அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 41 இலங்கையை விட பெரியவை. அதாவது இலங்கையை விட அளவில் பெரிய 41 மாநிலங்களை அமெரிக்கா கொண்டிருக்கிறது. வட அமெரிக்கா என்பது நாம் ஹொலிவுட் திரைப்படங்களில் பார்ப்பதை போல முற்றியும் மாடிக் கட்டிடங்களால் சூழ்ந்த நகரம் மாத்திரம் அல்ல, மாறுபட்ட தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் இயற்கை அழகைக் கொண்ட ஒரு இடமாக உள்ளது. அதையும் தாண்டி, அமெரிக்காவில் பார்க்க மற்றும் அனுபவிக்க வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன. அது பற்றிய தகவல்களை இன்று உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம்.
கலிபோர்னியா
கலிபோர்னியா அதன் மாறுபட்ட அனுபவத்திற்கு பெயர் பெற்றது. கலிபோர்னியாவில் ஒரு கடற்கரை சொர்க்கமும் அடங்கியுள்ளது. மேலும், யோசெமிட்டி தேசிய பூங்கா மற்றும் கோல்டன் கேட் பாலம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளன. சியரா நெவாடா மலைகள், மொஹாக் பாலைவனம் மற்றும் சகோயா தேசிய பூங்கா ஆகியவை இயற்கையில் தன்னை மெய்மறந்து கிடக்கும் ஆர்வலர்களுக்கு பொருத்தமாக இருக்கும். கலிபோர்னியா மிகவும் விலையுயர்ந்த நகரம் மற்றும் மாநிலம் என்றாலும், மக்கள் கலிபோர்னியாவை அனுபவிக்க விரும்புகிறார்கள். லொஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
மொன்டானா
ராக்கி மலைகளை ஒட்டியுள்ள மொன்டானா, பனிப்பாறைகளுக்கென்றே பிரபலமானது. மொன்டானாவில் சுமார் 700-800 கி.மீ வரையிலான மக்கள் நடக்கக்கூடிய நடை தடங்கள் உள்ளன. அவை இயற்கையை இரசிக்க பயன்படுத்தப்படுகின்றன. மொன்டானா கனடாவுடன் இணைக்கும் மற்றும் நீண்ட குளிர்காலத்தைக் கொண்ட ஒரு நகரம். லூயிஸ் மற்றும் கிளார்க் வெர்னெஸ் தேசிய பூங்காக்களில் உள்ள ஹிரிகல் குகைகளும் பார்வையிடத்தக்கவை. ராக்கி மலைகள் அருகே, மொன்டானா ஒரு தனித்துவமான கண்குளிர்ச்சியான சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது.
அலாஸ்கா
முன்பெல்லாம் ரூபவாஹினி தொலைக்காட்சியில் “வைல்ட் அமெரிக்கா” எனும் நிகழ்ச்சியில் அதிகம் இடம்பெற்ற ஒரு இடம்தான் அலாஸ்கா. வட அமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் மெக்கின்லி அலாஸ்காவில் அமைந்துள்ளது. அலாஸ்கா மலைகள் தவிர, அடர்ந்த காடுகள், பாலைவனங்கள் மற்றும் ஆர்க்டிக் பிரதேசங்களும் உள்ளன. அலாஸ்காவின் வரைபடத்தின்படி, தீபகற்பத்தின் ஒரு பகுதி ஜப்பானுக்கு மிக அருகில் உள்ளது. இதன் விளைவாக, அலாஸ்காவில் சுமார் 34,000 கி.மீ அளவிலான கடற்கரையும் உள்ளது.
உட்டா
அமெரிக்க திரைப்படங்களில் இடம்பெறக்கூடிய சிவப்பு மலைகள் மற்றும் சிவப்பு சிகரங்கள் தரையிலிருந்து அழகான வடிவங்களில் மேலே உயர்ந்து நிற்கும் ஒரு விசித்திரமான பகுதி உள்ளது. அந்த பகுதி பெரும்பாலும் உட்டா பகுதியாகத்தான் இருக்கும். உட்டாவில் உள்ள சியோன் தேசிய பூங்கா அதன் சிவப்பு சிகரங்களுக்கும் சேற்று நிலப்பரப்புகளுக்கும் பிரபலமானது. இந்த சிவப்பு மண்ணில் பண்டைய டைனோசர் புதைபடிவங்களும் காணப்படுகின்றன. அசாதாரண நிலப்பரப்புக்கு பிரபலமான உட்டா, உலகின் மிகவும் பிரபலமான பாறை அமைப்புகளில் ஒன்றாகும். மேலும் சென்ற வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் சிவப்பு மலைகளால் சூழப்பட்ட பாலைவன பிரதேசத்திற்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட மோனோலித்தும் இந்த உடா பிரதேசத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
அரிசோனா
அரிசோனா, இந்த வார்த்தைக்கான முழுமையான அர்த்தம் ஒரு வறண்ட பாலைவன பகுதி என்று பொருள்படும். இங்கு ஆண்டுக்கு நாற்பது நாட்கள் மட்டுமே மழை பொழிகிறது. அரிசோனா அமெரிக்காவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சிவப்பு இந்தியர்களின் இல்லமான அரிசோனா, கிராண்ட் கேன்யன் மற்றும் பல வண்ணமயமான பாலைவனங்களின் தாயகமாகும். அரிசோனா பாலைவனம் வழியாகச் செல்லும் சாலை 66, அமெரிக்காவின் மிக அழகிய சாலைகளில் ஒன்றாகும்.
ஹவாய்
50ஆவது மாநிலமான ஹவாய், அமெரிக்க நிலப்பகுதிக்கு நிலப்பரப்பின் மூலமாக இணைக்கப்படவில்லை. ஜப்பானிற்கு பக்கத்தில் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுகள் இன்னும் தனித்துவமான கலாச்சார அம்சங்களைக் கொண்டுள்ளன. ஹவாய் தீவு உள்ளூர் தாவரங்கள், மரங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி வெடிக்கும் எரிமலைகள் ஹவாயிலும் காணப்படுகின்றன. ஹவாய் தீவுகளில் தான் லோவ்ஸ் என்ற முழு உலகிலும் உள்ள மிகப்பெரிய எரிமலையைக் கொண்டுள்ளன. ஸ்னோர்கெலிங் மற்றும் டைவிங் போன்ற கடற்கரை நடவடிக்கைகளுக்கு ஹவாய் பிரபலமானது. கடற்கரையை இரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வெவ்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் ஹவாய் கடற்கரைகளின் பக்கம் இழுக்கப்படுகிறார்கள்.
கொலராடோ
வனவிலங்குகள் மற்றும் வனங்களில் இலைகுலை, மரமட்டைகள் என்று வரும்போது அமெரிக்காவின் மிக அழகான இடங்களில் கொலராடோ ஒன்றாகும். கொலராடோவின் மரங்களும் பூக்களும் பருவங்களுடன் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பார்ப்பது அழகாக இருக்கிறது. கொலராடோ அதன் பாறைகள் மற்றும் ஆழமான குகைகளுக்கு பிரபலமானது. குளிர்கால பனி விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தப்படும் கொலராடோ, பேய் நகரங்கள், ஒரு காலத்தில் பெரும்பாலும் மக்கள் வசிக்காத தனிமைப்படுத்தப்பட்ட நகரங்களைக் கொண்டிருந்தன.