பண்டைய இலங்கையில் சாதி பாகுபாடு மிகவும் வலுவாக இருந்ததென்பது இரகசியமானதொன்றல்ல. இருப்பினும் இது இன்று அரிதாகவே காணப்படுகிறது. குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மாத்திரம் இவ்விடயம் பெரிதாக பார்க்கப்படுகின்றது. எமது நாட்டில் பல பெயர்களில் சாதி உண்டு. மொழிக்கு மொழி பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்டும் இவை காணப்படுகின்றது. குறிப்பாக, எமது நாட்டில் தாழ்ந்த சாதியென கருதப்பட்ட ஒரு சாதியைப் பற்றி இன்று உங்களுக்கு சில தகவல்களை கொண்டுவந்துள்ளோம்.
ரோடி சாதி என்றால் என்ன?
ரோடி சாதி என்பது இலங்கை சிங்களவர் மத்தியில் மிகக் குறைந்த சாதியாகும். நீங்கள் ஏற்கனவே அதை அறிந்திருக்கலாம். இந்த சாதி மிகவும் இழிவுபடுத்தப்பட்டது. அந்த நேரத்தில் விஹாரைக்குள்கூட இந்த சாதியைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கவில்லை. உயர் குல பிரபுக்கள் எங்காவது செல்லும்போது இவர்களை எதிர்கொண்டால் அன்றைய நாள் முழுவதும் துரதிஷ்டம் என கருதினர். ரோடி சாதியில், நஹல்லா மற்றும் வன்னி என பல வகைகள் உள்ளன.
மரணத்தை விட பெரிய தண்டனை?
கடந்த காலத்தில் குற்றமிழைத்த பெண்கள் ரோடி குலத்திற்கு மாற்றப்பட்டமையானது, மரண தண்டனைக்கு சமமானதாக கருதப்பட்டது. உண்மையில், அந்த நேரத்தில் இந்த தண்டனையைப் பெற்ற பெண்கள் தங்கள் வாழ்க்கையை கூட இழந்தனர். இது ஒரு அவமானம் என்று அவர்கள் கருதினர்
ஆரம்பம்
ரோடி சாதியின் தோற்றம் குறித்து பல புராணக்கதைகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானவற்றை நான் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். மன்னர் பராக்ரமபாஹுவின் ஆட்சிக் காலத்தில், மான் இறைச்சிக்கு பற்றாக்குறை இருந்ததால் மன்னருக்கு இறைச்சி வழங்கும் நபர், மனித சடலத்தை இறைச்சியாக கொடுத்திருந்தார். ராஜா இதை அறியாமல் அந்த ருசிக்கு பழக்கமாகி அதை தொடர்ந்து சாப்பிட்டுள்ளார். ராஜாவின் மகள் ரத்னவள்ளியும் இது குறித்து அறிந்திருந்தாலும் அது குறித்து மன்னருக்கு தெரிவிக்கவில்லை. எப்படியோ பின்னர் மன்னர் அதை கண்டுபிடிக்கிறார். பின்னர் மன்னர் அவர்கள் அனைவரையும் தண்டித்து, இளவரசி ரத்னவள்ளியையும் ஒரு ரோடி சாதியைச் சேர்ந்த ஒருவருடன் பிணைக்கப்பட்டு பிச்சை எடுத்து வாழ்நாள் முழுவதும் வாழ உத்தரவிட்டார். நாம் முன்னர் குறிப்பிட்ட வன்னி அல்லது நவரத்னவள்ளி ரோடி சாதி தொடங்கியதும் இதன் மூலம் தான் என்று ஒரு புராணக்கதை கூறுகிறது. இது நஹல்லா ரோடி சாதியை விட சற்றே உயர்ந்த சாதியாக கருதப்படுகிறது.
ரோடினைப் பற்றிய கூடுதல் புனைவுகள்
ரோடினைப் பற்றி இன்னும் பல புராணக்கதைகள் உள்ளன. நாம் முன்பு படித்த இளவரசி ரத்னவள்ளி பற்றிய கதை பண்டைய எழுதப்பட்ட ஆதாரங்களில் குறிப்பிடப்படவில்லை. இளவரசர் சாலியாவின் காதல் கதையினாலும், அசோக்கமாலா என்ற ரோடி என்ற பெண்ணின் காதல் கதையினாலும் இளவரசர் சாலியா தனது அரசாட்சியை இழந்ததாக எங்கள் பழங்கால கதைகள் சில கூறுகின்றன. மற்றொரு ஆங்கில ஆளுநரான தோமஸ் மைட்லேண்டிற்கும் ரோடியின் பெண்ணுக்கும் இடையிலான லோவினாவின் காதல் லவ்னியா காதல் கதை இந்த சாதியைப் பற்றிய பிரபலமான கதையாகும். கூடுதலாக, ஜான் டாய்ல் எழுதிய புத்தகங்களில் ரோடி இனத்தைப் பற்றிய சில தகவல்கள் உள்ளன.
ஆடை
கடந்த காலங்களில், ரோடி சாதியினர் முக்காடு அணியவும் இடுப்புக்கு கீழே ஆடை அணியவும் தடை விதிக்கப்பட்டதாக பண்டைய வரலாறுகள் கூறுகின்றன. பின்னர், மிஷனரிகளின் வருகையுடன், ரோடின் கத்தோலிக்க மதத்திற்கு மாறினார். அதே நேரத்தில், அவர்களுக்கு ஆடைகளை அணிய உரிமை உண்டு.
பிரபலம்
ரோடி சாதியைச் சேர்ந்தவர்கள் வசியம், கைவினைத்திறன் மற்றும் சூனியம் ஆகியவற்றால் மிகவும் பிரபலமானவர்கள். எனவே அந்த நேரத்தில் மக்கள் ரோடியினருக்கு முன்னால் இருப்பது துரதிஷ்டவசமாக கருதப்பட்டது. புராணக்கதையின்படி, ஒரு நாள் ஆனந்த தேரர் யாசகம் கேட்டபோது ரோடி குல பெண் நீர் வழங்கினார். அந்த நீரைக் குடித்தபின், அவர் அதன் மூலம் வசியம் செய்யப்பட்டார். அதிலிருந்து விடுபட புத்தர் ஜலானந்தனா என்ற மந்திரத்தை ஓதியதாக கூறப்படுகின்றது.
ரோடி குலத்தினர் உயிருடன் உள்ளனரா?
இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இன்றும் உயிரோடு இருக்கிறார்கள். முன்பு குறிப்பிட்டபடி, அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கிலேயர்களின் வருகையுடன் அவர்களும் இப்போது எந்தவொரு தொழிலையும் சுதந்திரமாக தொடர அனுமதி பெற்றுள்ளனர். பின்னர் 1978 ஆம் ஆண்டில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் அவர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு மண்டலங்களில் நிறைய வேலைகள் கிடைத்தன. இப்போது அவர்கள் சாதாரண மனிதர்களைப் போல நம்மிடையே வாழ்கிறார்கள்.