இராமர், சீதை, ஹனுமன் பற்றி பலருக்கு தெரியாத கதைகள்

 

இராமரும் சீதையும் உலகப் புகழ்பெற்ற ஜோடி. ஆனால் இருவருக்கும் இடையில் பறந்துவந்த வில்லனாக, இராவணன் நம் இலங்கை நாட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் இராவணன் எம் நாட்டில் பலருக்கு ஹீரோவாக காணப்படுகின்றார். அவர் மற்ற கிரகங்களை ஆண்ட ஒரு பேரரசர் என்றும் சிலர் கூறுகிறார்கள். இராமர், சீதை, இராவணன் ஆகியோர் பற்றி இராமாயணத்தின் மூலம் வால்மீகி உலகுக்கு தெரிவித்தார். நாம் இராமாயணத்தை முற்றுமுழுதாக படித்ததில்லை என்றாலும், இராமாயணத்தின் கதை நமக்குத் தெரியும். மாற்றாந்தாய் செய்த சதியால் வனவாசம் சென்ற இராமரின் மனைவி சீதை, ராவணனால் கடத்தப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார். இராமர் சண்டையிட்டு இராவணனை தோற்கடித்து சீதையை மீண்டும் அழைத்துச் செல்கிறார். இதுதான் இராமாயண கதையின் சுருக்கம் என்பது நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா? இராவணன் இறந்ததும் (சிலர் அவர் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்) இராமனும் சீதையும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் என்று நினைத்தீர்களா? அல்லது நீங்கள் இதைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லையா? இந்த கட்டுரையின் மூலம் அவற்றை அறிந்துகொள்ளுங்கள்.

 

சீதை

இராவணன் கொல்லப்பட்ட பிறகு, சீதையின் கன்னித்தன்மை தூய்மையை சோதிக்க இராமர் ஒரு தீ சோதனைக்கு உத்தரவிட்டார் என்பதையும், அவ்வாறு செய்வதன் மூலம் சீதை தனது தூய்மையை நிரூபித்ததையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதன் பிறகு இராமரும் சீதையும் அயோத்தி சென்று அரசாங்கத்தை பொறுப்பேற்றார்கள். இதற்கிடையில், சீதாவுக்கு மகப்பேறு உண்டாகிறது. ஆனால் சீதா குறித்த வதந்திகள் பரவி வந்தன. அந்த வதந்திகளில் சீதா இராவணனின் காவலில் இருந்தது பற்றி பேசப்பட்டது. இந்த வதந்தி பற்றியும் இராமர் கேள்விப்படுகிறார். அதே சமயம், இராமர் தனது அரச கண்ணியத்தை பாதுகாக்க முடிவு செய்கிறார். இதன் விளைவாக, சீதா மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டு வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு செல்கிறார். சீதை அந்த மடத்தில் இரட்டையர்களைப் பெற்றெடுக்கிறார். அவர்களுக்கு லாவன் மற்றும் குசன் என பெயர் சூட்டினார். அந்த குழந்தைகள் மடத்தில் வளர்ந்தனர். இந்த நேரத்தில் இராமர் அஸ்வமேதை என்ற யாகத்தை தொடங்குகிறார். அந்த யாகத்தில் ஒரு குதிரை விடுவிக்கப்படுகிறது. அந்த குதிரையை யாராவது தனக்கு சொந்தமாக்க முயற்சிப்பது தடைவிதிக்கப்படுகிறது. யாராவது குதிரை வைத்திருந்தால், அவர்கள் இராமருடன் போரிட வேண்டியிருக்கும். இந்த குதிரை காடுகளுக்கு அருகில் இருப்பதை கண்டு லவனும் குசனும் அதனை சொந்தமாக்கிக்கொள்கின்றனர். இவர்கள் தனது மகன்மார் என்பதை அறியாத இராமர் அவர்களுடன் சண்டையிட பலரை அனுப்புகிறார். இங்கே சீதை தன் பக்தி உண்மையாக இருந்தால் தன் குழந்தைகள் வெல்ல வேண்டுமென பிரார்த்தித்தார். அதற்கேற்ப லவனும் குசனும் அனைவரையும் தோற்கடிக்கின்றனர். இறுதியில் இராமர் இவர்களுடன் போரிட வரும்போது உண்மையை அறிந்துகொண்டு சீதையையும் குழந்தைகளையும் அரண்மனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தார். இங்கே சீதை தனக்கு உயிரைக் கொடுத்த தனது பூமித்தாயிடம் தன்னை இந்த தீய உலகத்திலிருந்து காப்பாற்றும்படி கேட்கிறாள். பின்னர் பூமி இரண்டாக பிளந்து சீதையை தனக்குள் அணைத்துக்கொள்கிறது. சீதையின் கதை அப்படித்தான் முடிகிறது.

 

லட்சுமணன்

இலட்சுமணன் என்று கூறினாலே நமக்கெல்லாம் தோன்றுவது, அண்ணன் சொன்னால் ​​எந்த ஒரு டிராகனின் வாயிற்குள் வேண்டுமென்றாலும் குதிக்கத் தயாராக இருக்கும் ஒரு சகோதரனாவார். இலட்சுமணன் இராமரின் தந்தையான தசரத மன்னனின் மற்றொரு மனைவியின் (சுமித்ரா) மகன். இராமரின் தாய் ராணி கவ்ஷல்யா. இராமரும் இலட்சுமணனும் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள். இலட்சுமணன் சீதையின் சகோதரி ஊர்மிளாவை மணக்கிறார். இராவணனுடனான போருக்குப் பிறகு அயோத்திக்கு வந்த இலட்சுமணர், மாநிலத்தை ஆட்சிசெய்ய இராமருக்கு உதவுகின்றார். சுருக்கமாகச் சொன்னால், மனதிற்கு விருப்பமில்லாவிட்டாலும் இராமரின் கட்டளைகளுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாது என்பதால் சீதையை வனப்பகுதிக்கு நாடு கடத்தும் பணியை இலட்சுமணன் ஏற்றுக்கொள்கிறான். இலட்சுமணனும் லவகுசனுக்கு எதிராக போரிட செல்கிறான். இதுபோன்று காலம் செல்ல ஒரு நாள் மரணத்தின் அதிபதி யமன் இராமரை சந்திக்க வருகிறார். இருவருக்கும் இடையிலான இரகசிய கலந்துரையாடலை விரும்புவதாக யம ராஜா கேட்டுக்கொள்ளவே, உரையாடல் தொடங்குவதற்கு முன்பு ஒரு வாக்குறுதி எடுக்கப்படுகிறது. அவர்களின் கலந்துரையாடலில் தலையிடும் எவரையும் கொலை செய்ய வேண்டும் என்பதே அது. இங்கே இராமர் இலட்சுமணனிடம் தான் உரையாடும் அறையின் கதவைக் காக்கச் சொல்கிறான். ஏனென்றால் அவருக்கு இலட்சுமணனைப் போல விசுவாசமுள்ள வேறு நபர் இல்லை. சிறிது நேரம் கழித்து, சீக்கிரம் கோபமடையக்கூடிய துர்வாசர் என்ற முனிவர் இராமரை சந்திக்க வருகிறார். இராமரை இப்போது சந்திக்க முடியாது என்று இலட்சுமணர் கூறும்போது, ​​இப்போது இராமரை சந்திக்க அனுமதிக்காவிட்டால் அயோத்தியை முழுவதையும் சபிப்பதாக துர்வாசர் அச்சுறுத்துகிறார். அயோத்தியை அழிப்பதை விட இறப்பது நல்லது என்று கூறி இலட்சுமணன் அறைக்குள் நுழைகிறான். இதன் காரணமாக இராமர் இலட்சுமனிடம் தன் மரணத்தை தெரிவுசெய்யுமாறு கேட்கிறார். இலட்சுமணன் சரயு ஆற்றில் மூழ்கி இறந்து விடுகிறார். புராணங்களின் படி, இலட்சுமணர் விஷ்ணுவின் இருக்கையான சேஷனகாவின் அவதாரம். ஆகவே, விஷ்ணு இராமர் வடிவில் இருந்து மீண்டும் தேவலோகம் செல்லும்போது அரியணையாக அமர நேர்ந்தது.

 

ராமர்

இராமர் அயோத்தியை புத்திசாலித்தனமாக ஆட்சி செய்கிறார். இதற்கிடையில், ஷம்புகா என்ற துறவி தெய்வீகத்தை அடைய விரும்புகிறார் என்பதை இராமர் அறிகிறார். சந்நியாசம் செய்யும் நிராயுதபாணியான ஷம்புகாவை இராமர் கொன்றுவிடுகிறார். ஏனெனில் சந்நியாசம் வேதங்களின் போதனைகளுக்கு முரணானது. இந்த கொலை தர்மத்தின் பாதுகாப்பு என்று பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வாறு இராமர் 11,000 ஆண்டுகள் அயோத்தியை ஆட்சி செய்தார். இந்த ஆட்சி மிகவும் நீதியும், வளமும் கொண்டது. ஒரு இலட்சிய அரசு என்ற கருத்து இந்தியாவில் ‘இராம இராச்சியம்’ என்று இன்றும் நடைமுறையில் உள்ளது. இராமர் தனது ஆட்சியை முடித்த பின்னர், பெரிய விஷ்ணுவின் வடிவத்தில் தெய்வீக உலகிற்கு திரும்ப முடிவு செய்கிறார். அந்த நேரத்தில், அயோத்தி முழுவதும் அவருடன் சேர முடிவு செய்தார். அதன்படி, இராமர் தலைமையிலான அயோத்தி மக்கள் சரயு ஆற்றில் மூழ்கி இந்த உலகத்துடனான உறவை முடித்துக்கொள்கிறார்கள். புராணங்களின் படி, இராமரின் பிற்கால தலைமுறையினர் அயோத்தியை மீளக்குடியமர்த்த வேண்டியிருந்தது.

 

ஹனுமான்

இலங்கை முழுவதும் தீ வைத்த ஹனுமானுக்கு என்ன ஆனது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். இரட்சிப்பைத் தேடி இராமரும் அவரது பரிவாரங்களும் சரயு ஆற்றில் மூழ்கும்போது, ​​ஹனுமான் ஸ்ரீ ராமர் என்ற பெயரைக் கேட்கும் வரை இந்த உலகில் இருக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். ஹனுமானுக்கும் அந்த வரம் கிடைத்தது. ஆம், அதாவது ஹனுமான் இன்னும் இருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹனுமான் அழிவில்லாதவர். ஏனெனில் ஸ்ரீ ராமர் என்ற பெயர் இந்த உலகத்திலிருந்து ஒருபோதும் மறைந்துவிடும் என்று ராம பக்தர்கள் நம்பவில்லை. அதனால் ஹனுமான் பூமியில் இன்றும் வாழ்கிறார் என்று சொல்கிறார்கள்.

 

பரதன்

பரதர் இராமரின் மற்றுமொரு சகோதரர். இராமர் தனது தந்தையின் இன்னொரு மனைவியான கைகேயின் தீய சதித்திட்டத்தின் விளைவாக காட்டுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி அறிந்து கோபமடைந்த பரதர் காட்டுக்குச் சென்று இராமரைச் சந்தித்து அவரை மீண்டும் அழைத்து வர முயற்சிக்கிறார். ஆனால் இராமர் அதை மறுக்கிறார். அவர் இராமரின் காலணிகளை எடுத்து அரியணையில் வைத்து ஆட்சி செய்கிறார். இராமர் திரும்பியவுடன், பரதர் தனது சகோதரனுக்கு ஆட்சி முறையில் உறுதுணையாக செயற்பட்டார். இறுதியில் பரதனும் சரயு ஆற்றில் மூழ்கி மோட்சத்தை அடைகிறார். பகவான் விஷ்ணுவின் தெய்வீக வெற்றி எண்ணின் மனித வடிவமாக பரதன் கருதப்படுகிறார்.

 

சத்ருக்கன்

சத்ருக்கன் இராமரின் இளைய சகோதரனும், இலட்சுமணனின் இரட்டை சகோதரனும் ஆவார். இராமர் நாடுகடத்தப்பட்டிருந்தபோது, ​​விரோத ராஜ்ஜியத்தை ஆள பரதனுடன் துணை நின்றார். இராமர் திரும்பிய பிறகு, சத்துருக்கன் அவருக்கும் சேவை செய்கிறார். இதற்கிடையில், இலாவனாசுரா என்ற அசுர மன்னன் அநீதியாக ஆட்சி செய்கிறான் என்பதை இராமர் அறிகிறார். இந்த அசுரனை கொல்ல சத்துருக்கன் வாய்ப்பு கேட்கிறார். சிவனின் திரிசூலத்தின் பாதுகாவலரான இலாவனாசுரனைக் கொல்வது மிகவும் கடினம் என்பதை அறிந்த இராமர் விஷ்ணுவின் அம்புகளை சத்துருக்கனுக்கு அளிக்கிறார். அங்கிருந்து இலாவனாசுரனைக் கொல்லும் சத்துருக்கன் மதுராவின் அரசனாகிறார். பின்னர், சத்துருக்கனும் சரயு நதியில் மூழ்கி மோட்சத்தை அடைந்தார். விஷ்ணுவின் சுதர்ஷன சக்கரத்தின் மனித வடிவமாக சத்ருக்கன் கருதப்படுகிறார்.