பிரபல சமூக வலைத்தளங்களுக்கு அத்திவாரமிட்டவர்கள்

 

சமூக ஊடகங்கள் எமது வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சில நேரங்களில் எங்களுக்கு அது அவ்வளவு தெரியாவிட்டாலும், இந்த சமூக ஊடக வலையமைப்புகள் எமது வாழ்க்கையின் திசையையும் முழு உலகத்தையும் தீர்மானிக்கின்றன என்று சொல்வது தவறல்ல. உதாரணமாக, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அரபு வசந்தத்தில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்தன. சமீபத்தில், இந்த சமூக ஊடக தளங்கள் உலகின் மிக சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதியின் சமூக ஊடகக் கணக்குகளை முற்றிலுமாகத் தடுக்க தங்கள் சக்தியைப் பயன்படுத்துவதற்கான துணிச்சலைக் கொண்டிருந்தன. எனவே இன்று சமூக ஊடக வலைப்பின்னல்களை உருவாக்கிய சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம். ஆனால் பேஸ்புக்கின் உரிமையாளர் மார்க் ஸக்கர்பெர்க்கை இதில் நாங்கள் சேர்க்கவில்லை. ஏனென்றால் அவரைப் பற்றி பொதுவாக எல்லோருக்கும் தெரியும்.

 

 ஜாக் டோர்சி

ஆடை வடிவமைப்பு மற்றும் உடல் மசாஜ் ஆகியவற்றைப் படித்த ஜாக் டோர்சி, பலருடன் சேர்ந்து 2006 இல் டுவிட்டரை அறிமுகப்படுத்தினார். யோகா படிப்பதற்காக 2008இல் தனது பதவியை விட்டுவிட்டு 2018இல் மீண்டும் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். தன்னுடைய செல்வத்தை தாராளமாக தொண்டு நிறுவனங்களுக்காக செலவழிக்கும் டோர்சி, தனது பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை டுவிட்டர் ஊழியர்களுக்கு 2016இல் கொடுத்துள்ளார். மேலும் கொவிட்- 19 காலத்தில் தனது சொத்துக்களில் 1 பில்லியன் டொலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

 

சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், ஜாவேத் கரீம்

பேபாலில் பணிபுரியும் போது இந்த மூன்று நண்பர்களும் சந்தித்தனர். பின்னர் அவர்கள் மூவரும் சேர்ந்து யூடியூப் சமூக ஊடக வலையமைப்பை உருவாக்கினர். இந்த நேரத்தில் ஜாவேத் தனது கல்விக்கு முதலிடம் கொடுத்தார். எனவே அவர் ஒரு பயிற்றுவிப்பாளராக மட்டுமே பணியாற்ற ஒப்புக்கொண்டார். இதன் விளைவாக, கூகிள் 2006இல் யூடியூப்பை வாங்கும் வரை ஜாவேத்தின் பங்களிப்பு பற்றி பலருக்கு தெரியாது. சாட் 2010 வரை யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார், அதன் பிறகு அவர் பல நிறுவனங்களைத் தொடங்குவதில் கவனம் செலுத்தினார்.

 

கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீகர்

இருவரும் ஆரம்பத்தில் பர்பன் என்ற சமூக வலைப்பின்னலை உருவாக்கத் திட்டமிட்டனர். ஆனால் அதன் சிக்கலான தன்மை காரணமாக பயனர்களிடையே இது மிகவும் பிரபலமாக இருக்காது என்று கருதி, பின்னர் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக வலையமைப்பை உருவாக்க முடிவு செய்தனர். 2010இல் தொடங்கப்பட்ட இந்த சமூக ஊடக வலையமைப்பு 2012இல் பேஸ்புக்கிற்கு விற்கப்பட்டது. ஆரம்ப நாட்களில்தான் இன்ஸ்டாகிராமில் மிகவும் தொடர்புற்று இருந்ததாக கிரெய்கர் பின்னர் கூறினார். அவர் ஒரு கட்டத்தில் குடிபோதையில் இருந்தபோதும் தளத்தை புதுப்பிக்க முடிந்தது.

 

 நவீன் செல்வதுரை மற்றும் டென்னிஸ் குரோலி

டென்னிஸ் தனது பல்கலைக்கழக திட்டத்திற்காக டாட்ஜ்பால் என்ற திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் அதை கூகிளுக்கு விற்றார். அந்த திட்டத்திலிருந்து பெறப்பட்ட அனுபவத்தின் மூலம் ஃபோர்ஸ்கொயர் சமூக ஊடக வலையமைப்பை தொடங்க நவீனுடன் இணைந்துள்ளார். அதனுடன் இணைந்த கூடுதல் தொலைபேசி பயன்பாடுகளை அறிமுகப்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்தினர்.

 

கத்னா பெக் மற்றும் ஸ்டீவர்ட் பட்டர்பீல்ட்

சட் ரூமாக (Chat room) தொடங்கிய ஃப்ளிக்கர் சமூக ஊடக வலையமைப்பு அதிவேகமாக வளர்ந்து சட் ரூம் கூட விலகிச் சென்றுள்ளது. கத்ரீனா ஃபெக் மற்றும் ஸ்டூவர்ட் பட்டர்பீல்ட் என்ற தம்பதியினர் இந்த சமூக ஊடக வலையமைப்பை தொடங்குவதில் முன்னிலை வகித்தனர். 2005ஆம் ஆண்டில் யாஹூ ஃபிளிக்கரை வாங்கியது. 2008ஆம் ஆண்டில் இந்த ஜோடி அதிலிருந்து முற்றிலுமாக வெளியேற முடிவு செய்தது.

 

பென் சில்பர்மேன்

பென்னின் கருத்துப்படி அவருக்குள்ளிருக்கும் குழந்தை தான் Pinterest சமூக ஊடக வலையமைப்பைத் தொடங்க அவரைத் தூண்டியது. ஒவ்வொரு சிறு குழந்தையும் வெவ்வேறு விடயங்களைச் சேகரிக்க விரும்புகிறது. இணையத்தில் இந்த பெரியவர்களுக்கு அவர்கள் சேகரித்ததைக் காட்ட இடமில்லை என்பதற்கு ஒரு தீர்வாக அவர் Pinterestஐ அறிமுகப்படுத்துகிறார். கூகிளில் சிறிது நேரம் பணியாற்றிய பிறகு, அவர் ஐபோன் ஆப்களை உருவாக்குவதில் சோர்வடைந்தார். பின்னர் தான் அவர் Pinterest தளத்தைத் தொடங்க முடிவு செய்தார்.

 

ரீட் ஹாஃப்மேன்

ரெய்டின் பாடசாலையில் படித்ததிலிருந்து உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். உயர்கல்விக்குப் பிறகும் அவரது நோக்கம் வீணாகவில்லை.  பேபாலில் சிறிது காலம் பல உயர் பதவிகளை வகித்த அவர், 2002இல் லிங்க்ட்-இனைத் தொடங்கினார். வணிக வாய்ப்புகளிலும் அதிக முதலீடு செய்தார்.