சோஷியல் மீடியாக்களுக்கு அடிமையாவதால் இழக்கப்படும் விடயங்கள்

 

உலகெங்கும் சமூக வலைத்தளத்தில் கண்மூடித்தனமாக மூழ்கிக் கிடக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் முதலில் மொபைலை கையில் எடுத்துக்கொண்டு, மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து சோஷியல் மீடியா ப்ரோபாய்ல்ஸ்களுக்கும் சென்று மெசேஜ் நோட்டிபிகேஷன் வந்துள்ளதா என்று பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையில் கைவைக்கின்றனர். அதேபோலவே படுக்கைக்கு செல்வதற்கு முன்பும், மொபைலில் இருக்கும் அனைத்து சோஷியல் மீடியாக்களில் ஒரு விசிட்டை போட்டு விட்டு வருவோம். இப்போதெல்லாம் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படிப்பதற்கு பதிலாக வாட்சப் மெசேஜுகளை வாசிக்கும் கூட்டம் அதிகம். நாட்டிலும் உலகிலும் என்ன நடக்கிறது என்பதையும் உடனுக்கூடன் சோஷியல் மீடியாக்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் இந்த சோஷியல் மீடியாக்களில மூழ்கிக் கிடப்பதால் எத்தனையோ விடயங்களை தவறவிட்டிருப்பீர்கள். அதுபற்றி இன்று பார்ப்போம்.

 

உண்மைச் செய்தி

 

சோஷியல் மீடியாக்களில் பெரும்பாலும் தர்க்க ரீதியாகவும் தகவல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட ஒரு விடயமாக இது உள்ளது. இப்போதெல்லாம் ஒவ்வொரு பெரிய தொலைக்காட்சி சேனல், ரேடியோ சேனல், செய்தித்தாள் மற்றும் வெப்சைட்டுக்கள் போன்ற பல தரப்பினர் தமக்கான பேஸ்புக் உள்ளிட்ட பல சோஷியல் மீடியாக்களில் டெய்லி அப்டேட்களை வழங்குகின்றன. அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்திகள். நம்பக்கூடியவை. ஆனால், சோஷியல் மீடியா செலிபிரிடீஸ் பகிரும் செய்திகள், சோஷியல் மீடியாக்களில் மக்கள் நம்பும் செய்திகளுடன் சேர்ந்த மீம்ஸ்களை பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை போலியானவை.

அதனால்தான் சோஷியல் மீடியாக்களுக்கு அடிமையாக இருப்பது உண்மையான செய்திகளை உங்களுக்கு சரியான முறையில் வருவதை தவிர்க்கச்செய்யும். ஆனால் இன்னும் ஒரு விடயமும் இதில் உள்ளது. சோஷியல் மீடியாக்கள் இல்லாவிட்டால், ஒரு செய்தி சேனலையோ அல்லது ஒரு செய்தித்தாளையோ பார்த்து உண்மையான செய்திகளை பெற முடியாது. ஆகவே நம்பகமான பக்கங்களில் இருந்து மாத்திரம் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

 

உண்மையான கருத்து

இதுவும் மேலே சொன்ன கதையைப் போன்றதுதான். இப்போது சோஷியல் மீடியாக்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் உள்ளனர். அவர்கள் சில காரணங்களுக்காக சில சிக்கல்களை அல்லது சில விடயங்களை போஸ்ட் போட்டு சமூகமயமாக்குகின்றனர். பெரும்பாலான நேரங்களில் அதே சோஷியல் மீடியாக்களில் செல்வாக்கு இல்லாதவர்கள் அத்தகைய செல்வாக்கு உள்ள நபர் சொல்வதைச் செய்கிறார்கள். அந்த கருத்தை பகிர்ந்து வெளியிடுகிறார்கள். இதனால் ஒருவரது சொந்த கருத்து வெளிப்படுவது இல்லாமல் போகிறது. குறைந்தபட்சம் சோஷியல் மீடியாக்களில் சிக்கியுள்ள மக்களுக்கு அந்த இன்புளுவென்சர்ஸ் கூறும் கருத்தை அறிந்து அதில் இருக்கும் தகவல் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்கக்கூட நேரம் இருப்பதில்லை.

அதனால்தான் நீங்கள் சோஷியல் மீடியாக்களில் இருந்து சற்றே விலகி இருந்தால், ஏதாவது பிரச்சினை அல்லது சிக்கல்கள் ஏற்பட்டவுடன் அதை புரிந்து அறிந்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்தால் முதலில் உங்கள் சொந்த கருத்தை உருவாக்க உங்களுக்கு அதிக இடம் கிடைக்கும்.

 

உண்மையான மேலதிக தரவுகள்

இது நேரத்தை வீணடிக்கும் ஒரு விடயமாகும். இப்போதெல்லாம் வேலை கிடைத்தாலும் அதில் போட்டித்தன்மை அதிகமாக இருக்கும். பாடசாலை கல்வி, பல்கலைக்கழக பட்டம் மாத்திரம் இருந்தால் உங்களுக்கான தொழில் கிடைப்பதும் கடினம். கிடைத்தாலும் அது நிரந்தரமும் ஆகிவிடாது. அதற்கும் மேலாக, நீங்கள் உங்கள் தகுதிகளை மேம்படுத்தி தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒன்லைனில் கூட கல்விசார் விடயங்களுக்கு பங்களிக்கும் ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் அந்த இடங்களை தேடிக் கண்டுபிடித்தாலும், அத்தகைய இடத்திலிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால் நீங்கள் உங்கள் முழு நேரத்தையும் ஒன்லைனில் சோஷியல் மீடியாக்களில் வீணாக செலவிட்டால், ஒன்லைனில் கற்றல் பற்றி சிந்திப்பதில் அர்த்தமில்லை.

 

உண்மையான நேரம்

இந்த உலகில் பெரும்பாலான மக்கள் தினமும் பந்தயத்தில் ஓடுவதை போல நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அத்தகைய வாழ்க்கையை விட்டு நிம்மதியாக இருக்க நேரம் தேவை. அதாவது ஒரு புத்தகத்தை சுதந்திரமாகப் படிக்க, பொறுமையாக இரசித்து ருசித்து ஒரு கப் டீ அல்லது கோப்பியை குடிக்க, திறந்த வெளியில் உட்கார்ந்து வானத்தைப் பார்க்க போன்ற அமைதியான விடயங்கள் பலவுள்ளன. அதுபோல் அமைதியாக இருக்க வேண்டிய நேரம்தான் இது. ஆனால் சோஷியல் மீடியா எடிக்ஷன் உங்களை ஒரு கணம்கூட நிம்மதியாக சுதந்திரமாக இருக்கவிடாது. நீங்கள் மிகவும் சுதந்திரமாக உணர உட்கார்ந்தாலும் மொபைலை எடுத்துக்கொண்டு பேஸ்புக்கிற்கு செல்வீர்கள். தூங்க படுக்கைக்குச் சென்றாலும் இதே நிலைதான்.

சமூக ஊடகங்களின் காரணமாக ஓய்வெடுக்க ஒரு கணம் கூட இல்லை என்பதை நீங்கள் உணரும் போது மிகவும் தாமதமாகிவிடும்.

 

உண்மையான மனிதர்கள்

இப்போதெல்லாம் இதுவும் ஒரு உண்மையான பிரச்சினை. இன்று எத்தனை பேருக்கு உண்மையான நண்பர்கள் உள்ளனர்? நீங்கள் பேஸ்புக்கில் சந்திக்கும் நண்பர்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நடப்பது என்னவென்றால், நீங்கள் பேஸ்புக்கில் சந்திக்கும் நபர்கள் நம்பத்தகாத இடத்தில், உங்கள் வாழ்க்கையில் உண்மையான எதையும் சேர்க்க உதவ மாட்டார்கள். அவர்களிடமிருந்து உண்மையான நடப்பையும் பெற முடியாது.

ஆனால் நீங்கள் சமூக ஊடகங்களிலிருந்து விடுபட்டு, நிஜ உலகில் உண்மையான நபர்களுடன் பழகத்தொடங்கினால், நீங்கள் அவ்வகையான வாழ்க்கையை தவறவிட்டு வாழ்ந்து வந்தீர்கள் என்று உணர்வீர்கள்.

 

உண்மையான தனியுரிமை

இந்த நாட்களில் சோஷியல் மீடியாக்களினால் நிலவி வரும் பாரிய பிரச்சினை என்றும் இதனை கூற முடியும். அது தனியுரிமையைப் பாதுகாப்பதாகும். அதாவது சொந்த பிரைவசியை இழந்து வருவதாகும். இப்போதெல்லாம், கிட்டத்தட்ட எல்லோரும் சோஷியல் மீடியாவிற்குள் தனது காலை உணவு முதல் இரவு படுக்கைக்குரிய நேரம் வரை பதிவிடுகின்றனர். எங்கு சென்றாலும் அனைத்தையும் சோஷியல் மீடியாக்களில் அப்டேட் செய்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களது அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் சகல விடயங்களையும் முன்பின் பழக்கமற்றவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். இது பிற்காலத்தில் எமக்கு எதிரான வகையில் தீங்கு விளைவிக்கும் அளவுக்கும் செல்லக்கூடும்.

சமூக ஊடக அடிமையாதல் காரணமாக ஒருவர் எவ்வாறு தனியுரிமையை இழக்கிறார் என்பதை உண்மையாக புரிந்து கொள்ள, தனது பிரைவசி தனக்கு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.