ஜப்பானிய அனிமேஷன் என்பது சிலருக்கு ஒரு மதம் போன்றது. இலங்கையில் பலரும் இந்த ஜப்பானிய அனிமேஷன்களை விரும்புகிறார்கள். நீங்கள் ஜப்பானிய அனிமேஷனை விரும்பும் ஒருவாக இருந்தால், இந்த ஏழு திரைப்படங்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம். இதுவரை பார்க்காவிட்டால் நிச்சயமாக பாருங்கள்.
Grave of the Fireflies (1988)
ஜப்பானிய அனிமேஷனுக்கு என்று வரும்போது பலரின் மனதில் தோன்றும் முதல் விஷயம் இதுதான். இது கல்நெஞ்சக்காரன் என்று கூறக்கூடியவன் ஒருவனது இதயத்தை கூட கண்ணீரால் நிரப்பக்கூடிய ஒரு முக்கியமான கதை. 1988 க்குப் பிறகும், இந்தக் கதையை இன்னும் எம் கண்களில் கண்ணீர் பெருக்கத்துடன் காண முடியும். 1945 நாகசாகி குண்டுவெடிப்பால் அனாதையாக இருந்த இரண்டு குழந்தைகளின் துயர விதியை அடிப்படையாகக் கொண்ட படம் தான் இது.
Whisper of the Heart (1995)
இந்த படத்தையும் நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த படம் ஜப்பானிய அனிமேஷனின் இதயத்தைத் தொடும் தரத்தையும் கொண்டுள்ளது. இது மிகவும் எளிமையான காதல் கதை. ஆனால் இதிலிருந்து வரும் செய்தி சிறியதல்ல. எழுத்தாளராக விரும்பும் ஷிசுகு என்ற பெண்ணைச் சுற்றி வரும் கதை இது. கதையின் முடிவில் உங்களுக்கு ஒரு பெரிய செய்தி கிடைக்கும். இது கட்டாயம் பார்க்க வேண்டிய அனிமேஷன் திரைப்படமாகும்
The Red Turtle (2016)
இது எங்கள் பட்டியலில் உள்ள எல்லா திரைப்படங்களிலிருந்தும் வேறுபட்டது. ஏனெனில் இதில் உரையாடல் என்பது இருக்காது. வாழ்க்கையின் சாரத்தை அழகாக கற்பிக்கும் முன்மாதிரியான படம் இது. வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத விசித்திரமான அழகைக் கொண்ட படம். படத்தின் கதை ஒரு தீவில் தனிமையான மனிதனையும் ஒரு மர்மமான சிவப்பு ஆமையையும் சுற்றி வருகிறது. நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்.
The Secret World of Arrietty (2010)
இது ஒரு அசாதாரண கதை. அரிடி என்ற பெண்ணைச் சுற்றி நெய்த கதை. அவள் ஒரு சாதாரண பெண் அல்ல, ஒரு மனிதனின் வீட்டிற்குள் ரகசியமாக வசிக்கும் மிகச் சிறிய பெண். அந்த வீட்டில் வசிக்கும் சீன் என்ற சிறுவனுக்கும் இந்த சிறிய அரேட்டிக்கும் இடையிலான நட்போடு கதை வெளிப்படுகிறது. படம் முழுவதும் மந்திரம் போல உணரும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. படத்தின் வண்ண கலவை அருமையாக இருக்கும். ஆர்வமும் அன்பும் நிறைந்த அழகான கதை இது.
The Cat Returns (2002)
இந்த அற்புதமான படம் 2002 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. கதையில், ஒரு நாள் ஹரு என்ற 17 வயது சிறுமி ஒரு பூனையை காப்பாற்றுகிறாள் (வெறுமனே பூனையல்ல, பூனை இளவரசனை). மீட்புக்குப் பிறகு, பூனை அந்த சிறுமிக்கு நன்றி கூறுகிறது. ஆனால் அதன்பிறகு அந்த பெண் தான் எதிர்பார்க்காத பல தொல்லைகளை சந்திக்க நேரிடும். இந்த படம் முழுவதும் என்ன இருக்கிறது என்ற ஆர்வம் ஏற்படுத்துகிறது. ஜப்பானிய அனிமேஷனை விரும்புவோர் நிச்சயமாக இந்த படம் பார்க்க வேண்டும்.
Your Name (2016)
இது மிகவும் அழகான காதல் கதை. இது ஒரு அனிமேஷன் படமாக இருந்தாலும், அதில் இருக்கும் அன்பை நாம் இன்னும் நிறைய உணர்கிறோம். இந்த படம் பார்க்கும் போது சிலருக்கு சலிப்பு ஏற்படலாம். ஆனால் படம் முழுவதும் மிக அழகான காட்சிகள் உள்ளன. இது மிட்சுபா மற்றும் டாக்கியின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் பார்க்க வேண்டிய வித்தியாசமான காதல் கதை
Laputa Castle in the Sky (1986)
இது கொஞ்சம் பழைய திரைப்படம் தான். இது 1986 இல் வெளியிடப்பட்டது. யாரும் பார்க்காத புராணங்களில் வானத்தில் மிதக்கும் லபுடா நகரத்தைக் கண்டுபிடிப்பதில் சற்று வித்தியாசமான கதை. படத்தில் இருக்கும் இசையும் சிறந்தது. இந்த படத்தைப் பார்க்காத எவரும் இதைப் பார்க்குமாறு லைபீ தமிழ் வேண்டுகிறது.