எலோன் மஸ்க் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 

ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்தின் மூலம் எலோன் மஸ்கின் பெயர் பல செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளில் வெளிவரத் தொடங்கியது. அமேசான் இணை நிறுவுனர் ஜெஃப் பெசோஸ்சின் வசமிருந்த உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தை 2021 ஜனவரியில் மஸ்க் பெற்றார். ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜெஃப் பெசோஸ் மீண்டும் அந்த முதலிடத்தைப் பிடித்தார். எலோன் மஸ்கின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுருக்கமான கதையை இன்று உங்களிடம் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்.

 

தந்தையுடன் ஏற்பட்ட மோதல்

தென்னாபிரிக்காவில் 1971, ஜூன் 28இல் பிறந்த எலோன் ரீவ் மஸ்க்கின் தாய் ஒரு கனேடிய பெண். இவரது தந்தை எலோர் மஸ்க் தென்னாபிரிக்கர். எலோனிற்கு இரண்டு இளைய சகோதரர்களாக கிம்பால் மற்றும் டோஸ்கா ஆகியோர் குடும்பத்தில் இணைந்ததோடு, 1980இல் அவர்களது பெற்றோர் விவாகரத்து செய்ய தீர்மானித்தனர். எலோன் தனது தந்தையுடன் தங்க முடிவு செய்தார். பின்னர் அவர் தனது வாழ்க்கையில் செய்த மிக துரதிஷ்டவசமான தவறு இது என்றும் கூறியுள்ளார். இன்றும் அவர் தனது தந்தையைப் பற்றி தீவிர உணர்ச்சியுடன் பேசுகிறார்.

 

முதல் வடிவமைப்பு

பத்து வயதில் இருந்தே கணினி தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் பிரபலத்தில் ஆர்வம் கொண்ட அவர், ஒரு சிறிய கையேட்டின் உதவியுடன் கணினி நிரலாக்கத்தை சுயமாகப் படித்து வீடியோ கேமை அறிமுகப்படுத்த முடிந்தது. அது அந்த நேரத்தில் பிரபலமடைந்தது. அவரது குழந்தை பருவ சாதனைகளில் ஒன்று பின்னர் ஒரு பத்திரிகையின் உரிமைகளை வழங்குவதோடு சுமார் $ 500 சம்பாதித்தது.

 

கல்வி

இவர் தனது ஆரம்பக் கல்வியை தென்னாப்பிரிக்காவில் பெற்றார். பாடசாலையில் மிகவும் திறமையான மாணவராகவும் இருக்கவில்லை. தனது வகுப்பு தோழர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும், ஒரு நாள் ஒரு மாணவக்குழுவால் படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளப்பட்டதற்காக அவர் ஒரு முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். மேலதிக கல்விக்காக கனடா சென்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகக் கல்வியை முடித்தார்.

 

 மதிப்பிற்குரிய குறிப்பு

எலோன் மஸ்க் பல படங்களிலும் கார்ட்டூன்களிலும் நடித்துள்ளார். 2010ஆம் ஆண்டில் அயர்ன் மேன் 2 அவர் பங்களித்த முதல் படமாகும். மற்றும் திரைப்படத் தொடரில் டோனி ஸ்டார்க்காக நடித்த ரொபர்ட் டவுனி, ​​அந்த கதாபாத்திரத்தை சித்தரிக்க மஸ்க்கின் உண்மையான வடிவத்தைப் படித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கும் கூடுதலாக, நன்கு அறியப்பட்ட “தி சிம்ப்சன்ஸ்” அனிமேஷன் தொடரின் ஒரு அத்தியாயம் முற்றிலும் மஸ்க்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது “The Musk who fell to Earth” என்று அழைக்கப்பட்டது.

 

மஸ்கின் திருமணம்

கனடாவில் இருந்த காலத்தில் பல்கலைக்கழக மாணவரான ஜஸ்டின் வில்சனை மஸ்க் காதலித்தார். அவர்கள் 2000ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். 2008ஆம் ஆண்டில் இந்த ஜோடி விவாகரத்து பெற்றது மற்றும் அதில் நடந்த மிகமுக்கியமான விடயம் என்னவென்றால் அவர்கள் இருவரும் ஊடகங்களில் விவாகரத்து சம்பந்தமான கட்டுரைகளை வெளியிட்டனர். பின்னர் அவர் 2010இல் மஸ்க் நடிகை தாலுலா ரிலேயை மணந்தார். 2012இல் அவரை விவாகரத்து செய்து 2013இல் மீண்டும் அவரையே மறுமணம் செய்து 2016இல் மீண்டும் விவாகரத்து செய்தார். ஜானி டெப்பின் மனைவி அம்பர் ஹியர்டுடன் மஸ்க் உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் மஸ்க் கனேடிய இசைக்கலைஞர் கிரிம்ஸுடன் வசிப்பதாக அறிவித்தார்.

 

மஸ்கின் குழந்தைகள்

2002இல் பிறந்த நெவாடாவைச் சேர்ந்த ஜஸ்டினின் குழந்தையான அலெக்சாண்டர் மஸ்க் பத்து வாரங்களின் பின்னர் இறந்தார். பின்னர், புதிய மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரட்டையர்கள் 2004இல் பிறந்தனர். 2006இல் மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது.

கிரிம்ஸ் மே 2020இல் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருக்கு எக்ஸ் ஏஇ ஏ-எக்ஸ்ஐஐ (X AE A-XII) என்று பெயரிட்டார். இது உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியது.

 

சமூக சேவை

சமூகப் பணிகளில் தாராளமாக செலவழிக்கும் மஸ்க், முக்கியமாக மஸ்க் அறக்கட்டளையைப் பயன்படுத்துகிறார். சூரிய சக்தியை ஊக்குவிப்பது இந்த அறக்கட்டளையின் முக்கிய பொறுப்பில் ஒன்றாகும். இதற்கு மேலதிகமாக விக்கிபீடியா அறக்கட்டளை, விக்கிபீடியா திட்டம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் பிக் கிரீன் திட்டம் என்பன இன்னும் அவரது நிதி உதவியின் கீழ் செயற்படும் அமைப்புகளாக இருக்கின்றன.