சோழர்கள் எமது நாட்டின் வரலாற்றில் மிகவும் மோசமான எதிரிகளில் ஒருவர் என சித்தரிக்கப்படுகின்றார். பல சந்தர்ப்பங்களில் அவர்களால் அனுராதபுர ராஜ்யம் கொள்ளையடிக்கபட்டதாக வரலாறு கூறுகின்றது. ஒரு சோழ படையெடுப்பால் அனுராதபுர சகாப்தமே சரிந்தது. எவ்வாறாயினும், எமது நாட்டில் பலவீனமான ஆட்சி இருந்த காலத்தில் அவர்கள் ஆட்சிக்கு வந்ததை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனினும், எமது வரலாற்றில் சிறந்த இடத்தைப்பெற்ற சோழர்களும் உள்ளனர். அவர்களைப் பற்றிய கட்டுரையே இது.
விஜயாலய சோழன்
பல்லவர்கள் மற்றும் பாண்டவர்களின் எழுச்சியுடன் பண்டைய சோழ இராச்சியம் மெதுவாக வீழ்ச்சியடைந்தது. உள்ளூர் ஆட்சியாளராக தனது பயணத்தைத் தொடங்கிய விஜயாலய சோழர், முதலில் தஞ்சாவூர் பகுதியைக் கைப்பற்றி பல்லவர்களை அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றினார். இந்த நிகழ்வு சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது. மேலும், விஜயாலய சோழனின் ஆட்சியின் காரணமாக அழிக்கப்படவிருந்த சோழ கலாச்சாரம் புத்துயிர் பெற்றது.
முதலாம் ஆதித்யன்
முதலாம் ஆதித்யன் தனது தந்தை ஆதித்ய சோழரால் தொடங்கப்பட்ட பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தார். மேலும் தனது இராணுவ சக்தியை விரிவுபடுத்திய பின்னர் பல்லவ இராச்சியத்தை கைப்பற்ற முடிந்தது. இந்த நிகழ்வு தென்னிந்தியா முழுவதும் சக்திவாய்ந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் முடிவைக் குறித்தது. சிவபெருமானின் தீவிர பக்தரான அவர் காவேரி ஆற்றின் கரையில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நூற்று எட்டு கோயில்களைக் கட்டினார்.
முதல் பராந்தக சோழன்
பாண்டிய இராச்சியத்தை கைப்பற்ற வேண்டும் என்ற தனது தந்தை மற்றும் தாத்தாவின் கனவை நிறைவேற்றுவதில் பராந்தக சோழன் வெற்றி பெற்றான். அந்த நேரத்தில் ஒரு சிங்கள இராணுவம் பாண்டிய அரசை ஆதரிக்கச் சென்றது. பராந்தக சோழனால் அந்த இராணுவத்தையும் தோற்கடிக்க முடிந்தது. பின்னர் அவர் பாண்டிய மன்னரால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அரச நகைகளைப் பாதுகாப்பதற்காக இலங்கை மீது படையெடுத்தார்.
முதலாம் ராஜராஜ சோழன்
முதலாம் பராந்தக சோழ மன்னனுக்குப் பிறகு, சோழ சாம்ராஜ்யம் மீண்டும் உள்நாட்டுப் போர்களினாலும் பலவீனமான ஆட்சியாளர்களின் சிம்மாசனத்தினாலும் பலவீனமடைந்தது. மேலும் ராஷ்டிரகுட்டாவின் படையெடுப்பால் இராச்சியம் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது. இந்த அனைத்து சவால்களுக்கும் மத்தியில், சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபித்த பெருமை ராஜராஜ சோழனுக்கு உண்டு. கேரளாவையும் பாண்டியாவையும் மீண்டும் சோழர் ஆட்சியின் கீழ் கொண்டுவர முடிந்தது. இலங்கை மீதும் படையெடுத்தார். அவரது படையெடுப்பு அனுராதபுர இராச்சியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் மன்னன் 5ஆம் மிஹிந்து சோழன் கைதியாக இறந்தார்.
முதலாம் ராஜேந்திர சோழன்
முதலாம் ராஜேந்திர சோழ மன்னனால் சோழ சாம்ராஜ்யம் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த சாம்ராஜ்யமாக மாற்றப்பட்டது. (சில வரலாற்று பதிவுகளின்படி, அனுராதபுர காலத்தின் சரிவு முதலாம் ராஜேந்திர சோழ மன்னனின் காலத்தில் நடந்தது). அவர் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து உள்ளூர் ராஜ்யங்களையும் கைப்பற்றி, வட இந்தியாவில் கலிங்க மற்றும் பால வம்சங்களையும் தோற்கடித்தார். ராஜேந்திர சோழனின் படையெடுப்பு தென்கிழக்கு ஆசியாவில் ஸ்ரீ விஜய பேரரசின் முடிவுக்கும் வழிவகுத்தது.
ராஜாதிராஜ சோழன்
யுத்த செயற்பாட்டில் முக்கிய பங்கு வகித்த ராஜேந்திர சோழனின் மகன் ராஜாதிராஜ சோழன், சமகால ஆதாரங்களில் போரினால் பிறந்த இளவரசன் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது ஆட்சிக் காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களை அடக்குவதோடு, சாளுக்கிய இராச்சியத்தின் அதிகாரத்தை முழுமையாக அடக்கினார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், சாளுக்கியர்களுடனான போரில் சக்கரவர்த்தியின் மரணம் சோழ சக்தியின் முன்னேற்றத்திற்கு ஒரு பயங்கரமான பின்னடைவாக காணப்பட்டது.
இரண்டாம் ராஜேந்திர சோழன்
ராஜாதிராஜன் போரில் இறந்துவிட்டார் என்பதை உணர்ந்து சோழ வீரர்கள் போரை விட்டு வெளியேற முடிவு செய்த போது, தன்னை ராஜாதிராஜாவின் சகோதரர் என்று அறிவித்து, இப்போது நான் தான் ராஜா என்று கூறிக்கொண்டு, இரண்டாம் ராஜேந்திர சோழன் இராணுவத்தை மீண்டும் ஒழுங்கமைத்து போரில் நுழைந்தார். இதன் விளைவாக அந்த போரில் வெற்றியை மாத்திரமின்றி, சாளுக்கிய ராஜ்யத்திற்குள் எழுந்த அனைத்து அமைதியின்மையும் அடக்கப்பட்டது.