இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வெஸ் நடனம்

இலங்கைக்கென சில தனித்துவமான கலாசார பண்புகள் உள்ளன. அவற்றில் மாறுவேட நடனமும் ஒன்றாகும். கண்டி பெரஹராவில் நடனமாடும் முகமூடி கலைஞர்களை பார்வையிட எம்மைப்போலவே வெளிநாட்டில் இருந்தும் பெருந்தொகையான மக்கள் வருகின்றனர். அவ்வாறாயின் அவை சிறப்பம்சம் கொண்டவை தானே? அதுபற்றி இன்று பார்ப்போம்.

 

1. முகமூடி நடனம் எமக்கானதா?

வெஸ் நடனம் இந்தியாவில் பேய்களை விரட்டுவதற்கு கையாண்ட முறைகளில் ஒன்றென கூறப்படுகின்றது. இது சில வழிகளில் மாறுபட்டு இன்று நம்மிடம் வெஸ் நடனம் என்ற முறையில் உள்ளது. இந்நடன உடைகளின் உள்ளாடைகள் குஜராத்தி மக்களால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகின்றன என பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர தெரிவித்துள்ளார். தென்னிந்திய தையம் நடனத்திலும் வெஸ் ஆடைகளை போன்றே பயன்படுத்துவதாக பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க கூறியுள்ளார். கேரளாவின் பாரம்பரிய நடன உடைகளை பார்க்கும்போது இலங்கையிலும் இதன் தாக்கத்தை காணலாம்.

 

2. வெஸ் நடனத்தில் பெண்கள்

பழங்காலத்தில் பெண்கள் கண்டிய வெஸ் நடனத்தில் முகமூடி அணிந்து நடனமாட விரும்பவில்லை. இப்போதெல்லாம் பெண்கள் முகமூடி அணிந்து நடனம் பயில்கின்றனர். ஆனால், கண்டிய நடனத்தில் முகமூடி நடனத்தை நிகழ்த்தும் வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை. மாறுவேட நடனத்தில் பெண்களின் ஆடைகளில் மாற்றங்கள் ஏற்பட்டே காணப்படுகின்றன. சமீபத்தில் திருமதி மிராண்டா ஹேமலதாவின் கலைக்கூடத்தில் இளம் பெண்கள் குழு முகமூடி அணிந்து நடனமாடினர்.

 

3. பாரம்பரியத்தை பாதுகாத்த நடனக்கலைஞர்

அக்காலத்தில் பல்வேறு சாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நடனங்களில் மலையக நடனமும் ஒன்றாகும். ஒவ்வொரு சாதி இனத்திற்கும் தனித்தனியாக கடமைகளும் காணப்பட்டன. 68 ஆண்டுகளாக கண்டி பெரஹெரவில் நடனமாடிய சூரசேனவின் ஆசிரியர் சூரம்ப தேரர்கூட ஒரு கண்டிய நடனக்கலைஞர் அல்லர். 1970 களில், சித்ரசேன டயஸ் கண்டியன் நடனத்தை அனைவரும் ஆடக்கூடிய கலையாக மாற்றினார். அது இல்லாதிருந்தால், சாதி அமைப்போடு கண்டியன் நடனமும் மறைந்திருக்கும்.

 

4. வெஸ் நடனம் இலங்கைக்கு வந்ததை பற்றிக் கூறும் புராணக்கதை

விஜய மன்னன் குவேனியை கைவிட்டதால் கோபமடைந்த குவேனி, விஜய மன்னனின் பரம்பரையை சபித்தார். அந்த சாபத்தால் மன்னர் பண்டுவாசுதேவர் நோய்வாய்ப்பட்டார். இந்த சாபத்தை நீக்க மலாயா நாட்டில் இருந்து கோலம்பா கங்காரி சடங்கை நடத்த மலாயா மன்னர் வந்தார். சடங்கு நடந்து முடிந்த பின், இலங்கையில் தங்கள் ஆடைகளை அணிந்து நடனமாட மன்னருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இப்படியே இந்நடனம் இலங்கைக்கு வந்தது.

 

5. வெஸ் நடன ஆபரணங்கள்

 

வெஸ் நடன ஆடைகளின் ஆபரணங்கள் நான்கு பகுதிகளாக காணப்படும். மொத்தம் அறுபது நான்கு நகைகள் இருக்குமென கூறப்பட்டாலும், உண்மையான மதிப்பீடுகளின் படி, முப்பத்திரண்டு என அறியப்படுகிறது. அவற்றிலும் இன்று சுமார் இருபது நகைகள் மட்டுமே உள்ளன. இது அரச ஆடை என்பதால் நடனக்கலைஞர்கள் இதனை அதிகம் மதிக்கின்றனர்.

 

6. மலையக நடனமும் பெரஹெரவும்

மலையக நடனத்திற்கு மிகப்பெரும் சந்தர்ப்பமாக இருப்பது கண்டி தலதா பெரஹராவின் போதே ஆகும். 1919 வரை நகரின் ஊர்வலத்தில் எந்தவொரு நடனமும் இடம்பெறவில்லை. பிற்காலத்தில் தியவதன நிலமே அவர்களினால் மலையக பெரஹராவில் வெஸ் நடனமும் சேர்க்கப்பட்டது. நித்தவளை, அமுனுகம, தத்பஜ்ஜல மற்றும் தலகஹகொட போன்ற நான்கு தலைமுறைகள் இதன் பாடகர்களாக உள்ளனர். கடந்த காலங்களில் கலயத்தன மற்றும் குருகுர்கள் இருந்தபோதிலும் இந்த நான்கு தலைமுறைகளும் அடிப்படையில் இன்னும் இருக்கின்றன.

 

7. வெஸ் நடன ஆடைகள்

நடனப்பயிற்சி பெற்ற அனைவரும் நடனமாட முடியும். ஆனால் வெஸ் நடனம் அப்படியல்ல. வெஸ் ஆடை அணிந்து வெஸ் முகமூடி அணிந்து ஆடுவது நடனக்கலைஞர்களுக்கு கிடைக்கும் சிறந்த கௌரவமாகும். முன்னைய காலத்தில், சீடராக தேர்ச்சி பெற்றவர்களே அவ்வாறு ஆட முடியும். இந்த சடங்குகள் மன்னர்களின் மரபுகளை இன்னும் பாதுகாத்த வண்ணம் உள்ளன. அவற்றை ஒரு பாரம்பரியமாக பாதுகாக்கின்றனர்.

 

வெஸ் நடனங்களை போல பாரம்பரியம் மிக்க நடனங்கள் பற்றிய தகவல்களை அலுமாரியில் சேமித்து வைத்தால் மட்டும் போதாது. அதை வெளிக்கொணர வேண்டும். அதன் மூலம் நம்நாட்டு மரபுகளையும் பழைய திறன்களையும் புதிய தலைமுறைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் இந்த பொறுப்புண்டு.