வரலாற்றில் மிகவும் சிக்கலான காதல் கதையொன்றின் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறோம். ஆனால் நேர்மையாக இந்த காதல் கதையை நாம் நியாயப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. காரணம், இந்த காதல் கதையைப் பற்றி இதுவரை ஏராளமான புத்தகங்கள், திரைக்கதைகள், மேடை நாடகங்கள் எழுதப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எல்லா படைப்புகளையும் போலவே, இந்த காதல் கதையைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. இந்த கட்டுரையைப் படித்து அது ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அவருக்கு மட்டுமான ஜோசஃபின்
பிறப்பின்போது மேரி ஜோசஃபின் ரோஸ் டாஷர் டி லா பாகேரி என்று அறியப்பட்ட இவர், குடும்ப உறுப்பினர்களிடையே மேரி அல்லது ரோஸ் என்று அறியப்பட்டார். ஆனால் பின்னர் இவரது வாழ்வில் வந்த நெப்போலியன் போனபார்ட்டேவிற்கு இந்த பெயர்களில் எதுவுமே பிடிக்கவில்லை. அவனுக்கு அவள் ஜோசபின் ஆனாள். அவளைச் சுற்றியுள்ள சில புராணங்களின் படி, ஒரு தீர்க்கதரிசி குழந்தையாக இருந்த அவளைப் பார்த்து, எதிர்காலத்தில் அவள் பிரான்சின் ராணியாக மாறுவாள் என்று சொன்னதாக கூறப்படுகிறது.
சபிக்கப்பட்ட முதல் திருமணம்
ஜோசஃபினின் குடும்பம் ஆழ்ந்த மந்தநிலையில் இருந்ததன் காரணமாக மற்றும் அவரது குடும்பத்தினரின் அழுத்தத்தின் கீழ், அவர் அலெக்சாண்டர் பொன்ரே என்ற இரண்டாவது விகித பிரபுத்துவத்தை மணந்தார். இந்த தம்பதியினருக்கு யூஜின் என்ற மகனும், ஹோடென்ஸ் என்ற மகளும் உள்ளனர். அந்த திருமணம் ஒருபோதும் வெற்றிகரமான திருமணமாக இருக்கவில்லை. பிரெஞ்சு புரட்சியின் போது, அவரது கணவர் கொலை செய்யப்பட்டதோடு, அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தற்செயலாக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
காமக்கிழத்தி
அந்த நேரத்தில் பிரெஞ்சு சமுதாயத்தில், சக்திவாய்ந்த ஆண்களுக்கு காமக்கிழத்திகள் இருப்பது வழக்கம். புரட்சிக்கு முன்னர் பிரெஞ்சு அரச நீதிமன்றத்தில் கூட, மன்னர்களின் காமக்கிழத்திகளும் கணிசமான சக்தியைப் பயன்படுத்தினர். ஜோசஃபின் தனது இரண்டு குழந்தைகளை ஆதரிப்பதற்கும் சமூக சக்தியைக் கட்டியெழுப்புவதற்கும் அந்த பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே அவர் ஒரு பிரெஞ்சு அரசியல் பிரமுகரான போல் பார்ராஸின் காமக்கிழத்தியானார்.
முதல் கூட்டம்
அப்பொழுது 26 வயதான நெப்போலியன் போனபார்டேவை அவரது அரண்மனையில் போல் பார்ராஸ் ஏற்பாடு செய்த நடன விருந்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்திரண்டு. இப்போது பிரெஞ்சு இராணுவத்தில் பிரபலமான நபராக இருந்த அந்த சிப்பாய் அவரை காதலித்து, பவுலுடன் இருந்த உறவை நிறுத்தி விட்டு ஜோசஃபின் நெப்போலியனின் காமக்கிழத்தியானார்.
திருமணம்
ஒரு வருடம் கழித்து நெப்போலியன் போனபார்டே தனது காமக்கிழத்தியாக இருந்தவரை சட்டப்பூர்வ மனைவியாக மாற்ற முடிவு செய்தார். அவரது குடும்பத்தினரிடமிருந்து, குறிப்பாக அவரது தாய், சகோதரிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு இருந்தது. திருமணமான இரண்டு நாட்களுக்குப் பிறகு, நெப்போலியன் தனது படைகளை இத்தாலிக்கு அழைத்துச் சென்றார். மேலும் அவர் பிரிந்த காலம் முழுவதும் ஜோசஃபினுக்கு தனது அன்பை வெளிப்படுத்திய கடிதங்களை எழுதினார். அதற்கு ஜோசஃபின் உணர்வற்ற பதிலையே அனுப்பினார். இருப்பினும், நெப்போலியன் அவளது ஒரு சிறிய உருவப்படத்தை தனது சட்டைப் பையில் வைத்திருந்தார். அதே ஓவியத்தை ஒரு நாளைக்கு பல முறை முத்தமிட்டதாக கூறப்படுகிறது.
ஜோசஃபினின் ஏமாற்றும் தன்மை
நெப்போலியன் இத்தாலியில் சண்டையிட்டுக் கொண்டு, ஜோசஃபினைப் பற்றி சிந்திக்க நேரம் செலவழித்தபோது, சார்ளஸ் என்ற சிப்பாயுடன் இன்னொரு உறவை ஜோசஃபின் ஆரம்பித்தார். அவரை விட ஒன்பது வயது இளையவன் அந்தச் சிப்பாய். ஆரம்ப நாட்களில், இந்த உறவு நெப்போலியனுக்கு தெரியாமல் இரகசியமாக இருந்தது. இருவரும் நெப்போலியனை பார்க்க இத்தாலிக்குக்கூட பயணம் செய்தனர். பாரிஸுக்கு வந்ததும், நெப்போலியன் அவர்களின் உறவின் உண்மையான தன்மையைக் கண்டுபிடித்தார். நெப்போலியன் தனது எகிப்திய பணியைத் தொடங்கியபோது தனது மனைவியின் ஏமாற்றும் தன்மை குறித்து கோபமுற்றார்.
நெப்போலியனின் பதில்
தனது விவாகரத்து தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு நெப்போலியன் தனது மூத்த சகோதரரான ஜோசப் போனபார்ட்டேக்கு அறிவித்தபோதும், அந்தக் கடிதத்தை பிரிட்டிஷ் கடற்படை கைப்பற்றியது. தனது சகோதரருக்கு அந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்பதை நெப்போலியன் பின்னரே அறிந்துகொண்டார். ஜோசஃபின் மீது வைத்திருந்த அன்பால் மனம் வருந்திய நெப்போலியன் தனது வலியைக் குறைக்க ஏனைய பெண்களின் ஆறுதலை நாடினார்.