இலங்கை சுதந்திரம் பெற்றபோது ஆசியாவில் இரண்டாவது பொருளாதாரம் வளம் மிக்க நாடாக எமது நாடு காணப்பட்டது. அதன்போது ஜப்பானுக்கு இரண்டாவதாக இருந்தோம் என்று கூறப்படுகின்றது. சிங்கப்பூரில் உள்ள லீ குவான் யூ தனது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையை ஒரு முன்மாதிரியாகக் கருதினார் என்றும் கூறுகின்றனர். எனினும், எமது நாட்டிற்கு சரியான தலைமை கிடைக்காமையே நாட்டின் பின்னடைவிற்கு காரணம் என்பது தெளிவாகின்றது. ஏழை நாடுகளை சிறந்ததாக மாற்றுவதற்கு முன்னோடியாக இருந்த சில தலைவர்களைப் பற்றி இன்று நாம் பேசப்போகிறோம். ஆனால் இந்த பட்டியலில் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களை மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுத்தோம்
நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாகவும் தென்னாப்பிரிக்காவை முற்றிலுமாக மாற்றியமைத்த தலைவராகவும் உலகம் முழுவதும் போற்றப்படுகிறார். அப்போதும் தென்னாப்பிரிக்கா ஒரு வளர்ந்த நாடாக இருந்தது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், நாட்டின் பெரும்பான்மையான கறுப்பினத்தவர்கள் மிகவும் ஏழைகளாக இருந்தனர். அதே நேரத்தில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்கள் நாட்டின் வளங்களை சுரண்டிக்கொண்டிருந்தனர். இந்த அமைப்பை முற்றிலுமாக மாற்ற மண்டேலா நிர்வகித்தார். இதன் காரணமாக பல கறுப்பினத்தவர்கள் மண்டேலாவை ஒரு தெய்வமாக வணங்குகிறார்கள். நெல்சன் மண்டேலாவின் தலையீடு இதுவரை வெள்ளையர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பல வேலைகளை கறுப்பினத்தவர்களுக்கும் வழங்கியது.
ஹேலி செலாஸி
ஹேலி செலாஸி உலகின் மிகப் பழமையான வம்சங்களில் ஒன்றான மற்றும் மிகப் பழமையான நாடான எத்தியோப்பியாவில் பிறந்தார். மேற்கத்தேய ஏகாதிபத்தியத்தால் கைப்பற்றப்படாத ஒரே ஆபிரிக்க நாடு எத்தியோப்பியா. இரண்டாம் உலகப் போரின்போது, எத்தியோப்பியா பல ஆண்டுகளாக இத்தாலியிடம் சரணடைந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இறுதியில் அப்போதைய பேரரசர் ஹேலி செலாஸி எத்தியோப்பியாவை விரைவான வளர்ச்சிக்கு இட்டுச் சென்றார். கல்வியில் செழிப்புற்று காணப்படும் எத்தியோப்பியாவில் பாடசாலை கல்வியை இவரே அறிமுகப்படுத்தினார்.
க்வாமே நகமுரா
2030ஆம் ஆண்டிற்குள் கானாவை முதன்மையான வளர்ந்த ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக மாற்றுவதே கானா மக்களின் ஒரே நம்பிக்கையாகும். அதற்காக அவர்கள் பாரிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கானாவுக்கு இந்த இலக்கை வழங்க 1957 முதல் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கானாவின் சுதந்திரத்தை பிரிட்டனிடம் இருந்து பெற முன்னோடியாக இருந்தவர் குவாமே நகமுரா. கானாவில் பல ஆண்டுகளாக மிகப்பெரிய பிரச்சினைகளாக காணப்பட்ட வறுமை மற்றும் பசியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஒரு பாரிய பொருளாதார அபிவிருத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தோமஸ் சங்கரா
மார்க்சியத்தை நம்பிய புரட்சியாளரான தோமஸ் சங்கரா 1983இல் புர்கினா பாசோவின் ஜனாதிபதியானார். அவர் ஆப்பிரிக்காவில் சே குவேரா என்றும் அழைக்கப்படுகிறார். மடகஸ்கரில் ஒரு சிப்பாயாக பணியாற்றிய பின்னர், 1980இல் மடகாஸ்கர் இளைஞர்கள் எவ்வாறு அரசாங்கத்தை கவிழ்த்தார்கள் என்ற அனுபவத்தின் அடிப்படையில், தனது தாயகமான அப்பர் வோல்டாவுக்கு (அவரது ஆட்சியின் போது நாட்டின் பெயரை புர்கினா பாசோ என்று மாற்றினார்) திரும்பினார். அப்போதிருந்து, அவரது ஒரே குறிக்கோள் அவரது தாயகத்தின் தலைவிதியை மாற்றுவதாகும். 1984இல் அவர் படுகொலை செய்யப்பட்ட போதிலும், அவரது சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் புர்கினா பாசோவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தன.
கென்னத் கவுண்டா
கென்னத் கவுண்டா 1964இல் சாம்பியாவின் முதல் ஜனாதிபதியானார். 1991இல் பதவி நீக்கம் செய்யப்படும் வரை அவர் ஜனாதிபதியாக இருந்தார். அவரது ஆட்சியை சிலர் விமர்சிக்கையில் ஜாம்பியர்களில் பெரும்பாலானோர் அவரது ஆட்சி நாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறித்தது என்று கூறுகிறார்கள். அதுவரை, நாட்டின் பெரும்பான்மையான வளங்கள், குறிப்பாக எண்ணெய் வளம் வெளிநாட்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டன. ஆனால் கென்னத் கவுண்டா இந்த நிறுவனங்களில் பெரும்பான்மை பங்குகளை பெறுவதில் விவேகமானவர். ஆனால் இதன் காரணமாக, கவுண்டா பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. இதன் விளைவாக, அவரது பொருளாதாரக் கொள்கைகளில் சில தோல்வியடைந்தன.
எலன் ஜான்சன்
இவர் ஆபிரிக்க நாடான லைபீரியாவின் முதல் பெண் ஜனாதிபதியானார். 2006 முதல் 2018 வரை பணியாற்றினார். சிலர் இவரை ஆபிரிக்காவின் இரும்பு பெண்மணி அல்லது அயர்ன் லேடி என்று அழைக்கிறார்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், தனது நாட்டில் ஊழல் மற்றும் நாடுகடத்தலுக்கு எதிராக போராடினார். இறுதியில், தனது அரசியல் வாழ்க்கையின் போது, அவர் தனது நாட்டின் தலைசிறந்த தலைவரானார். மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார்.
சேட்சே காமா
செட்ஸே காமா Botswanaவின் ஜனாதிபதியாகும் போது உலகின் மூன்றாவது ஏழ்மையான நாடாக அது காணப்பட்டது. முழு நாட்டிலும் இருபத்து இரண்டு பட்டதாரிகள் மட்டுமே இருந்தனர். காமாவிற்கு இது ஒரு பாரிய சவாலாக காணப்பட்டது. அவர் எப்படியாவது அந்த சவாலை சமாளித்தார். அவரது சமகால ஆபிரிக்க தலைவர்கள் முறையில் மார்க்சியத்தின் மீது ஈர்க்கப்பட்டாலும், காமா சுதந்திர பொருளாதாரக் கொள்கைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். இது போட்ஸ்வானாவில் மனித உரிமைகளுக்கான போதுமான வாய்ப்பையும் வழங்குகின்றது. நாட்டின் வளங்களான தாமிரம், வைரங்கள் போன்றவற்றின் வருமானம் நாட்டின் உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்யப்பட்டது.