கன்னித்தன்மையை பரிசோதிப்பது சரியானதா?

 

தலைப்பை பார்த்து நீங்கள் ஏதேனும் யோசித்தாலும் உண்மையில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய விடயம் இது. ஏனென்றால், ஒரு பெண்ணின் கன்னித்தன்மையைப் பார்த்து அவரின் மதிப்பை அளவிடும் நபர்கள் நம் சமூகத்தில் இன்னும் இருக்கிறார்கள். ஒரு பெண் அத்தகைய கன்னித்தன்மைக்கு தகுதியானவரா என்று தீர்மானிக்கும் நபர்கள் உண்மையில் ஒரு பெண்ணை ஒரு பண்டமாகவே பார்க்கிறார்கள். அதாவது, உங்களிடம் கன்னித்தன்மை இருந்தால், உங்களிடம் பிரீமியம் தரம் உள்ளது. இல்லையெனில் தரம் போதாது, அவ்வளவுதான். ஆனால் இந்த கன்னித்தன்மை எனும் கதையின் பிரச்சினை என்னவென்றால், பெண்களின் உண்மையான மதிப்புகளுக்கு இடமில்லை. ஒரு பெண் வெறுமனே கடைகளில் விற்பனைக்கு வரும் பொருட்களின் அளவிற்கு இழிவுபடுத்தப்படுகிறார். மற்றொன்று, இந்த நாட்டில் ஆண்களின் கன்னித்தன்மையை பார்க்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. ஆண்களிடம் குடிப்பழக்கம் இருக்கிறதா இல்லையா என்று மட்டுமே பார்க்கின்றனர்.

இருப்பினும், ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை அளவிடும் கதை, அவள் கன்னியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது ஒரு முழுமையான பொய்யானது என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கிடையில், 2021ஆம் ஆண்டில் வாழும் ஒரு கூட்டம், அவை நம் கலாச்சாரத்திலிருந்து வந்த மதிப்புமிக்க விடயங்கள் என்று கூறுகின்றன. இந்த கலியுகத்திலும் குடைந்து கொண்டிருக்கக்கூடிய கன்னித்தன்மையைப் பற்றி சில விடயங்களை கற்போம்.

 

வெள்ளைத்துணி மரபு

கன்னித்தன்மை என்பது பெண்ணின் யோனிக்குள், யோனி வலி திறப்பதற்கு அருகில் ஹைமன் இருப்பது அல்லது ஹைமனின் சிதைவு என வரையறுக்கப்படுகிறது. முதன்முதலாக பாலியல் உறவு கொள்ளும்போது ஹைமன் உடைகிறது என்பது இங்குள்ள பொதுவான நம்பிக்கை. ஆனால் அது தவறான கருத்தாகும்.

இலங்கையில் கன்னித்தன்மையை அளவிடும் முறை மிகவும் எளிது. திருமண நாளன்று இரவில் படுக்கையில் ஒரு வெள்ளை துணியை விரித்து விடுவது வழமையாகும். மணமகள் கன்னியாக இருந்தால் முதற்தடவை உடலுறவின் போது ஹைமன் உடைந்து இரத்தம் வர வேண்டும். மறுநாள் மாமியார் வந்து வெள்ளைத் துணியில் சிவப்பு ரத்தக் கறை இருக்கிறதா என்று சோதிப்பாள். அது அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது மணமகன் பக்கத்தில் இருந்து ஒரு வயதான பெண்மணி இதைப் பார்க்கின்றார்.

 

ஹைமன் சிதையாமல் செக்ஸ் செய்ய முடியுமா?

உடலுறவு என்பது யோனிவலி உடலுறவு மாத்திரமே என்று நினைப்பவர்களுக்கு இதுதான் வழி. ஆனால் லைஃபீ தமிழ் போன்ற நல்ல தொகுப்புக்களை வாசிப்போருக்கு கன்னித்தன்மைக்கு தீங்கு விளைவிக்காமல் உடலுறவு கொள்ள பல வழிமுறைகள் உள்ளன என்பதை அறிவார். விரும்பினால் இழந்த கன்னித்தன்மையை மீண்டும் பெறக்கூடிய எளிய அறுவை சிகிச்சைக்கூட உள்ளது. இது சட்டவிரோதமானது அல்ல. இது ஒரு எளிய அறுவை சிகிச்சை என்பதால் பயப்பட ஒன்றுமில்லை. இந்த ஹைமனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை இலங்கையிலும் செய்யப்படுவதாக கேள்விப்படுகிறோம்.

 

இலங்கையில் கன்னிகள் எனப்படுவோர் யார்?

கன்னித்தன்மை இலங்கையில் மட்டுமன்றி உலகின் பல நாடுகள், பல கலாச்சாரங்களில் இந்த கன்னித்தன்மை பற்றி பெரிதும் யோசிக்கின்றனர். ஆனால் பல நாடுகளில் கன்னித்தன்மை என்பது ஒரு குறைபாடுள்ள யோசனை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இப்போதெல்லாம் குறைபாடுள்ள நபர்கள்தான் அந்த கன்னித்தன்மையை பற்றி அதிகம் சிந்திக்கின்றனர்.

இலங்கையில், கன்னி என்பது ஒரு ஆணினது மூச்சுக்காற்றும் படாத அல்லது ஆண் தொடாத ஒரு பெண்ணைத்தான் அவ்வாறு சித்தரிக்கின்றனர். கன்னித்தன்மை என்பது ஹைமனுடன் தொடர்புகொள்ளாமல், அவள் இதற்கு முன்பு ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளவில்லை என்ற கருத்துக்கு என்றால், அதை எப்படி கண்டுபிடிப்பது?

 

 செக்ஸில் ஈடுபடவும் இல்லை கன்னித்தன்மையும் இல்லை!

உண்மையில் கன்னித்தன்மையைத் தேடும் பாரம்பரியத்தினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். சில பெண்கள் ஒரு ஹைமன் இல்லாமலே பிறக்கிறார்கள். சிலருக்கு ஹைமன் இருந்தும், உடலுறவின் போது ஹைமன் சிதைவடையாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. ஏனென்றால் ஹைமன் என்பது ஒரு நீண்டதொரு உறுப்பு போன்றது. ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிள் ஓட்டும் மற்றும் பிற விளையாட்டுகளைச் செய்யும் பெண்களின் ஹைமன் உடலுறவு கொள்ளாமலேயே உடைந்து போகக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, ஒரு பெண் கன்னியாக இருந்தாலும், பாலியல் ரீதியாக தொடர்பில்லாத “தூய்மையான” பெண்ணாக இருந்தாலும் சரி அவளது ஹைமன் சிதைவடைவதால் அது இழக்கப்படுகிறது. இதை சரியாக அறியாத கன்னித்தன்மையை எதிர்பார்ப்பவர்களால் அவளது திருமண நாளில் கன்னித்தன்மையை நிரூபிக்க முடியாததால், தனது வாழ்நாள் முழுவதும் பிரச்சினைகளுடன் கடத்திய பெண்கள் பற்றியும், தங்கள் வாழ்க்கையையே இழந்த பெண்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

 

ஹைமன் சிதையும் போது வலி ஏற்படுமா?

கன்னித்தன்மை உண்மையில் முக்கியமா இல்லையா என்பது பற்றிய கதை இதுவல்ல. அதற்கும் மேலாக பல பெண்கள் கொள்ளும் ஒரு நடைமுறை சிக்கலைப் பற்றிய கதை.

ஹைமன் சிதைவு என்பது மிகவும் வேதனையான அனுபவம் என்று பலர் நினைக்கிறார்கள். இதன் காரணமாக நிறைய பெண்கள் தங்கள் முதல் இரவைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள். இதன் விளைவாக சிலருக்கு இது ஒரு மன நோயாகக்கூட அமைந்திருக்கின்றது. அதனால்தான் பயம் காரணமாக திருமணமான பிறகும் உடலுறவு கொள்ளாத பல குடும்பங்கள் உள்ளன. ஆனால் அதிலும் மற்றொரு கதை இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஹைமனின் சிதைவு வலியற்றதாகவோ அல்லது மிகவும் வேதனையாகவோ இருக்கலாம். மிகவும் அரிதாக இது ஒரு சிலருக்கு இன்னும் கொஞ்சம் வேதனையை தரக்கூடியதாக இருக்கும். ஆனால் ஹைமென் சிதைவு காரணமாக வலி ஏற்படாது. ஒரு சிலருக்கு சிறிது வலி ஏற்படலாம். உடலுறவின்போது யோனி பகுதியுடன் தொடர்புடைய தசைகள் சுருங்குகின்றன, அதாவது உடலுறவுக்குத் தேவையான பாலியல் தளர்வு என்பது ஒரு வேதனையான அனுபவம் அல்ல. இந்த சந்தர்ப்பத்தில் கணவனுக்கும் முக்கிய பொறுப்புண்டு. மண்பாண்டக் கடைக்குள் பாய்ந்த மாட்டைப்போல நடந்து கொள்ளாமல், மனைவியை மிகுந்த அன்புடனும் ஆர்வத்துடனும் தயார்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.