உலகம் நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அபாயம்!

 

நீர் என்பது ஒரு வளமாகும். அதுமட்டுமல்லாமல் நாம் வாழ முடியாத அளவிற்கு மிக அவசியமான ஒரு இயற்கை வளம். ஒரு நபர் 2 மாதங்கள் வரை உணவு இல்லாமல் இருக்கமுடியும். ஆனால் நீர் இன்றி வெறும் 3-5 நாட்கள் மட்டுமே வாழ முடியும். மனித உடலுக்கு நீர் மிகவும் இன்றியமையாதது. குடிப்பதற்கு மட்டுமல்ல, உடலை சுத்தப்படுத்தவும் உணவு தயாரிக்கவும் தண்ணீர் அவசியம். ஆனால் இந்த நாட்களில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடிக்கடி பேசும் விடயங்களில் ஒன்று நிலையான மாசுபாடு மற்றும் காடழிப்பு என்பன எதிர்காலத்தில் கடுமையான நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். எனவே இந்த தலைப்பை பற்றி பேசுவோம். உங்களுக்கு இதன்மூலம் ஒரு அறிவுறுத்தலோடு சேர்த்து எச்சரிக்கையை விடுப்போமென நினைத்தோம்.

 

நீர் பற்றாக்குறை என்றால் என்ன?

நீர் பற்றாக்குறை என்பது வெறுமனே நீரின் பற்றாக்குறையாகும். ஆனால் இப்போதெல்லாம் நாம் அத்தகைய நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியதில்லை. எனவே, நீர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்பட்டாலும், இந்த விடயத்தின் தீவிரம் எங்களுக்கு தெரிவதில்லை. ஆனால் இது உலகளாவிய பிரச்சினை. இது இன்றைய காலத்தைவிட எதிர்காலத்தில் முழு உலகையும் அச்சுறுத்தவிருக்கும் ஒரு உண்மை. எனவே நீர் பற்றாக்குறை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது.

நீர் பற்றாக்குறை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் மனித தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான சுத்தமான நீர் வளங்களின் பற்றாக்குறையாகும். இந்த நீர் பற்றாக்குறை என்பது மனித உரிமைகளுடன் நேரடியாக தொடர்புடைய ஒரு விடயமாகும். இருப்பினும், விரைவான மக்கள் தொகை வளர்ச்சி, பொறுப்பற்ற பயன்பாடு, மாசுபாடு, காடழிப்பு மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றால், உலகின் ஒவ்வொரு வளர்ச்சியடையாத நாடுகளும் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

 

உலகத்தில் நீர் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

உலகெங்கிலும் உள்ள நீர் இப்படித்தான் பிரிக்கப்படுகிறது. பூமியின் 70% நீரால் மூடப்பட்டுள்ளது. எதிர்காலத்திற்கு அது ஏன் போதாது என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? மேற்கூறிய நீரில் 3% மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். இது கடல் நீர் அல்லது உப்புக்களுடன் கலக்காத இயற்கை நீர். அதில் மூன்றில் இரண்டு பங்கு நாம் பயன்படுத்த முடியாத பனிப்பாறைகளில் சிக்கியுள்ளது. எனவே இப்போது நாம் பயன்படுத்த வேண்டிய நீரின் அளவைப் பற்றி சற்றே சிந்தியுங்கள். முழு உலகிலுமே ஒரு சதவீத நீர் மாத்திரமே பயன்பாட்டிற்கு எடுக்க முடியும்.

 

உடல் நீர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நீர் பற்றாக்குறை

நீர் பற்றாக்குறையை இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம். உடல் நீர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நீர் பற்றாக்குறை என்பனவே அவை. ஒரு பகுதியில் உள்ள மக்களின் நீர் தேவை அந்த பகுதியில் கிடைக்கும் நீரை விட அதிகமாக இருக்கும்போது உடல் நீர் பற்றாக்குறை ஆகும். உலக மக்கள்தொகையில் சுமார் 1.2 பில்லியன் பேர் இந்த உடல் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இந்த உடல் நீர் பற்றாக்குறை முக்கியமாக மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் வானிலை முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஏற்படலாம்.

பொருளாதார நீர் பற்றாக்குறை என்பது சுற்றுச்சூழல் மற்றும் மனித தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான நீரில் ஏற்படுகிறது. ஆனால் அதற்கான அணுகல் குறைவாகவே உள்ளது. மேலாண்மை சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நீர் உட்கட்டமைப்பின் பற்றாக்குறை உள்ளது என்பதே இதன் பொருள்.

 

நீர் பற்றாக்குறையின் தீவிரம்

நீர் பற்றாக்குறை என்ற தலைப்பைப் பற்றி நாம் எப்போது பேசினாலும், நம்மில் பலருக்கு இந்த பிரச்சினையின் தீவிரம் புரிவதில்லை. நாம் முன்பு கூறியது போல், மனித உடல் உணவு இல்லாமல் வாழ முடியும். ஆனால் நீர் இல்லாமல் ஐந்து நாட்களுக்கு மேல் வாழ முடியாது. அதுவும் தனிப்பட்ட உடல் நிலைகளைப் பொறுத்து மாறுபடும். விலங்குகளும் அப்படித்தான். எனவே நீர் பற்றாக்குறை அனைத்து உயிரினங்களுக்கும் கடுமையான பிரச்சினையாகும். தற்போது ​​இந்தியா, சீனா போன்ற அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாடுகள் உட்பட பல நாடுகளில் நான்கு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதமாவது கடுமையான நீர் பற்றாக்குறை அல்லது வறட்சி உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.

நீர் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய மிக மோசமான நிலை, அதன் பின்னர் வரும் உணவு பற்றாக்குறையாகும். விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் எந்த நாட்டிலும் உணவு பற்றாக்குறை ஏற்படும். இது எரிசக்தி பற்றாக்குறையையும் ஏற்படுத்தும். உலகின் எரிசக்தி ஆதாரங்களில் பெரும்பாலானவை நீரை அடிப்படையாகக் கொண்டவை. அதே நேரத்தில், தொழில் மற்றும் விவசாயத்தைத் தக்கவைக்க போதுமான நீர் இல்லாததால் உலகப் பொருளாதாரம் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது. உண்மையில், நீர் பற்றாக்குறை எல்லாவற்றிற்கும் ஒரு பிரச்சினையாகும்.

 

மிக மோசமான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகள்

எதிர்காலத்தில் முழு உலகமும் எதிர்கொள்ளும் நீர் பற்றாக்குறையை ஏற்கனவே சில நாடுகள் அனுபவித்து வருகின்றன. பல்வேறு அரசியல், எல்லை, இன மற்றும் பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக அவற்றின் நீர் அணுகல் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த பட்டியலில் லிபியா, மேற்கு சஹாரா, யேமன், ஜிபூட்டி மற்றும் ஜோர்தான் ஆகியன முதலிடத்தில் உள்ளன. மேலும், ஆசிய கண்டத்தில் உள்ள நமது அண்டை நாடான இந்தியா மிக விரைவில் இந்த நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் நீர் பற்றாக்குறை

உடல் மற்றும் பொருளாதார நீர் பற்றாக்குறையால் முன்னர் குறிப்பிட்ட அனைத்து பிரச்சினைகளையும் இலங்கையில் நாம் விரைவில் சந்திக்க நேரிடும். எங்கள் நீர்வளங்களில் சுமார் 85% பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டாலும் இந்த சிக்கலை தீர்க்க நீர் உற்பத்தித்திறனைப் பொறுத்தவரை நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

 

நீர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கான தீர்வுகள்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான நீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்த இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்

  • நீர் பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
  • புதிய நீர் பாதுகாப்பு முறைகள் அறிமுகம்.
  • பயன்படுத்தப்பட்ட நீர் மறுசுழற்சி.
  • நீர்ப்பாசனம் மற்றும் விவசாய முறைகளின் வளர்ச்சி.
  • மாற்று எரிசக்தி மூலங்களின் அறிமுகம்
  • மாசு மற்றும் காடழிப்பு கட்டுப்பாடு.
  • மக்கள் தொகை கட்டுப்பாடு.