சமீபத்திய வரலாற்றில் சுதந்திரம் பெற்ற நாடுகள்

 

பல கெடுபிடிகளுக்கு பின்னர் நாடுகள் சுதந்திரம் பெறுகின்றன. சில நேரங்களில் நாட்டைப் பெறுவதற்கு பெரும் போர்களை அறிவிக்கின்றனர். சில நேரங்களில் நாடுகளுக்கு இடையில் ஒரு பேச்சுவார்த்தையும் இன்றி சுதந்திரம் வழங்கப்படுகிறது. உலக அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய அடிப்படை அலகுகளாக நாடுகள் காணப்படுகின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்து இப்போது சுமார் 75 ஆண்டுகள் ஆகின்றன. அந்த நேரத்தில் சுதந்திரம் என்பது மக்கள் எதிர்பார்த்த ஒன்று. சுதந்திரமில்லாவிட்டால் அடிமை வாழ்க்கையே வாழ வேண்டும்.

 

பலாவு (Palau)

பலாவ் என்பது இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸுக்கு அருகிலுள்ள பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவாகும். இந்த தீவுகள் சுமார் 21,000 மக்கள் தொகையை மாத்திரம் கொண்டுள்ளன. இது உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்த நாடு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கு கீழ் இருந்தது. ஆனால் 1994இற்கு பிறகு அவர்களுக்கென்று சொந்த ஆட்சிமுறை கிடைத்தது.

 

 கிழக்கு திமோர் (East Timor)

இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய தீவு நாடு. அந்த நாடு மட்டும் சுமார் 17,000 தீவுகளைக் கொண்டுள்ளது. எனவே கிழக்கு தீமோர் இந்த தீவுக்கூட்டத்தின் ஒரு சிறிய பகுதி. கிழக்கு திமோர் நீண்ட காலமாக சுதந்திரத்திற்காக போராடியது. கிழக்கு திமோர் 1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடு. இந்த நாடு 2002ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.

 

மொண்டினீக்ரோ மற்றும் செர்பியா (Montenegro and Serbia)

சோவியத் யூனியன் பலவீனமடைந்த பின்னர் யூகோஸ்லாவியாவில் உருவாகிய பல புதிய நாடுகளில் செர்பியாவும் ஒன்றாகும். மொண்டினீக்ரோவில் சுமார் 600,000 மக்கள் தொகை உள்ளது. மொண்டினீக்ரோ 2006இல் செர்பியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது.

 

கொசோவோ (Kosovo)

பால்கன் நாட்டைச் சேர்ந்த கொசோவோ, 2008 பெப்ரவரி 17ஆம் திகதி சுதந்திரம் பெற்றது. அந்த நாடு செர்பியா நாட்டின் பிடியிலிருந்து தான் சுதந்திரம் பெற்றது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1990இல் செர்பியா யூகோஸ்லாவியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது. இந்த நாடு தனது சுதந்திரத்தை அறிவித்திருந்தாலும், செர்பியாவும் பிற நாடுகளும் இந்த நாட்டை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்த நாட்டில் 1.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

 

தெற்கு சூடான் (South Sudan)

தெற்கு சூடான் நீண்ட அழிவுகரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு சூடானில் இருந்து 2011இல் சுதந்திரம் பெற்றது. தெற்கு சூடான் எல்லையில் இன்னும் போர் நடைபெறுகின்றது. இந்த நாட்டின் மக்கள் தொகை 12.2 மில்லியன் ஆகும். இந்த நாட்டில் இடம்பெறும் மோதல்களால் 50,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் மேலும் 1.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜெர்மனி (Germany)

ஜெர்மனி ஒரு வரலாற்று பெயர்பெற்ற நாடு. அப்படியிருக்க அது எப்படி ஒரு புதிய நாடாக மாறும்? இரண்டாம் உலகப் போரினால் ஜெர்மனி இரண்டாக பிரிந்தது. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியாகப் பிரிக்கப்பட்ட ஜெர்மனி, பேர்லின் சுவரை உடைத்து 1990 இல் மீண்டும் இணைந்தது. அப்போதிருந்து முழு நாடும் தற்போது ஒரு ஜெர்மனியாக இருந்து வருகிறது. கொரியாவும் இதே போல ஒரு பிரச்சினையைக் கொண்ட ஒரு நாடு, ஆனால் இதுவரை அவை சேரவில்லை. கொரியா இன்னும் வடக்கு மற்றும் தெற்காக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலப்போக்கில் இரு கொரியாக்களும் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்று கொரியர்கள் நம்புகிறார்கள். ஜெர்மனி கிழக்கு மற்றும் மேற்கு எனப் பிரிக்கப்பட்டபோது, ​​கிழக்கு சோவியத் ஆட்சியின் கீழும், மீதமுள்ள மேற்கு நாடுகள் முதலாளித்துவத்திற்கு நெருக்கமாகவும் இருந்தன.

 

நமீபியா (Namibia)

நமீபியா தென்னாபிரிக்காவின் எல்லையிலும் அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையிலும் உள்ள ஒரு நாடு. இந்த நாடு சுதந்திரம் பெற 22 ஆண்டுகள் போராடியது. இறுதியில் 1990இல் சுதந்திரம் பெற்றது. இந்த நாடு 1890 முதல் 1915 வரை ஒரு ஜெர்மன் கொலனியாக இருந்தது. அந்த நேரத்தில் வெளிநாட்டுக் கட்சிகள் இந்த நாட்டில் உள்ள வைரங்களை விரும்பின. நமீபியாவில் இன்னும் ஜெர்மன் மொழி பேசும் அந்த கலாச்சார செல்வாக்கைக் கொண்டுள்ளது.

எனவே இதிலிருந்து சுதந்திரம் பெற்ற சமீபத்திய சில நாடுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இது போன்ற மிக முக்கியமான உண்மைகளை சுருக்கமாக அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.