பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள்

 

பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் நோய்வாய்ப்பட்டால் மக்களாகிய நாங்கள் கவலையடைய வேண்டும். ஆனால் இம்முறை அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனைகளுக்குச் செல்வதால் மருத்துவமனைகளுக்கு பிரபலமில்லாத ஹிக்கடுவ மற்றும் வாதுவ போன்ற இடங்களில் உள்ள சிறப்பு சிகிச்சை மையங்களில் அமைச்சர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சேர்ப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். முன்பெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்தனர். ஆனால் இன்று அவர்கள் தேர்தல் சகாப்தம் வரும்போது மாத்திரமே அந்த அளவிற்கு மட்டுமே நெருக்கமாக உள்ளனர். சரி, இவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி இன்று பார்ப்போம்.

 

கூட்டக் கொடுப்பனவு

இப்போதெல்லாம் பாராளுமன்ற கூட்ட அமர்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதால் இந்த நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் தங்கள் முகங்களை காட்டுவதற்காக அதிகமாக வருகை தருகின்றனர். ஆனால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 200 பேர் அத்தகைய நாளில் வருகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒரு நாள் இந்த பாராளுமன்ற கூட்டத்திற்கு வருகை தந்தால் அதற்கான கொடுப்பனவாக ரூ.2500 பெறுகிறார். பாராளுமன்ற அமர்வு இல்லாத நாட்களில் குழு கூடினால், அந்தக் குழுக்களில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த ரூ.2500 கிடைக்கும்.

 

அலுவலக கொடுப்பனவு

அலுவலக கொடுப்பனவாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.100,000 வழங்கப்படும். மேலும் அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் கொடுப்பனவு கிடைக்கும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தனிப்பட்ட ஊழியர்களில் 4 பேருக்கு பணம் செலுத்துவதோடு, ஒரு அமைச்சர் 15 அலுவலக ஊழியர்களை வைத்திருக்க முடியும். அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் 218 லீட்டர் பெற்றோலுக்கும் அதுவே டீசல் வாகனமாக இருந்தால் 264 லீட்டருக்கும் நிதி பெறுகிறார். துணை அமைச்சர் 3 வாகனங்கள் வரை வைத்திருக்க முடியும். ஒரு அமைச்சருக்கு 5 வாகனங்கள் வரை உள்ளன.

 

சம்பளம்

சிங்கப்பூர் போன்ற நாடுகளில், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலிருந்து அந்த அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் மறைமுக வருவாயையும் ஊழலையும் குறைக்க எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இலங்கையில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் அடிப்படை சம்பளம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் தனியார் துறை நிர்வாகிகள் இந்த எம்.பி.க்களை விட அதிக சம்பளத்தைப் பெறுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினரின் ஒருமாத சம்பளம் ரூ.54,285 ஆகும். பிரதி அமைச்சரின் சம்பளம் ரூ. 63,500 / -. ஒரு அமைச்சரின் சம்பளம் 65,000.

 

சுங்கவரி இல்லாத வாகனங்கள்

இந்த வாகன வசதியானது ஏழையான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும். அவர்கள் அனைத்து டூட்டி ஃப்ரீ வாகனங்களையும் வாங்கலாம். எனவே ஒரு நல்ல சொகுசு காரை ரூ.30-40 இலட்சத்திற்கு வாங்கி, அதன் பிறகு அந்த வாகனத்தை ரூ.150-200 இலட்சத்திற்கு விற்பனை செய்வது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் வழமையான பழக்கம்.

 

பணியாளர்கள்

உறவினர்கள், கணவன், மனைவி இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ய முடியாது. தனியார் துறையில் இந்த நடைமுறை பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால் ஒரு அமைச்சர் தனது குடும்ப உறுப்பினர்களை தனது ஊழியர்களாக நியமிக்க முடியும். அதன்படி, அமைச்சரின் மனைவி ஒருங்கிணைப்பு செயலாளராகவும், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அதன் உயர் ஊழியர்களின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் உள்ளன. அத்தோடு இந்த ஊழியர்கள் எரிபொருள் கொடுப்பனவுகள், வாகனங்கள் போன்றவற்றைப் பெறுவார்கள். மேலும் மாதத்திற்கு ரூ.30,000 சம்பளமாகவும் பெறுவார்கள்.

 

ஓய்வூதியம் மற்றும் காப்பீடு

எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பணியாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விபத்தில் அல்லது பயங்கரவாத செயலில் இறந்தால், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.50 இலட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியவர் என்றால், அவர் வாழும்போது பெற்ற சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை பெறுவார்.

 

பிற கொடுப்பனவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.350,000 வரை அஞ்சல் கொடுப்பனவு வழங்க உரிமை உண்டு. எம்.பி.க்களுக்கு ரூ.50,000 வரை தொலைபேசி கொடுப்பனவும் கிடைக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வீடு ஒன்றிற்கு உரிமை உண்டு. உத்தியோகபூர்வ வீடானது மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ளன. அமைச்சர்களுக்கு, கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுபிட்டிய போன்ற ஆடம்பர நகர்பகுதிகளில் உத்தியோகபூர்வ குடியிருப்புகள் உண்டு.