உலகின் விசித்திரமான பட்டப்படிப்புகள்

 

கற்றறிந்த கலைதான் பிழைக்கிறது என்று கூறப்படுகிறது. எனினும், இது குறிப்பிடத்தக்க ஒரு அற்புதமான கதை. பிறப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்வது, ஒரு வாழ்க்கையை உருவாக்கவும், துன்பங்களுக்கு மத்தியில் நம் வாழ்க்கையை வாழவும் உதவுகிறது. இலங்கையில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலையில் 6 வயதில் சேர்க்கப்படும் குழந்தையிடமிருந்து பெற்றோர்கள் எதிர்பார்க்கும் மிக உயர்ந்த கல்வித் திறன் பல்கலைக்கழகப் பட்டமாகும். இலங்கையில் நன்கு அறியப்பட்ட சில பட்டப்படிப்புகள் உள்ளன. ஆனால் இலங்கையில் இதுபோன்ற விசித்திரமான டிகிரி எதுவும் இல்லை. இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பல்கலைக்கழகங்களுக்கு சென்று பட்டம் பெறுமாறு சொல்ல மாட்டார்கள்.

 

 வைட்டிகல்சர் மற்றும் ஓனாலஜி (Viticulture and Oenology)

இந்த வார்த்தையின் பொருளை நீங்கள் பார்த்தால், திராட்சை அறிவியல் மற்றும் ஒயின் தயாரிக்கும் விஞ்ஞானம் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கெல்லாமா ஒரு பட்டப்படிப்பு வைப்பார்களா என்று உங்களுக்கு எண்ணத்தோன்றும். ஆனால் உண்மையில் உலகில் அத்தகைய பட்டப்படிப்பும் உள்ளது. இங்கிலாந்தின் பிளம்டன் கல்லூரியில் இருந்து BSc(Hons) in Viticulture and Oenology என்கிற பட்டப்படிப்பு ஆண்டு முழுவதும் திராட்சை மற்றும் ஒயின் தயாரித்தலை கற்பிக்கிறது. எதிர்காலத்தில் ஒயின் துறையில் வேலைவாய்ப்பைப் பெற அல்லது வணிகத்தை நடத்த தேவையான அனைத்து அறிவும் இதில் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த பட்டப்படிப்பை முடித்த பின்னர் ஒயின் தொழிற்சாலை முகாமையாளராகவும், ஒயின் தயாரிப்பாளராகவும் மாறுவதோடு மட்டுமல்லாமல், இந்த விடயத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் MA அல்லது PHD பட்டத்தையும் பெறலாம் என்று கூறுகின்றனர்.

 

ஹோரோலொஜி (Horology)

இது கேட்பதற்கு வித்தியாசமானது. ஆனால் உலகில் இது போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன. தமிழில், இது கடிகார வேலைகளை உருவாக்கும் கலையாகும். கடிகார திருத்த வேலைகளைப் பற்றி எளிய தமிழில் சொல்லலாம். இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகர பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் கடிகாரங்கள் தொடர்பான இந்த படிப்பை முடித்தால் எந்தவொரு வணிகத்திலும் ஈடுபடுவதன் மூலம் நேரத்தை பணமாக மாற்ற முடியும்.

 

 

நெறிமுறை ஹேக்கிங் (Ethical Hacking)

கம்பியூட்டர் ஹேக்கிங் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று, அத்தோடு இது உண்மையில் நெறிமுறையற்ற செயல். ஆனால் வேறொருவரின் கணினி அல்லது பிற தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து தரவைத் திருடுவது பற்றிய நெறிமுறைகளை கற்பிக்கும் பட்டப்படிப்புகளும் உலகில் உள்ளன. வேடிக்கையானதாக இருந்தாலும் இது உண்மையான விடயம். இந்த பட்டத்தை ஸ்கொட்லாந்தில் உள்ள அபெர்டே பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இதற்கு சாதகமான பக்கமும் இருக்கிறது. இருப்பினும், இந்த பட்டப்படிப்பில் இருந்து பெற்றுக்கொண்ட அறிவானது, ஹேக்கர்களைப் பிடிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இந்த நெறிமுறை ஹேக்கிங் பட்டத்தை முடிப்பவர்களுக்கு மிக அதிக தேவை இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையிலும் இதை கற்பிக்கும் கல்வி நிலையங்கள் உள்ளன.

 

தற்கால சர்க்கஸ் மற்றும் உடல் செயற்திறன் (Contemporary Circus and Physical Performance)

சர்க்கஸும் எளிதானது அல்ல. இதற்கும் பட்டங்கள் உள்ளன. இந்த பட்டத்தை இங்கிலாந்தின் பாத் ஸ்பா பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்த பட்டப்படிப்பு ஆரம்பத்தில் இருந்தே சர்க்கஸ் மற்றும் உடல் செயற்திறன் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் கற்பிக்கிறது. மேலும், விரும்புவோர் இந்த பட்டப்படிப்பில் முதுகலை நிலை வரை படிக்கலாம். சர்க்கஸ் என்பது ஒரு விளையாட்டு என்று எண்ணினாலும் அதற்கும் பட்டம் முடிக்க வேண்டிய காலமாக மாறிவிட்டது.

 

 பப்பற்றி டிசைங் எண்ட் பர்போமன்ஸ் (Puppetry Design and Performance)

பொம்மை தயாரிப்பு மற்றும் நடிப்பு என்பதும் ஒரு பட்டப்படிப்பாகும். இந்த பட்டத்தை இங்கிலாந்தில் உள்ள ரோயல் சென்ட்ரல் ஸ்கூல் ஒஃப் ஸ்பீச் அண்ட் டிராமா வழங்கியுள்ளது. இதில், பொம்மைகளை உருவாக்குவது முதல் ஒரு கச்சேரியில் அவற்றை அரங்கில் நிகழ்த்துவது வரை அனைத்து அறிவும் வழங்கப்படுகின்றது.

இலங்கையில் தலைமுறை தலைமுறையாக ஒப்படைக்கப்பட்ட பண்டைய பொம்மலாட்டம் இப்போது அழிந்துவிட்டதால் இதை நாங்கள் கற்பதும் நல்லது. இருப்பினும், இந்த பட்டப்படிப்பை முடிப்பவர்கள் ரோயல் ஓபரா ஹவுஸ் போன்ற இடத்தில் எளிதாக வேலை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

 

காய்ச்சுதல் மற்றும் வடிகட்டுதல் (Brewing and Distilling)

இது வைட்டிகல்சர் மற்றும் ஓனாலஜி ஆகியவற்றில் மேற்கூறிய பட்டத்திற்கு சற்று ஒத்ததாகும். ஆனால் வைட்டிகல்சர் மற்றும் ஓனாலஜி என்பது ஒயின் உற்பத்தியில் ஒரு தனி பாடமாகும். மதுவைப் பிடிக்காதவர்களுக்கு, இங்கே ஒரு உண்மையான பட்டம் இருக்கிறது. தமிழில், இது காய்ச்சுதல் மற்றும் வடிகட்டுதல் ஆகியவற்றில் ஒரு பாடமாகும். வேறுவிதமாகக் கூறினால் மதுபான உற்பத்தி தொடர்பான அறிவை வழங்கும் பட்டமாகும். ஸ்கொட்லாந்தின் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தால் Bsc in Brewing and Distilling பட்டம் வழங்கப்படுகிறது.

உண்மையில், மதுபான உற்பத்தி உலகின் சிறந்த வணிகங்களில் ஒன்றாகும். எனவே இது ஒரு சிறந்த கல்வி வாய்ப்பாகும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் பல்கலைக்கழக கல்வியைத் தொடரும்போது இந்த வேலைகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதாகக் கூறப்படுகிறது. எனவே பட்டம் பெற்ற பிறகு கிடைக்கும் வேலைவாய்ப்புகளை கற்பனை செய்து பாருங்கள்.

 

பராசைகோலஜி

இதுவும் ஒரு வித்தியாசமான பட்டப்படிப்பு. இது இங்கிலாந்தில் உள்ள கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தால் 2006இல் ஆரம்பிக்கப்பட்ட பட்டப்படிப்பாகும். இந்த பட்டப்படிப்பின் முக்கிய நோக்கம் பேய் ஆவிகள் மற்றும் தூண்டுதல்கள் இருப்பதை ஆய்வு செய்வதாகும். மேலும், சொற்களற்ற தொடர்பு போன்ற விசித்திரமான விடயங்கள் இந்த பட்டப்படிப்பில் கற்பிக்கப்படுகின்றன.