 2
- பூசணி பியூரி – 1 கப்
- பால் – 1 கப்
- சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
- உப்பு
- சிறிது இலவங்கப்பட்டை தூள்
- நறுக்கிய இஞ்சி – 1/2 தேக்கரண்டி
- ஜாதிக்காய் தூள்
- பை க்ரேஸ்ட்டை மெல்லிய துண்டுகளாக வெட்டி பய் கோப்பைகளில் வைக்கவும்.
- முட்டைகளை நன்கு விஸ்க் செய்து அதை பூசணி பியூரியுடன் சேர்க்கவும். இதையெல்லாம் சேர்த்து நன்கு கலந்து பை கோப்பையில் வைக்கவும்.
- 180 c வெப்பநிலையில் 25 நிமிடங்களுக்கு ஒரு சூடான அடுப்பில் சுட்டுக்கொள்ளவும்.