புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்த SONY நிறுவனத்தின் பயணம்

 

உலகை மாற்றிய தயாரிப்புகள் பலவற்றை நாம் அறிவோம். தோமஸ் அல்வா எடிசன், மார்கோனி, ஜான் லோகி பெயர்ட், சார்ள்ஸ் பபேஜ் மற்றும் பலர் மின்னணு கண்டுபிடிப்புகளுக்கு உலகப் புகழ் பெற்றவர்கள். ஆனால் பிற்காலத்தில் பாரிய மின்னணு நிறுவனங்களிடமிருந்து வந்த மின்சாதனங்கள் மூலம் எங்கள் வீட்டின் நிலையை மேம்படுத்த பாரிய பங்களிப்பு கிடைத்தது. எனவே மின்னணு உலகில் பிரபலமான SONY நிறுவனத்தின் கடந்துவந்த பாதை மற்றும் அதன் தயாரிப்புகளைப் பற்றி நாம் அறிவோம்.

 

ஆரம்பம் மற்றும் அடித்தளக் கல்

இபுகு மசாரு மற்றும் மொரிட்டா அகியோ இணைந்து நிறுவிய நிறுவனவே டோக்கியோ தொலைத்தொடர்பு பொறியியல் நிறுவனமாகும். (Tokyo Telecommunications Engineering Corporation). 1946 முதல், ஜப்பான் இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடியால், மக்கள் பொருட்களை வாங்கத் திக்குமுக்காடினார். ஆனாலும் இவர்கள் தனது தொழிலை 1958இல் சோனி என்ற பெயரில் தொடங்கினர். சோனியின் முதல் தயாரிப்பு ரைஸ் குக்கர் ஆகும். ஆனால் அது அந்த காலத்தில் அவ்வளவு தேவையாக இருக்கவில்லை. அந்த நேரத்தில் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் ஒன்றுதான் ரேடியோ பழுதுபார்ப்பாகும். எனவே ஆரம்ப நாட்களில், சோனி மக்களின் ரேடியோக்களை சரிசெய்து புதிய தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் உருவாக்கும் அனைத்து வேலைகளையும் செய்தது.

 

பொக்கெட் ரேடியோவில் இருந்து டிவி வரை வெளிவந்தது

சோனியின் பொக்கெட் ரேடியோ முதலில் நன்றாக விற்பனையானது. 1957இல் அவர்கள் கண்டுபிடித்த பொக்கெட் வானொலி மிகவும் பிரபலமானது. 1962 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஜப்பானிய கொடியின் கீழ் வர்த்தகம் செய்யத் தொடங்கியது. 1964 ஆம் ஆண்டில் சோனி MD-5 எனப்படும் டிரான்சிஸ்டர் டெஸ்க்டொப் செர்கியோலேட்டரை உருவாக்கியது. 1971 ஆம் ஆண்டில் ஜப்பானிய நிறுவனமான சோனி அவர்களின் முதல் தொலைக்காட்சியைத் தயாரித்தது. அக்காலத்தில் இருந்த மற்றைய  தொலைக்காட்சிகளை விட வண்ணத்தில் மிகவும் வெற்றிகரமாக இருந்த இந்த கலர் டிவி, சோனியின் பிற்காலத்தில் அதிகம் விற்பனையான தயாரிப்புகளில் ஒன்றாகும். டிரான்சிஸ்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த சோனி டிவி ஜப்பானிய பொருட்கள் குறித்த உலகின் கண்ணோட்டத்தையே மாற்றியமைத்தது.

 

வி.எச்.எஸ் (VHS) மற்றும் வாக்மேன்

சோனி 1975இல் வி.சி.ஆர் தொழில்நுட்பத்திற்கு திரும்பியது. ஆனால் ஆரம்பத்தில் வீடியோக்களை தயாரிக்கத் தவறிவிட்டது. ஆனால் 1988ஆம் ஆண்டில், அவர்கள் வி.எச்.எஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர். இப்போது வி.எச்.எஸ் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்றாலும் 1990களில் வி.எச்.எஸ்ஸை வாடகைக்கு விற்ற இடங்களும் இலங்கையில் இருந்தன. சோனியின் மிகவும் பிரபலமான தயாரிப்பு வாக்மேன் போர்ட்டபிள் ரேடியோவாகும். இப்போது பிரபலமாக இருக்கும் சூப்பர் மொடல் மொபைல்களை போலத்தான் அந்த காலத்தில் பணக்காரர்களின் கைகளில் இது இருப்பதே ஒரு வகை பெருமையாக இருந்தது. அப்போதிருந்த வாக்மேனில் கேசட் பீஸ்களைத்தான் போடமுடிந்தது.

 

கொம்பாக்ட் டிஸ்க் ரோல்

1970-80 களில் உலகில் இறுவட்டுக்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை PHILIPS நிறுவனம் கொண்டிருந்தது. இதன்போது ஜப்பானில் தொழில்நுட்பம் மிகவும் வெற்றிகரமாக இருக்கவில்லை. எனவே சோனி பிலிப்ஸுடன் இணைந்து தற்போதைய அளவிலான ஒரு சிடியை அறிமுகப்படுத்தினர். இன்றைய டிவிடிகள், சிடிக்கள் போன்றவை ஒரே தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாக தயாரிக்கப்படுகின்றன. அதனுடன் ஒரு சீடி போடக்கூடிய வாக்மேன் உருவாக்கப்பட்டது.

 

திரைப்படங்கள் மற்றும் டியோ

1985ஆம் ஆண்டில் சோனி, அப்போதிருந்த மிகப்பெரிய ரெக்கோர்டிங் நிறுவனமான சிபிஎஸ்ஸை வாங்கியது. சோனி பின்னர் கொலம்பியா பிக்சர் அண்ட் என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வாங்கியது. இன்றுவரை, கொலம்பியா பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சோனியின் தலைமையின் கீழ் மிகப்பெரிய படங்களைத் தயாரிக்கின்றது.

 

பிளேஸ்டேஷன்

பிளேஸ்டேஷன் வீடியோ கேம் கன்சோல் இப்போது சோனியின் சிறந்த விற்பனையான தயாரிப்புகளில் ஒன்றாகும். இது 1994இல் பிறந்தது. அந்த நேரத்தில், சோனி குழுவின் வணிகம் அந்த அளவிற்கு நல்ல இடத்தில் இல்லை. பின்னர், சோனி ஒன்லைன் ரியாலிட்டி கேம்களுக்கான ஒரு நல்ல சந்தையையும் உருவாக்கியது. இந்த பிளேஸ்டேஷன் மாதிரிகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இப்போதெல்லாம் பல சோனி பிளேஸ்டேஷன் விளையாட்டாளர்களிடையே பிளேஸ்டேஷன் ஒரு வீட்டுப்பொருளாகவே மாறியுள்ளது.

 

சோனி கேமராக்கள்

இன்று சோனியின் மிக சக்திவாய்ந்த தயாரிப்புக்களில் ஒன்றாக கேமரா காணப்படுகின்றது. கேமரா தொழில்நுட்பம் இன்றும் சீனாவில் அவ்வளவு முன்னேறவில்லை. தற்போது கிடைக்கக்கூடிய டாப்-ஆஃப்-லைன் ஸ்மார்ட்போன் கேமராக்கள் பெரும்பாலானவை சோனியின் லென்ஸினால் தயாரிக்கப்படுகின்றன. தனி பொக்கெட் கேமராக்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் உலகில் சோனிக்கு ஒரு தனியிடம் உண்டு. இந்த கேமரா சென்சார்கள் மற்றும் கேமராக்களின் உற்பத்தி சோனிக்கு இன்னும் பெரிய வருவாயைத் தருகிறது.

இன்றும், சோனியின் தயாரிப்புகளில் 30% ஜப்பானில் விற்கப்படுகின்றன. சோனியின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதன் சமீபத்திய சில தயாரிப்புகள் அதிக சந்தைப் பங்கை ஈர்க்கவில்லை. ஆனால் எங்கள் வீடுகளில் நாம் பயன்படுத்தும் சில விடயங்களை மேம்படுத்த சோனியின் பங்களிப்பு அற்பமானது அல்ல. எனவே புதிய கண்டுபிடிப்புகள் தோன்றியதோடு, இது போன்ற பெரிய நிறுவனங்களும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சந்தையை உருவாக்குகின்றன.இவை உலகிற்கு அளிக்கக்கூடிய ஒரு சிறந்த சேவை என்றே குறிப்பிட்டாக வேண்டும்.