வியாபாரம் செய்வதை விட தொழில் செய்வதில் உள்ள நன்மைகள்

 

ஒரு தொழிலை செய்வதை விட சொந்தமாக ஒரு வியாபாரம் செய்வதில் உள்ள நன்மைகளை பற்றி அண்மையில் உங்களுக்கு பல தகவல்களை வழங்கியிருந்தோம். அதற்கு மறுபக்கமும் உள்ளது. தொழில் இல்லாமல் வியாபாரத்தை தேர்ந்தெடுப்பதில் நன்மை தீமைகள் உள்ளன. மேலும், ஒரு வியாபாரம் செய்யாமல் வேறொருவரின் கீழ் கூட, காலையிலும் மாலையிலும் வந்து செல்லும் ஒரு தொழிலை செய்வதில் நன்மைகள் உள்ளன. இந்த இரண்டு விடயங்களுக்கும் பொதுவான நன்மை போல தீமைகள் உள்ளன என்றும் நாங்கள் கூறினோம். எனவே இன்று நாம் பேசப்போவது இதுதான். பலர் ஒரு வியாபாரத்தை தொடங்கி அதில் இறங்குவதை காட்டிலும் ஒரு தொழிலை செய்ய விரும்புவதற்கான காரணங்கள் அல்லது ஒரு வியாபாரத்தை விட ஒரு தொழிலை செய்வதன் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

நிலையான வருமானம்

வியாபாரம் அல்லது தொழில் எதுவாக இருந்தாலும் நாங்கள் அடிப்படையில் வருமானத்தையே எதிர்பார்க்கிறோம். எனவே ஒப்பீட்டளவில் இந்த விடயத்தில், ஒரு இடத்தில் செய்யும் தொழிலின் வருமானம் ஒரு சொந்த வணிகத்தில் கிடைக்கும் வருமானத்தை விட நிலையானது. ஒரு வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் பெரும்பாலும் ஒரு தொழிலின் மூலம் கிடைக்கும் மாத சம்பளத்தை விட அதிகமாக இருக்கும். ஆனால் வியாபாரம் என்பது எப்போதுமே இலாபம் கிடைக்கக்கூடியதல்ல. வியாபாரம் செய்வதில் இலாபம் மற்றும் இழப்புகளை எதிர்பார்க்க வேண்டும். ஆனால் ஒரு தொழில் செய்யும் போது அத்தகைய ஆபத்து இல்லை. நிறுவனம் நட்டத்தில் இருப்பதால் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதில்லையே. எனவே நீங்கள் உங்கள் சம்பளத்தை வைத்து திட்டமிடலாம் மற்றும் உங்கள் மாத வருமானத்தை பற்றிய அச்சமின்றி வேலை செய்யலாம்.

 

 பேரழிவு காலங்களில்கூட மாறாத வருமானம்

அனர்த்தம் போன்ற கடினமான காலங்களிலும் வருமானம் வருவது நன்மையான விடயம். இப்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவியதால், உலக நாடுகளின் அன்றாட நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், உலகெங்கிலும் உள்ள பல வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தங்கள் சொந்த வியாபாரத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன்னெப்போதையும் விட உதவியற்றவர்களாக தினசரி சாப்பாட்டிற்கும் கஷ்டப்படுபவர்களாக இருப்பதைக் கண்டோம். ஆனால் தொழில் செய்தவர்களில் பெரும்பாலோர் வழக்கம் போல் சம்பளம் பெற்றனர். சில நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனாலும் அடிப்படை சம்பளத்தையாவது வழங்கினார்கள்.

 

 மன நிம்மதி

எல்லாவற்றிற்கும் மேலாக அனைவரும் விரும்பும் ஒரு விடயமாக மனநிம்மதி காணப்படுகின்றது. ஆனால் சொந்த வியாபாரம் செய்யும்போது ​​இந்த நிம்மதி வெகு தொலைவில் இருக்கும். காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு நிதானமாக உறங்க முடியாது. தூங்கச் செல்லும்போது கூட,  வியாபாரம் பற்றிய சிந்தனை தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும். நாளை என்ன நடக்கும், இன்றைய நாள் எப்படி இருந்தது, இலாபமா நட்டமா என்று தூங்கும் வரை இன்று என்ன நடந்தது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை எழுந்தவுடன் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. எனவே, மன நிம்மதியைப் பற்றி சிந்திக்கும் ஒரு நபருக்கு வியாபாரத்தை விட தொழில் செய்வது மிகவும் பொருத்தமானது.

 

 தகுதிகளுக்கான மதிப்பு

உங்கள் சொந்த வியாபாரத்தை நடத்துவதானால் படித்து பட்டம் பெற்றிருந்தாலும், நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே கஷ்டப்பட வேண்டும். டிரைவர் முதல் கிளீனர் வரை தலைமை நிர்வாக அதிகாரி வரை, தேவைப்படும்போது அதை நீங்களே செய்ய வேண்டும். அப்படியில்லாமல் அவ்வாறு கஷ்டப்பட விரும்பாதவர்கள், ஒரு வியபாரத்தில் ஈடுபடுவது மிகவும் கடினம். அவர்களுக்கு ஏற்ற தொழில்தான் சரியாக இருக்கும். அப்போதுதான் தகுதிகளுக்கு ஏற்ற பொருத்தமான வேலைகளை மட்டுமே செய்து சம்பளத்துடன் வீட்டிற்கு வர முடியும்

 

மேலதிக கல்வி

வியாபாரம் செய்யும் போது நீங்கள் கற்றுக்கொள்ள முடியாது என்று சொல்ல வரவில்லை. இந்த வியாபாரம் மற்றும் கல்வி இரண்டையும் அழகாக சமநிலைப்படுத்தி கொண்டு செல்லும் நபர்கள் இந்த சமூகத்தில் நிறைய பேர் உள்ளனர். ஆனால் வியாபாரம் செய்யும்போது, ​​கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை அரிதாகவே உணர்கிறோம். அதற்காக அர்ப்பணிக்க குறைந்த நேரம் மாத்திரமே இருக்கிறது. எல்லா நேரத்திலும், வியாபாரத்தில் ஒரு படி மேலே செல்வதற்கு, முயற்சிக்கான நேரம் ஒதுக்கி வைக்கப்படுகிறது. ஆனால் ஒரு தொழிலை செய்யும்போது இது முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது. ஏனென்றால், நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் உங்கள் தொழிலில் சென்று அதிகம் சம்பாதிக்கலாம். எனவே அதில் அதிக ஆர்வம் இருக்கும். கல்வி என்பது வாழ்க்கைக்கு ஒரு பெரிய மதிப்பு. எனவே ஒரு தொழில்செய்வதில் கிடைக்கும் நன்மைகள் விலைமதிப்பற்றவை.

 

சமூகத்தினூடான உறவு

சமூக தொடர்பு என்பது நீங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு கிடைக்கக்கூடியது. ஏனெனில் நீங்கள் ஒரு தொழிலாக செய்தாலும், நீங்கள் வெளியே சென்று மக்களுடன் பழக வேண்டும். ஒரு வியாபாரத்தைச் செய்யும்போதும் நீங்கள் தினசரி சந்திக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் இது அதனுடன் இணைந்தவர்களைப் பற்றியது. ஒரு வியாபாரத்தில் நீங்கள் சந்திக்கும் நபர்களை விட தொழில் வல்லுநர்கள் அதிகம். அதாவது, வேலை செய்யும் நபர்கள் தொழில்முறை நபர்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில்முறை ரீதியான மக்களுடன் கூட்டுறவை பேணும்போது ​​வாழ்க்கையிலிருந்து ஒவ்வொன்றாக மதிப்பை சேர்க்கவும், அவர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையக்கூடும்.

 

அங்கீகாரம்

நீங்கள் ஒரு வியாபாரத்தை விரும்பினால் நல்ல இலாபத்தை ஈட்ட வேண்டும். மேலும் சிறிது பிரசித்தமாகவும் இருக்க வேண்டும். அல்லது பெரும்பாலான மக்கள் வியாபாரம் என்றவுடன்கூட பெரும்பாலும் மதிப்பதில்லை. ஆனால் ஒரு இடத்தில் தொழில் செய்யும் ஒருவரை சமூகத்தில் மதிப்பதும் அதிகம். இளைஞர்கள் சொந்த தொழில் செய்வதற்கு பதிலாக வேலைகளைத் தேட ஆசைப்படுவதற்கு இது மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும்.