( STRICTLY 18+ ) உடலுறவுக்கு பிறகு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்

 

வயதான ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு கட்டத்தின் பின் உடலுறவு பற்றிய சரியான அறிவு இருந்தாக வேண்டும். இந்த கட்டுரையை வாசிக்கும் எத்தனையோ பேர் இதற்கு முன்னரே உடலுறவில் அதாவது செக்ஸ் அனுபவம் அடைந்திருக்கலாம். இன்னும் சிலருக்கு செக்ஸ் அனுபவம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் உடலுறவு கொள்ள இருந்தால், நீங்கள் மணந்த அல்லது விரும்பும் ஒருவருடன் உடலுறவு கொண்ட பிறகு என்ன செய்வது என்று தெரிந்து கொள்வது அவசியம். இந்த விஷயங்கள் உங்கள் சொந்த ஆரோக்கியத்திற்கும் உங்கள் துணையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியம். அதனால்தான் உடலுறவுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய அறிவுறுத்தல்களை உங்களுக்கு வழங்க விரும்பினோம்.

 

மறுபுறம் திரும்பி தூங்கிவிட வேண்டாம்

சிலர் உடலுறவு செய்து முடித்த பின்னர் சோர்வாகவும் திருப்தியாகவும் உணர்கிறார்கள். அந்த நேரத்தில் திரும்பி போர்த்திவிட்டு தூங்கவே நினைப்பார்கள்.  அப்படி தூங்க முயற்சிக்காதீர்கள். அந்த நேரத்தில் கண்களைத் திறந்து இருக்க முடியாவிட்டால், நீங்கள் அலாரம் வைத்து விட்டு சிறிது நேரம் கண்மூடி சாய்ந்து கொள்ளலாம். ஆனால் அப்படியும் தூங்க முயற்சிக்காதீர்கள். உடலுறவு கொண்டதைப் போல அவசரமாக எல்லாவற்றையும் முடித்து விட்டு தூங்கிவிடாலாம் என்று எண்ணியிருந்தால் அது தான் தவறு, இன்னும் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

 

 கொஞ்சம் கழுவிக்கொண்டால் நல்லது தானே ?

இது கட்டாயம் உடலுறவுக்குப் பிறகு செய்ய வேண்டியதாகும். அப்படியே கொஞ்சம் குளித்துக்கொண்டாலும் பரவாயில்லை. அப்படி குளிக்க முடியாவிட்டால் பிறப்புறுப்புகளையும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளையும் கழுவ வேண்டும். குறிப்பாக உடலுறவுக்குப் பின்னர் உங்களின் பிறப்புறுப்புகளில் விந்து வெளியேறி இருக்கக்கூடும். நீங்கள் அவற்றை சரியாக கழுவவில்லை என்றால், உங்களிடம் துர்நாற்றம் வீசுவது மாத்திரமல்ல, பிறப்புறுப்புகளில் தொற்றுநோய்களும் ஏற்படலாம். அதனால்தான் அவற்றை கழுவுவது முக்கியம். லேசான சோப்பு போட்டு கழுவுவது அல்லது பொடி வொஷ் அல்லது ஷவர் ஜெல் பயன்படுத்துவது அதை கழுவ சிறந்த வழியாகும்.

அது மட்டுமல்லாமல், உங்கள் கைகளையும் மறக்காமல் நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். புரிந்ததா!

 

சிறுநீர் கழித்துவிட்டு சிறிது நீரும் அருந்தவும்

வழக்கமாக, உடலுறவுக்குப் பின்னர் ஆண், பெண் இருவரும் கழிக்க வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். இது இயற்கையானது. ஆனால் அதையும் தாண்டி சிறுநீர் கழிப்பதில் ஒரு சிறப்பு நன்மை இருக்கிறது. இது உடலுறவின் போது சிறுநீர்க்குழாயில் நுழையும் பாக்டீரியாவை வெளியேற்றுகிறது. மேலும் தேவையற்ற சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கும். சிறுநீர் கழித்தபின் இன்னொரு கிளாஸ் நீர் குடிப்பதும் நல்லதுதான். உடலுறவில் ஈடுபடும் சோர்வுடன் இது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது. ஆனால் நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

சீர்படுத்தி வைக்க வேண்டாமா?

உடலுறவில் ஈடுபட்ட பின்னர் பெரும்பாலான நேரங்களில் படுக்கை மற்றும் அதை சுற்றியுள்ள பொருட்கள் எல்லாம் களைந்து இருக்கும். படுக்கையின் மீதுள்ள உறை அனைத்தும் கசங்கி இருக்குமே! அந்த இடத்தை சிறிது சரிசெய்வது நல்லது. குறிப்பாக நீங்கள் கொண்டம்களை பயன்படுத்தியிருந்தால் அவற்றைக் கட்டி ஒரு பொலித்தீன் பையில் இட்டு அவற்றை குப்பைத்தொட்டியில் போடவும்.

 

 எதை அணிந்து தூங்குவது?

உடலுறவுக்குப் பின்னர் ஒரு உடையும் இல்லாமல் படுக்கைக்குச் செல்வதும் பரவாயில்லை. ஆனால் மீண்டும் ஒரு பயணத்திற்குச் செல்வதற்கு முன்பு, குறிப்பாக பிறப்புறுப்புகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியை இறுக்கமாக்கும் உள்ளாடை, பேண்டீஸ், பிஜாமாக்கள் மற்றும் ஷோர்ட்ஸை அணிவது நல்லதல்ல. குளித்துவிட்டு வந்த பின்னர் உடலை சரியாக காய விடாததால் பாக்டீரியா தொற்று ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது அதிக உடல் திரவங்கள் சுரக்கின்றன. பின்னர் உராய்வுடன் அத்தகைய கீறல்கள் இருக்கலாம். அதனால் வெறுமனே பெட்ஷீட்டை போர்த்தி தூங்குவதே மிகச் சிறந்த விடயம்.

 

 வாழ்க்கைத் துணையுடன் உறவு முக்கியமானது

உங்கள் காதலன் அல்லது காதலியுடன் உடலுறவு கொண்ட பின்னர் இந்த பிரச்சினை வர வழியில்லை. ஆனால், உடலுறவுக்குப் பின்னர் ஒப்பந்தம் இடம்பெற்றதை போல நடந்துகொள்வது நல்லதல்ல. இதன் பொருள் இதுதான். உங்கள் இருவருக்கும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் செக்ஸ் வைத்துக்கொண்டால், நீங்கள் இருவரும் அதைத் தாண்டி ஒரு சாதாரண உறவைப் பெற விரும்பினால் பரவாயில்லை. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் உடலுறவு கொண்ட நபருடன் சில நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்பு கொள்வது மிகவும் முக்கியமானது. உடலுறவு கொண்ட பின்னர் எழுந்து வெளியே செல்வதற்கு தயாராகுவது அல்லது மொபைல், ரிமோட்டை கையில் எடுத்துக்கொள்வதை விட ஒரு எளிய உரையாடலாக அல்லது ஒரு அரவணைப்பாக அல்லது ஒரு முத்தமாக உறவை வைத்துக்கொள்வது நல்லது.