சுற்றுலா செல்பவரா நீங்கள்? – இதனை கட்டாயம் வாசியுங்கள்

 

இப்போது கொரோனா அபாயம் சிறிது குறைந்துவிட்டதால் பயணப் பிரியர்கள் மீண்டும் சுற்றுலா செல்ல ஆரம்பித்துவிட்டனர். கடந்த ஆண்டில் செல்லமுடியாத பயணங்களை இந்த வருடம் போய்விட வேண்டுனெ நினைக்கின்றனர். பிரயாணம் செல்வது புதிதல்ல. ஆனால், சில பொருட்களை கட்டாயம் கொண்டுசெல்வது அவசியம். காரணம் நீங்கள் செல்லுமிடத்தில் வாங்கவும் முடியாது தேடவும் முடியாது. ஆகவே, முன்கூட்டியே இவற்றை திட்டமிட்டு எடுத்துச் செல்லுங்கள்.

 

ட்ல் பவர் அடாப்டர்

பிரயாணத்தின்போது போது கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று தான் இது. இப்போது நாங்கள் ஒரு பயணத்திற்குச் செல்லும்போது மொபைல் சார்ஜர்கள், கெமரா பேட்டரி சார்ஜர்கள் ஆகியவற்றை எங்களுடன் எடுத்துச் செல்கிறோம். ஆனால் சில நேரங்களில், எங்கள் சார்ஜர் அல்லது வேறு எந்த கேஜெட்டையும் வாகன நிறுத்துமிடத்தில் செருகுவதற்கான பவர் சொக்கெட் எங்களிடம் இருப்பதில்லை. அந்த நேரத்தில் தான் இந்த ட்ரவல் அடாப்டர் பெறுமதியானதாக காணப்படும். ஆனால் ஒரு நல்ல ட்ரவல் அடாப்டரில் பல சொக்கெட்டுகள் உள்ளன. அதேபோல் பல சொக்கெட்டுகளுக்கு பொருந்தக்கூடிய செருகிகளும் உள்ளன. புதிய சொக்கட் ஒன்று அல்லது இரண்டு யூ.எஸ்.பி போர்ட்களையும் கொண்டுள்ளது.

 

நொய்ஸ் கேன்சலின் ஹெட்ஃபோன்கள்

பிரயாணம் செல்லும்போது ​​இயற்கையை எவ்வளவு இரசித்தாலும், ஒரு பாட்டை கேட்டாலும், நீங்கள் அமைதியாக இருக்க விரும்பும் ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் கேட்க உங்களுக்கு ஒரு பாடல் இருந்தால் அது மிகவும் நல்லது. உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது வேறு எந்த கேஜெட்டிலும் பாடல்களை கேட்கலாம். ஆனால் அதை தனிப்பட்ட முறையில் மற்றும் அமைதியாக அனுபவிக்க நீங்கள் ஹெட்ஃபோன் வைத்திருக்க வேண்டும். ஹெட்ஃபோன் என்றால் அது நோய்ஸ் கேன்சல் செய்யக்கூடியதாக இருந்தாலே வீதி இரைச்சல் அனைத்தையும் நீக்கி உங்களுக்கு தரமான சத்தத்தை தரும்.

 

க்ஸஷன் கேமரா

 

ஏன் ஒரு அக்ஸஷன் கேமரா அவசியம்? ஸ்மார்ட்போனிலும் வீடியோ செய்ய முடியுமே என்று கேட்கும் ஒருவர் உண்மையில் ஒருபோதும் அக்ஸன் கேமராவைப் பயன்படுத்தியதில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்போது இதை வாசிப்பது இளைஞர்கள் என்றால் நீங்கள் ட்ரிப் என்றால் பொதுவாக செல்வது அத்தை மாமாக்களுடன் செல்லக்கூடிய சொகுசுயாத்திரை அல்லவே, அதற்கு மாறாக உண்மையான சாகச வேலைகளை உள்ளடக்கிய ஒரு சுற்றுப்பயணமாகும். அந்த நேரத்தில் ஒரு அக்ஸன் கேமராவின் மதிப்பை மிகைப்படுத்த முடியாது. இந்த அதிரடி கேமராக்களின் உயர்தர புகைப்படம் மற்றும் வீடியோ திறன்கள், அதே போல் சிறிதளவு அசைவையும் கூட கைப்பற்றும் திறன் ஆகியவை சாகசத்திற்கு மதிப்புள்ளது. மேலும், இந்த அக்ஸன் கேமரா பைக்கின் ஹேண்ட்பார்ஸில் அல்லது ஹெல்மட்டில் பொருத்திச் சென்றால் உங்கள் பயணத்தை இன்னும் நினைவில் நிற்கக்கூடியதாக மாற்றும்.

 

பவர் பேங்க்

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் இல்லை. பயணம் செய்யும் போது பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள். அது பரவாயில்லை. ஆனால் புகைப்படம் மற்றும் வீடியோ செய்யும்போது விரைவாக பேட்டரி தீர்ந்துவிடும் அந்த நேரத்தில் தான் இந்த பவர் பேங்கின் அருமை புரியும். வழியில் தொலைபேசியை சார்ஜ் செய்ய இடமில்லை. எனவே ஒரு சிறந்த பவர் பேங்கை எடுத்துச் செல்வதே சிறந்த தீர்வு. இன்னும் கொஞ்சம் நல்ல திறன் கொண்ட ஒரு நல்ல வகை பவர் பேங்க் என்றால் ஒரு ஸ்மார்ட்போனை இரண்டு முறை முழுமையாக சார்ஜ் செய்யலாம். ரீசார்ஜபிள் செய்யக்கூடிய பிற சாதனங்களை சார்ஜ் செய்யவும் இதைப் பயன்படுத்தலாம்.

 

 நீர் சுத்திகரிப்பு போத்தல் (WATER PURIFYING BOTTLE)

வழக்கமாக நாம் இலங்கையில் எங்காவது பயணம் செல்லும்போது அரிதாகவே நீர் தேவை ஏற்படுகிறது. ஆனால் தரித்துநிற்கும் (Camping) பயணம் சென்றால், வழியில் நீரை எடுத்துச் செல்ல வழியும் இல்லை என்றால், இயற்கை நீர் ஆதாரங்களில் இருந்து எடுக்க வேண்டும். ஆனால் திரைப்படங்களைப் போல ஒரு நீரோடை அல்லது ஏரியை நோக்கி சாய்ந்து நீர் அருந்துவது உடலுக்கு நல்லதல்ல. நினைத்துப்பார்க்க முடியாத நோய்கள் உருவாகலாம். அதனால்தான் நீங்கள் நீர் சுத்திகரிப்பு போத்தல்களை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த வகை நீர் சுத்திகரிப்பு வழக்கமாக நீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை வடிகட்டுகிறது. இப்போது நீங்கள் இதைப் போன்ற நீர் சுத்திகரிப்பு செட் இருக்கக்கூடிய நீர் போத்தல்களை வாங்க வேண்டும்.

 

பொக்கெட் ஃப்ளாஷர் டோர்ச்

எத்தனை முறை நாம் திடீரென நள்ளிரவில் வெளியிலோ மேல்மாடிக்கோ, கீழ்மாடிக்கோ, வேறு அறைக்கோ செல்ல வேண்டி ஏற்படுகின்றது? அதுவும் நல்ல டோர்ச் ஒன்றில்லாமல் மிகவும் சிரமமாகும். இப்போதெல்லாம் ஒவ்வொரு தொலைபேசியிலும் ஃப்ளாஷ் டோர்ச் உள்ளது. ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் வெளிச்சம் குறைவாகவே இருக்கும். எனவே ஒரு நல்ல பொக்கெட் அளவு ஃபிளாஷ் டோர்ச் ஒன்றை பெறுவது சிறந்ததாகும். ஒரு நல்ல பிராண்டாக இருந்தால் அது மிக நீண்ட காலம் உழைக்கும்.